தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-84

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 24 கையால் அல்லது தலையால் சைகை செய்து தீர்ப்பு வழங்குதல். 

 ‘நபி(ஸல்) அவர்களிடம் ஹஜ்ஜின்போது பல கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது ‘நான் கல்லெறிவதற்கு முன்பே குர்பானி கொடுத்து விட்டேன்’ என்று ஒருவர் கேட்டார். நபி(ஸல்) அவர்கள் ‘பரவாயில்லை’ எனத் தம் கையால் சைகை செய்தார்கள்.

மற்றொருவர், ‘பலியிடு முன் தலை முடியைக் களைந்து விட்டேன்’ என்றார். நபி அவர்கள் ‘பரவாயில்லை’ எனத் தம் கையால் சைகை செய்தார்கள்’ என இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.
Book : 3

(புகாரி: 84)

بَابُ مَنْ أَجَابَ الفُتْيَا بِإِشَارَةِ اليَدِ وَالرَّأْسِ

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا وُهَيْبٌ، قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ فِي حَجَّتِهِ فَقَالَ: ذَبَحْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ؟ فَأَوْمَأَ بِيَدِهِ،

قَالَ: «وَلاَ حَرَجَ» قَالَ: حَلَقْتُ قَبْلَ أَنْ أَذْبَحَ؟

فَأَوْمَأَ بِيَدِهِ: «وَلاَ حَرَجَ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.