தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-7556

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அபூ ஜம்ரா அள்ளுபஈ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் (அப்துல் கைஸ் குலத்தாரின் நிகழ்ச்சி பற்றிக்) கேட்டேன். அவர்கள் சொன்னார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழுவினர் வந்து, ‘எங்களுக்கும் உங்களுக்குமிடையே ‘முளர்’ குலத்து இணைவைப்பாளர்கள் (தடையாக) உள்ளனர். எனவே, (போர் தடை செய்யப்பட்ட) புனித மாதங்களில் மட்டும் தான் நாங்கள் உங்களை வந்தடைய முடியும். எனவே, சில கட்டளைகளை எங்களுக்கு அளியுங்கள். நாங்கள் அவற்றின் படி செயல்பட்டால் சொர்க்கம் செல்லவும், எங்களுக்குப் பின்னால் இருப்பவர்களை அவற்றின் படி நடக்க நாங்கள் அழைக்கவும் ஏதுவாக இருக்கும். (அத்தகைய கட்டளைகள் சிலவற்றை நீங்கள் எங்களுக்கு இடுங்கள்)’ என்றார்கள்.

நபி(ஸல்) அவர்கள், ‘நான் உங்களுக்கு நான் விஷயங்களைக் கட்டளையிடுகிறேன். நான்கு விஷயங்களைத் தடை செய்கிறேன். (நான் கட்டளையிடும் நான்கு விஷயங்கள் இவைதாம்:) அல்லாஹ்வை நம்பிக்கை (ஈமான்) கொள்ளும்படி உங்களுக்கு நான் கட்டளையிடுகிறேன். அல்லாஹ்வை நம்பிக்கை (ஈமான்) கொள்வது என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? லாஇலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை) என்று சான்று பகர்வதும் தொழுகையை நிலைநாட்டுவதும் ஸகாத் கொடுப்பதும் போர்ச் செல்வங்களில் ஐந்தில் ஒரு பங்கை (அரசு பொது நிதிக்கு) வழங்குவதும் ஆகும்.

நான் நான்கு விஷயங்களை உங்களுக்குத் தடை செய்கிறேன். (மது பாத்திரங்களான) சுரைக்காய்க் குடுவை, (பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்பட்ட) மரப் பீப்பாய், தார் பூசப்பட்ட பாத்திரங்கள் மற்றும் மண் சாடிகளில் நீங்கள் (எதையும்) அருந்தாதீர்கள்’ என்றார்கள்.195

Book :97

(புகாரி: 7556)

حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، حَدَّثَنَا قُرَّةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا أَبُو جَمْرَةَ الضُّبَعِيُّ، قُلْتُ لِابْنِ عَبَّاسٍ: فَقَالَ

قَدِمَ وَفْدُ عَبْدِ القَيْسِ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالُوا: إِنَّ بَيْنَنَا وَبَيْنَكَ المُشْرِكِينَ مِنْ مُضَرَ، وَإِنَّا لاَ نَصِلُ إِلَيْكَ إِلَّا فِي أَشْهُرٍ حُرُمٍ، فَمُرْنَا بِجُمَلٍ مِنَ الأَمْرِ إِنْ عَمِلْنَا بِهِ دَخَلْنَا الجَنَّةَ، وَنَدْعُو إِلَيْهَا مَنْ وَرَاءَنَا، قَالَ: ” آمُرُكُمْ بِأَرْبَعٍ وَأَنْهَاكُمْ عَنْ أَرْبَعٍ: آمُرُكُمْ بِالإِيمَانِ بِاللَّهِ، وَهَلْ تَدْرُونَ مَا الإِيمَانُ بِاللَّهِ؟ شَهَادَةُ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَإِقَامُ الصَّلاَةِ، وَإِيتَاءُ الزَّكَاةِ، وَتُعْطُوا مِنَ المَغْنَمِ الخُمُسَ، وَأَنْهَاكُمْ عَنْ أَرْبَعٍ: لاَ تَشْرَبُوا فِي الدُّبَّاءِ، وَالنَّقِيرِ، وَالظُّرُوفِ المُزَفَّتَةِ، وَالحَنْتَمَةِ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.