தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-902

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 15 எவ்வளவு தொலைவிலிருந்தால் ஜுமுஆத் தொழுகைக்கு வரவேண்டும்? யார்மீது (ஜுமுஆத் தொழுகை) கடமையாகும்?

ஏனெனில் அல்லாஹ் கூறுகின்றான்: (இறை நம்பிக்கை கொண்டவர்களே!) ஜுமுஆவுடைய நாளில் தொழுகைக்காக (நீங்கள்) அழைக் கப்பட்டால், வியாபாரத்தை விட்டு அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிகளுக்கு) விரைந்து செல்லுங்கள். (63:9)

ஜுமுஆத் தொழுகை நடைபெறும் ஊரில் நீ இருந்து அந்த ஜுமுஆ நாளில் தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டால் அதில் கட்டாயம் நீ கலந்து கொள்ள வேண்டும். பாங்கு சப்தத்தை நீ கேட்டாலும் சரி,அதை நீ கேட்காவிட்டாலும் சரி என அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அனஸ் (ரலி) அவர்கள் சில நாட்களில் தமது மாளிகையில் (தங்கி) இருக்கும் போது (தம்முடன் இருப்பவர்களுக்கு) ஜுமுஆத் தொழுவிப்பார்கள். சில நாட்களில் ஜுமுஆத் தொழுவிக்க மாட்டார்கள். அனஸ் (ரலி) அவர்களது அந்த மாளிகை (பஸ்ரா நகரிலிருந்து) இரண்டு பர்ஸக் (சுமார் ஆறு மைல்) தொலைவிலிருந்த ஸாவியா எனும் இடத்தில் இருந்தது. 

 ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

(மதீனாவுக்கு நான்கு மைல் தொலைவிலுள்ள) மேட்டுப் பகுதியிலிருந்தும் தங்கள் இல்லங்களிலிருந்தும் மக்கள் ஜும்ஆ நாளில் முறை வைத்து (மதீனாவுக்கு) வந்து கொண்டிருந்தார்கள். புழுதிகளில் அவர்கள் நடந்து வருவதால் அவர்கள் மேல் புழுதியும் வியர்வையும் படிந்து விடும். அவர்களிடமிருந்து வியர்வை வெளியேறும். (இந்த நிலையில்) அவர்களில் ஒருவர் நபி(ஸல்) அவர்கள் என்னுடனிருக்கும்போது வந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘இந்த தினத்துக்காக நீங்கள் தூய்மையாகிக் கொள்ளக் கூடாதா? என்று கேட்டார்கள்.
Book : 11

(புகாரி: 902)

بَابُ مِنْ أَيْنَ تُؤْتَى الجُمُعَةُ، وَعَلَى مَنْ تَجِبُ

لِقَوْلِ اللَّهِ جَلَّ وَعَزَّ: {إِذَا نُودِيَ لِلصَّلاَةِ مِنْ يَوْمِ الجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ} [الجمعة: 9]

وَقَالَ عَطَاءٌ: «إِذَا كُنْتَ فِي قَرْيَةٍ جَامِعَةٍ فَنُودِيَ بِالصَّلاَةِ مِنْ يَوْمِ الجُمُعَةِ، فَحَقٌّ عَلَيْكَ أَنْ تَشْهَدَهَا سَمِعْتَ النِّدَاءَ أَوْ لَمْ تَسْمَعْهُ»

وَكَانَ أَنَسٌ رَضِيَ اللَّهُ عَنْهُ، «فِي قَصْرِهِ أَحْيَانًا يُجَمِّعُ وَأَحْيَانًا لاَ يُجَمِّعُ وَهُوَ بِالزَّاوِيَةِ عَلَى فَرْسَخَيْنِ»

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الحَارِثِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي جَعْفَرٍ: أَنَّ مُحَمَّدَ بْنَ جَعْفَرِ بْنِ الزُّبَيْرِ، حَدَّثَهُ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ

كَانَ النَّاسُ يَنْتَابُونَ يَوْمَ الجُمُعَةِ مِنْ مَنَازِلِهِمْ وَالعَوَالِيِّ، فَيَأْتُونَ فِي الغُبَارِ يُصِيبُهُمُ الغُبَارُ وَالعَرَقُ، فَيَخْرُجُ مِنْهُمُ العَرَقُ، فَأَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنْسَانٌ مِنْهُمْ وَهُوَ  عِنْدِي، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ أَنَّكُمْ تَطَهَّرْتُمْ لِيَوْمِكُمْ هَذَا»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.