தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-945

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 4

(எதிரிகளின்) கோட்டைகளை வெற்றி கொள்ளும் வாய்ப்பு உள்ளபோதும் எதிரிகளை (களத்தில்) சந்திக்கும்போதும் தொழுதல்.

அவ்ஸாயீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: வெற்றி வாய்ப்புள்ள நிலையில் முஸ்லிம் வீரர்கள் தொழ இயலாவிட்டால், ஒவ்வொருவரும் தனித் தனியாகச் சைகை மூலம் தொழ வேண்டும். சைகை மூலமும் தொழ முடியாவிட்டால் போர் முடியும்வரை, அல்லது அச்சமற்ற நிலையை அடையும்வரை அவர்கள் தொழுகையைத் தாமதப்படுத்துவார்கள்; பின்னர் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். (இரண்டு ரக்அத்கள் தொழக்கூட) அவர்களுக்கு இயலாவிட்டால் ஒரு ருகூஉம் இரண்டு சஜ்தாக்களும் செய்வார்கள்; அதற்கும் முடியாவிட்டால், தக்பீர் கூறுவது மட்டும் போதுமாகாது. அச்சமற்ற நிலை உருவாகும்வரை தொழுகையை அவர்கள் தாமதப்படுத்தலாம்.4 இவ்வாறே மக்ஹூல் (ரஹ்) அவர்களும் கூறுகிறார்கள்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (ஈரானிலுள்ள) ‘துஸ்தர்’ எனும் கோட் டையை ஃபஜ்ர் வெளுக்கும் நேரத்தில் வெற்றி கொள்ளும் நிலை இருந்தது. அப்போது நானும் இருந்தேன். போர்த் தீ கடுமையாக மூண்டது. மக்களால் தொழ முடியவில்லை. எனவே, நாங்கள் (ஃபஜ்ர் தொழுகையை) சூரியன் மேலே உயர்ந்த பிறகே தொழுதோம். அத்தொழுகையை நாங்கள் அபூமூசா (ரலி) அவர்களுடன் தொழுதோம். (அந்தப் போரில்) எங்களுக்கு வெற்றி கிடைத்தது. அந்தத் தொழுகைக்குப் பகரமாக இவ்வுலகமும் அதிலுள்ளவையும் (எனக்கு வழங்கப்பட்டாலும் அவை) எனக்கு மகிழ்ச்சியளிக்காது.5

 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அகழ்ப் போரின்போது உமர் (ரலி) அவர்கள் குறைஷி இறைமறுப்பாளர்களை ஏசிக்கொண்டே வந்து, “அல்லாஹ்வின் தூதரே! சூரியன் மறையும் நேரம் நெருங்கி யும் என்னால் அஸ்ர் தொழுகையைத் தொழ முடியாமற் போய்விட்டது” என்று கூறினார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! நானும் தான் இதுவரை அத்தொழுகையைத் தொழவில்லை” என்று சொன்னார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் ‘புத்ஹான்’ எனும் பள்ளத்தாக்கில் இறங்கி அங்கத் தூய்மை (உளூ) செய்துவிட்டு, சூரியன் மறைந்தபின் அஸ்ர் தொழுகையைத் தொழு(வித்)தார்கள். பின்னர் மஃக்ரிப் தொழுகையைத் தொழு(வித்)தார்கள்.

அத்தியாயம் : 12

(புகாரி: 945)

بَابُ الصَّلاَةِ عِنْدَ مُنَاهَضَةِ الحُصُونِ وَلِقَاءِ العَدُوِّ

وَقَالَ الأَوْزَاعِيُّ: «إِنْ كَانَ تَهَيَّأَ الفَتْحُ وَلَمْ يَقْدِرُوا عَلَى الصَّلاَةِ صَلَّوْا إِيمَاءً كُلُّ امْرِئٍ لِنَفْسِهِ، فَإِنْ لَمْ يَقْدِرُوا عَلَى الإِيمَاءِ أَخَّرُوا الصَّلاَةَ حَتَّى يَنْكَشِفَ القِتَالُ أَوْ يَأْمَنُوا، فَيُصَلُّوا رَكْعَتَيْنِ، فَإِنْ لَمْ يَقْدِرُوا صَلَّوْا رَكْعَةً وَسَجْدَتَيْنِ، فَإِنْ لَمْ يَقْدِرُوا لاَ يُجْزِئُهُمُ التَّكْبِيرُ، وَيُؤَخِّرُوهَا حَتَّى يَأْمَنُوا» وَبِهِ قَالَ مَكْحُولٌ

وَقَالَ أَنَسُ بْنُ مَالِكٍ:  حَضَرْتُ عِنْدَ مُنَاهَضَةِ حِصْنِ تُسْتَرَ عِنْدَ إِضَاءَةِ الفَجْرِ، وَاشْتَدَّ اشْتِعَالُ القِتَالِ، فَلَمْ يَقْدِرُوا عَلَى الصَّلاَةِ، فَلَمْ نُصَلِّ إِلَّا بَعْدَ ارْتِفَاعِ النَّهَارِ، فَصَلَّيْنَاهَا وَنَحْنُ مَعَ أَبِي مُوسَى فَفُتِحَ لَنَا، وَقَالَ أَنَسُ بْنُ مَالِكٍ: وَمَا يَسُرُّنِي بِتِلْكَ الصَّلاَةِ الدُّنْيَا وَمَا فِيهَا

حَدَّثَنَا يَحْيَى بْنُ جَعْفَرٍ البُخَارِيُّ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ عَلِيِّ بْنِ مُبَارَكٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ

جَاءَ عُمَرُ يَوْمَ الخَنْدَقِ، فَجَعَلَ يَسُبُّ كُفَّارَ قُرَيْشٍ، وَيَقُولُ: يَا رَسُولَ اللَّهِ، مَا صَلَّيْتُ العَصْرَ حَتَّى كَادَتِ الشَّمْسُ أَنْ تَغِيبَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَأَنَا وَاللَّهِ مَا صَلَّيْتُهَا بَعْدُ» قَالَ: فَنَزَلَ إِلَى بُطْحَانَ، فَتَوَضَّأَ وَصَلَّى العَصْرَ بَعْدَ مَا غَابَتِ الشَّمْسُ، ثُمَّ صَلَّى المَغْرِبَ بَعْدَهَا





மேலும் பார்க்க : புகாரி-596 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.