தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-987

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 25 பெரு நாள் தொழுகை தவறிவிட்டால் இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும்.

(பெரு நாள் தொழுகை தொழச் செல்லா)பெண்களும், வீடுகளிலும் குக்கிராமங்களில் இருப்போரும் இவ்வாறே செயல்படவேண்டும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள், இது இஸ்லாமியர்களான நமது பெரு நாளாகும் என்று கூறியுள்ளார்கள்.

(பெரு நாள் தொழுகை தவறிவிட்ட போது) அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் தம்முடைய அடிமை இப்னு அபீஉத்பாவுக்கு ஆணையிட்டு (பஸ்ராவிலிருந்து ஆறுமைல் தொலைவிலிருந்த) ஸாவியா எனும் இடத்தில் தம் மனைவி மக்களைத் திரட்டி நகரவாசிகள் தொழுவது போன்று (இரண்டு ரக்அத்கள்) தொழு(வித்)தார்கள்; அவர்கள் தக்பீர் சொல்வது போன்றே தக்பீர் சொன்னார்கள்.

கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் பெரு நாள் தினத்தில் ஒன்று கூடி இமாம் செய்வது போன்றே இரண்டு ரக்அத்கள் தொழவேண்டும் என இக்ரிமா (ரஹ்)அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஒருவருக்கு பெரு நாள் தொழுகை தவறி விட்டால் அவர் (தனியாக) இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும் என அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். 

 ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

என் அருகே இரண்டு சிறுமியர் ‘தஃப்’ எனும் ‘கொட்டு’ அடித்துக் கொண்டிருந்தனர். நபி(ஸல்) அவர்கள் தம் ஆடையால் போர்த்திக் கொண்டிருந்தனர். அப்போது அபூ பக்ர்(ரலி) வந்து அவ்விருவரையும் விரட்டினார்கள். நபி(ஸல்) அவர்கள் தம் முகத்தைவிட்டும் ஆடையை விலக்கி ‘அபூ பக்ரே! அவ்விருவரையும் விட்டு விடுவீராக! ஏனெனில் இவை பெருநாள்களாகும்’ என்று கூறினார்கள். அந்த நாள்கள் மினாவின் நாள்களாக (10,11,12,13) அமைந்திருந்தன.
Book : 13

(புகாரி: 987)

بَابٌ: إِذَا فَاتَهُ العِيدُ يُصَلِّي رَكْعَتَيْنِ، وَكَذَلِكَ النِّسَاءُ، وَمَنْ كَانَ فِي البُيُوتِ وَالقُرَى

لِقَوْلِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَذَا عِيدُنَا أَهْلَ الإِسْلاَمِ» وَأَمَرَ أَنَسُ بْنُ مَالِكٍ مَوْلاَهُمْ ابْنَ أَبِي عُتْبَةَ بِالزَّاوِيَةِ فَجَمَعَ أَهْلَهُ وَبَنِيهِ، وَصَلَّى كَصَلاَةِ أَهْلِ المِصْرِ وَتَكْبِيرِهِمْ وَقَالَ عِكْرِمَةُ: «أَهْلُ السَّوَادِ يَجْتَمِعُونَ فِي العِيدِ، يُصَلُّونَ رَكْعَتَيْنِ كَمَا يَصْنَعُ الإِمَامُ» وَقَالَ عَطَاءٌ: «إِذَا فَاتَهُ العِيدُ صَلَّى رَكْعَتَيْنِ»

حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ

أَنَّ أَبَا بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، دَخَلَ عَلَيْهَا وَعِنْدَهَا جَارِيَتَانِ فِي أَيَّامِ مِنَى تُدَفِّفَانِ، وَتَضْرِبَانِ، وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُتَغَشٍّ بِثَوْبِهِ، فَانْتَهَرَهُمَا أَبُو بَكْرٍ، فَكَشَفَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ وَجْهِهِ، فَقَالَ: «دَعْهُمَا يَا أَبَا بَكْرٍ، فَإِنَّهَا أَيَّامُ عِيدٍ، وَتِلْكَ الأَيَّامُ أَيَّامُ مِنًى»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.