பாடம்: 133
ஏழு உறுப்புகள் தரையில் படுமாறு சிரவணக்கம் (ஸஜ்தா) செய்தல்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நெற்றி, இரண்டு கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரண்டு கால்கள் ஆகிய ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு ஸஜ்தாச் செய்யும்படியும், (ஸஜ்தாவில்) தலைமுடியையோ ஆடையையோ (தரையில் படாதவாறு) பிடிக்கக் கூடாது என்றும் நபி (ஸல்) அவர்கள் (அல்லாஹ்வால்) கட்டளையிடப்பட்டார்கள்.
அத்தியாயம்: 10
(புகாரி: 809)بَابُ السُّجُودِ عَلَى سَبْعَةِ أَعْظُمٍ
حَدَّثَنَا قَبِيصَةُ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ
أُمِرَ النَّبِيُّ صلّى الله عليه وسلم أَنْ يَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْضَاءٍ، وَلاَ يَكُفَّ شَعَرًا وَلاَ ثَوْبًا: الجَبْهَةِ، وَاليَدَيْنِ، وَالرُّكْبَتَيْنِ، وَالرِّجْلَيْنِ
Bukhari-Tamil-809.
Bukhari-TamilMisc-809.
Bukhari-Shamila-809.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
இந்தச் செய்தியின் விளக்கம்:
இந்தச் செய்தியில் உள்ள வாக்கியத்திற்கு சிலர், “தலைமுடியையோ அல்லது ஆடையையோ (தொழுகையின் போது) சுருட்டிக் கொள்ளக்கூடாது” என்று பொருள் செய்து இதன்படி தொழுகையில் முழுக்கை சட்டையை சுருட்டக்கூடாது, மடிக்கக்கூடாது என்று கூறுகின்றனர். ஆனால் இந்தச் செய்தியை நபி (ஸல்) அவர்கள் ஏன் கூறினார்கள்; எப்போது கூறினார்கள் என்று பார்க்கும்போது இந்தக் கருத்து தவறு என்று தெரிந்துக் கொள்ளலாம்.
ஏழு உறுப்புக்கள் தரையில் பட வேண்டும் என்ற கட்டளையை விளக்கும் போது தான் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர். அதிகமாக முடி வைத்திருப்பவர்கள் ஸஜ்தா செய்யும் போது நெற்றி தரையில் படுவதை முடி தடுக்கும். அப்படி தடுக்காதவாறு முடிகளை மேல் நோக்கி தள்ளிக் கொள்ள வேண்டும்.
அது போல் அன்றைய மக்களின் ஆடைகள் பெரிய போர்வையாகத் தான் இருந்தது. சஜ்தா செய்யும் போது அந்த போர்வையின் முனைகள் நெற்றியும் கைகளும் தரையில் படுவதைத் தடுத்து விடும். அப்படி தடுக்காமல் நேரடியாக நெற்றியும் கையும் தரையில் படுமாறு ஆடையை தள்ளி விட்டுக் கொள்ள வேண்டும். இதைத் தான் இந்த ஹதீஸ் கூறுகிறதே தவிர கையில் உள்ள ஆடையைச் சுருட்டி விடுமாறு கூறவில்லை.
மேலும் விபரத்திற்கு கீழ்க்காணும் ஆக்கங்களைப் பார்க்கவும்.
1 . வீடியோ முழுக் கைச் சட்டையின் கைப் பகுதியை மடித்து விடக் கூடாதா?
2 . கட்டுரை அரைக்கை சட்டை டீஷர்ட் பணியன் அணிந்து தொழலாமா?
1 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- தாவூஸ் —> இப்னு அப்பாஸ் (ரலி)
பார்க்க: … புகாரி-809, 810, 812, 815, 816, முஸ்லிம்-844, 845, 846, 847, 848, இப்னு மாஜா-883, 884, 1040, அபூதாவூத்-889, 890, திர்மிதீ-273, நஸாயீ-1093, 1096, 1097, 1098, 1113, 1115, …
சமீப விமர்சனங்கள்