தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-775

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 106 ஒரே ரக்அத்தில் இரண்டு அத்தியாயங்களை ஓதுவதும்,

அத்தியாயத்தின் கடைசி வசனங்களை மட்டும் ஓதுவதும், அத்தியாயங்களை முன் பின்னாக ஓதுவதும், ஓர் அத்தியாயத்தின் ஆரம்ப வசனங்களை மட்டும் ஓதுவதும் (செல்லுமா?)

நபி (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையில் அல்முஃமினூன்’ (எனும் 23ஆவது) அத்தியா யத்தை ஓதித் தொழுவித்தார்கள். மூசா (அலை), ஹாரூன் (அலை) பற்றிக் குறிப்பிடும் வசனம்’ (23:45) அல்லது ஈசா (அலை) அவர்கள் பற்றிக் கூறப்படும் வசனம் (23:50) வந்ததும் நபி (ஸல்) அவர்களுக்கு இருமல் ஏற்பட்டது. உடனே ருகூஉ செய்துவிட்டார்கள் என அப்துல்லாஹ் பின் சாயிப் (ரலி) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படுகிறது.

உமர் (ரலி) அவர்கள் (தொழுகையின்) முதல் ரக்அத்தில் அல்பகரா (2ஆவது) அத்தியாயத்திலிருந்து நூற்றி இருபது வசனங்களை ஓதினார்கள்; இரண்டாம் ரக்அத்தில் (நூறுக்கும் குறைவான வசனங்களுடைய) அல்மஸானீ’ அத்தியாயங்களில் ஒன்றை ஓதினார்கள்.

அஹ்னஃப் பின் கைஸ் (ரலி) அவர்கள் (சுப்ஹுத் தொழுகையின்) முதல் ரக்அத்தில் அல் கஹ்ஃப்’ (எனும்18ஆவது) அத்தியாயத்தையும், இரண்டாம் ரக்அத்தில் யூசுஃப்’ (12ஆவது) அத்தியாயத்தை’ அல்லது யூனுஸ்’ (10ஆவது) அத்தியாயத்தை ஓதினார்கள். உமர் (ரலி) அவர்கள் இவ்விரண்டு அத்தியாயங்களையும் ஓதித் தொழுத போது அவர்களுக்குப் பின்னே தாமும் தொழுததாகவும் அஹ்னஃப் (ரலி) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் (தொழுகையின் முதல் ரக்அத்தில்) அல்அன்ஃபால்’ (8ஆவது) அத்தியாயத்தில் நாற்பது வசனங்களையும் இரண்டாம் ரக்அத்தில் நடுத்தர (அல்முஃபஸ்ஸல்) அத்தியாயங்களில் ஒன்றையும் ஓதினார்கள். இரண்டு ரக்அத்களிலும் ஒரே அத்தியாயத்தை ஒருவர் ஓதுவது அல்லது ஓர் அத்தியாயத்தை (இரண்டாகப் பிரித்து) இரண்டு ரக்அத்களிலும் ஓதுவது பற்றி கத்தாதா (ரலி) அவர்கள் குறிப்பிடுகையில் எல்லாம் அல்லாஹ்வின் வேதமே’ என்று கூறினார்கள். 

 அபூ வாயில்(ரலி) அறிவித்தார்.

ஒருவர் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் வந்து ‘நான் முஃபஸ்ஸல்’ அத்தியாயங்களை ஒரு ரக்அத்தில் ஓதினேன்’ என்றார். (முஃபஸ்ஸல் என்பது ‘காஃப்’ அத்தியாயம் முதல் குர்ஆனின் கடைசி வரை உள்ள அத்தியாயங்களாகும். இவ்வளவு அத்தியாயங்களாகும். இவ்வளவு அத்தியாயங்களையும் ஒரே ரக்அத்தில் ஓதியதாகக் கூறிவிட்டு இது சரியா? என்று அவர் கேள்வி கேட்டார்.)

‘கவிதைகளைப் படிப்பது போல் அவசரம் அவசரமாகப் படித்தீரா? நபி(ஸல்) அவர்கள் ‘முஃபஸ்ஸல்’ அத்தியாயங்களில் ஒரே மாதிரியான அளவில் அமைந்த இரண்டிரண்டு அத்தியாயங்களை ஒரே ரக்அத்தில் ஒதியதை நான் அறிந்துள்ளேன்’ என்று இப்னு மஸ்வூத்(ரலி) கூறிவிட்டு நபி(ஸல்) அவர்கள் சேர்த்து ஓதிய முஃபஸ்ஸல் அத்தியாயங்களில் இருபது அத்தியாயங்களையும் குறிப்பிட்டார்கள்.
Book : 10

(புகாரி: 775)

بَابُ الجَمْعِ بَيْنَ السُّورَتَيْنِ فِي الرَّكْعَةِ

وَالقِرَاءَةِ بِالخَوَاتِيمِ، وَبِسُورَةٍ قَبْلَ سُورَةٍ، وَبِأَوَّلِ سُورَةٍ وَيُذْكَرُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ السَّائِبِ، «قَرَأَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ المُؤْمِنُونَ فِي الصُّبْحِ، حَتَّى إِذَا جَاءَ ذِكْرُ مُوسَى، وَهَارُونَ – أَوْ ذِكْرُ عِيسَى – أَخَذَتْهُ سَعْلَةٌ فَرَكَعَ» وَقَرَأَ عُمَرُ: فِي الرَّكْعَةِ الأُولَى بِمِائَةٍ وَعِشْرِينَ آيَةً مِنَ البَقَرَةِ، وَفِي الثَّانِيَةِ بِسُورَةٍ مِنَ المَثَانِي وَقَرَأَ الأَحْنَفُ: بِالكَهْفِ فِي الأُولَى، وَفِي الثَّانِيَةِ بِيُوسُفَ –  أَوْ يُونُسَ – وَذَكَرَ أَنَّهُ صَلَّى مَعَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ الصُّبْحَ بِهِمَا وَقَرَأَ ابْنُ مَسْعُودٍ: بِأَرْبَعِينَ آيَةً مِنَ الأَنْفَالِ، وَفِي الثَّانِيَةِ بِسُورَةٍ مِنَ المُفَصَّلِ وَقَالَ قَتَادَةُ: «فِيمَنْ يَقْرَأُ سُورَةً وَاحِدَةً فِي رَكْعَتَيْنِ أَوْ يُرَدِّدُ سُورَةً وَاحِدَةً فِي رَكْعَتَيْنِ كُلٌّ كِتَابُ اللَّهِ»

 

(இந்த தலைப்பு பாடத்தில் தமிழ் மொழியாக்கத்தில் இல்லாதவை)

وَقَالَ عُبَيْدُ اللَّهِ: عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، كَانَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ يَؤُمُّهُمْ فِي مَسْجِدِ قُبَاءٍ، وَكَانَ كُلَّمَا افْتَتَحَ سُورَةً يَقْرَأُ بِهَا لَهُمْ فِي الصَّلاَةِ مِمَّا يَقْرَأُ بِهِ افْتَتَحَ: بِقُلْ هُوَ اللَّهُ أَحَدٌ حَتَّى يَفْرُغَ مِنْهَا، ثُمَّ يَقْرَأُ سُورَةً أُخْرَى مَعَهَا، وَكَانَ يَصْنَعُ ذَلِكَ فِي كُلِّ رَكْعَةٍ، فَكَلَّمَهُ أَصْحَابُهُ، فَقَالُوا: إِنَّكَ تَفْتَتِحُ بِهَذِهِ السُّورَةِ، ثُمَّ لاَ تَرَى أَنَّهَا تُجْزِئُكَ حَتَّى تَقْرَأَ بِأُخْرَى، فَإِمَّا تَقْرَأُ بِهَا وَإِمَّا أَنْ تَدَعَهَا، وَتَقْرَأَ بِأُخْرَى فَقَالَ: مَا أَنَا بِتَارِكِهَا، إِنْ أَحْبَبْتُمْ أَنْ أَؤُمَّكُمْ بِذَلِكَ فَعَلْتُ، وَإِنْ كَرِهْتُمْ تَرَكْتُكُمْ، وَكَانُوا يَرَوْنَ أَنَّهُ مِنْ أَفْضَلِهِمْ، وَكَرِهُوا أَنْ يَؤُمَّهُمْ غَيْرُهُ، فَلَمَّا أَتَاهُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرُوهُ الخَبَرَ، فَقَالَ: «يَا فُلاَنُ، مَا يَمْنَعُكَ أَنْ تَفْعَلَ مَا يَأْمُرُكَ بِهِ أَصْحَابُكَ، وَمَا يَحْمِلُكَ عَلَى لُزُومِ هَذِهِ السُّورَةِ فِي كُلِّ رَكْعَةٍ» فَقَالَ: إِنِّي أُحِبُّهَا، فَقَالَ: «حُبُّكَ إِيَّاهَا أَدْخَلَكَ الجَنَّةَ»

حَدَّثَنَا آدَمُ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، قَالَ: سَمِعْتُ أَبَا وَائِلٍ، قَالَ

جَاءَ رَجُلٌ إِلَى ابْنِ مَسْعُودٍ، فَقَالَ: قَرَأْتُ المُفَصَّلَ اللَّيْلَةَ فِي رَكْعَةٍ، فَقَالَ: «هَذًّا كَهَذِّ الشِّعْرِ، لَقَدْ عَرَفْتُ النَّظَائِرَ الَّتِي كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرُنُ بَيْنَهُنَّ، فَذَكَرَ عِشْرِينَ سُورَةً مِنَ المُفَصَّلِ، سُورَتَيْنِ فِي كُلِّ رَكْعَةٍ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.