பாடம் : 103 (இஷாத் தொழுகையின்) முதலிரண்டு ரக்அத்களில் நீண்ட நேரம் ஓத வேண்டும். இறுதி இரண்டு ரக்அத்களில் சுருக்கமாக ஓத வேண்டும்.
ஜாபிர் இப்னு ஸமுரா(ரலி) அறிவித்தார்.
‘தொழுகை நடத்துவது உட்பட எல்லா விஷயங்களிலும் மக்கள் உம்மைப் பற்றிப் புகார் செய்துள்ளனர்’ என்று உமர்(ரலி) ஸஃது(ரலி) அவர்களிடம் கூறினார்கள். அதற்கு ஸஃது(ரலி) ‘முதலிரண்டு ரக்அத்களில் நீளமாகவும் பிந்திய இரண்டு ரக்அத்களில் சுருக்கமாகவும் ஓதுவேன். நபி(ஸல்) அவர்களின் தொழுகையை அப்படியே பின்பற்றுவதில் நான் எந்தக் குறையும் செய்யவில்லை’ என்றார்கள். இதைக் கேட்ட உமர்(ரலி) ‘நாமும் உம்மைப் பற்றி அவ்வாறே எண்ணுகிறோம்’ என்றார்கள்.
Book : 10
بَابُ يُطَوِّلُ فِي الأُولَيَيْنِ وَيَحْذِفُ فِي الأُخْرَيَيْنِ
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي عَوْنٍ مُحَمَّدِ بْنِ عُبَيْدِ اللَّهِ الثَّقَفِيِّ، قَالَ: سَمِعْتُ جَابِرَ بْنَ سَمُرَةَ، قَالَ
قَالَ عُمَرُ لِسَعْدٍ: لَقَدْ شَكَوْكَ فِي كُلِّ شَيْءٍ حَتَّى الصَّلاَةِ، قَالَ: «أَمَّا أَنَا، فَأَمُدُّ فِي الأُولَيَيْنِ وَأَحْذِفُ فِي الأُخْرَيَيْنِ، وَلاَ آلُو مَا اقْتَدَيْتُ بِهِ مِنْ صَلاَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ» قَالَ: صَدَقْتَ ذَاكَ الظَّنُّ بِكَ أَوْ ظَنِّي بِكَ
சமீப விமர்சனங்கள்