பாடம் : 101
இஷாத் தொழுகையில் சஜ்தா (வசனமுள்ள) அத்தியாயத்தை ஓதுவது.
அபூ ராஃபிவு கூறினார்:
அபூ ஹுரைரா (ரலி) உடன் நான் இஷாத் தொழுதபோது ‘இதஸ் ஸமாஉன் ஷக்கத்’ என்ற அத்தியாயத்தை ஓதி (அதில் ஸஜ்தாவுடைய இடம் வந்ததும்) ஸஜ்தாச் செய்தார்கள். இது பற்றி அவர்களிடம் நான் கேட்டபோது, ‘நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (இந்த அத்தியாயத்திற்காக) நான் ஸஜ்தாச் செய்திருக்கிறேன். (மறுமையில்) அவர்களைச் சந்திக்கும் வரை (அதாவது மரணிக்கம் வரை) நான் அதை ஓதி ஸஜ்தாச் செய்து கொண்டுதானிருப்பேன்’ என்று கூறினார்கள்.
Book : 10
بَابُ القِرَاءَةِ فِي العِشَاءِ بِالسَّجْدَةِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنِي التَّيْمِيُّ، عَنْ بَكْرٍ، عَنْ أَبِي رَافِعٍ، قَالَ
صَلَّيْتُ مَعَ أَبِي هُرَيْرَةَ العَتَمَةَ، فَقَرَأَ: إِذَا السَّمَاءُ انْشَقَّتْ، فَسَجَدَ، فَقُلْتُ: مَا هَذِهِ؟ قَالَ: «سَجَدْتُ بِهَا خَلْفَ أَبِي القَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلاَ أَزَالُ أَسْجُدُ بِهَا حَتَّى أَلْقَاهُ»
சமீப விமர்சனங்கள்