தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-848

A- A+


ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

பாடம் : 157

சலாம் கொடுத்த பின் இமாம் தொழுத இடத்திலேயே இருப்பது. 

 நாஃபிவு (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) கடமையான தொழுகையைத் தொழுத இடத்திலேயே (ஸுன்னத்தான தொழுகைகளைத்) தொழுபவர்களாக இருந்தார். அபூபக்ர் (ரலி) அவர்களின் பேரர் காஸிம் இப்னு முஹம்மத் இவ்வாறு தொழுதுள்ளார்.

(புகாரீ இமாம் கூறுகிறார்)

‘இமாம் கடமையான தொழுகையைத் தொழுத இடத்தில் உபரியான தொழுகைகளைத் தொழக் கூடாது’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவித்ததாக கூறப்படுகிறது. அது ஆதாரப்பூர்வமானது அன்று.

அத்தியாயம் : 10

(புகாரி: 848)

بَابُ مُكْثِ الإِمَامِ فِي مُصَلَّاهُ بَعْدَ السَّلاَمِ

وَقَالَ لَنَا آدَمُ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، قَالَ:

«يُصَلِّي فِي مَكَانِهِ الَّذِي صَلَّى فِيهِ الفَرِيضَةَ وَفَعَلَهُ القَاسِمُ»

وَيُذْكَرُ عَنْ أَبِي هُرَيْرَةَ، رَفَعَهُ «لاَ يَتَطَوَّعُ الإِمَامُ فِي مَكَانِهِ وَلَمْ يَصِحَّ»


Bukhari-Tamil-848.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-848.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.