Category: தப்ரானி – அல்முஃஜமுஸ் ஸகீர்

Al-Mu’jam as-Saghir

Almujam-Assaghir-1041

ஹதீஸின் தரம்: More Info

1041. பிரார்த்தனை ஒரு வணக்கமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு, “என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; (எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள்’)என்று உங்கள் இறைவன் கூறுகிறான்” என்ற (40:60) வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக் காட்டினார்கள்…

அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் (ரலி)


الدُّعَاءُ هُوَ الْعِبَادَةُ ثُمَّ تَلَا {وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي} [غافر: 60]

” قَالَ: «يَعْنِي عَنْ دُعَائِي»


Almujam-Assaghir-953

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

953. நபி (ஸல்) அவர்கள் அலிஃப் லாம் மீம் தன்ஸீல் (என்று துவங்கும் 32 ஆவது) அத்தியாயத்தையும் தபாரகல்லதீ (என்று துவங்கும் 67 ஆவது) அத்தியாயத்தையும் ஓதாமல் உறங்கமாட்டார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)


كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ لَا يَنَامُ حَتَّى يَقْرَأَ: الم تَنْزِيلُ السَّجْدَةَ وَتَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ


Almujam-Assaghir-934

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

934. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உணவுத் தட்டு கொண்டுவரப்பட்டது. அதில் ஆவி வெளியேறிக்கொண்டிருந்தது. அதில் கையை வைக்காமல் எடுத்து விட்டார்கள். அப்போது அவர்கள் இறைவா நெருப்பை எங்களுக்கு உண்ணக் கொடுத்து விடாதே என்று பிரார்த்தித்துவிட்டு அல்லாஹ் நமக்கு நெருப்பை உண்ணக் கொடுக்கவில்லை என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ أُتِيَ بِصَحْفَةٍ تَفُورُ , فَرَفَعَ يَدَهُ مِنْهَا , فَقَالَ: «اللَّهُمَّ , لَا تُطْعِمْنَا نَارًا» (إِنَّ اللَّهَ لَمْ يُطْعِمْنَا نَارًا)


Almujam-Assaghir-723

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

723. அகீகா(வாக கொடுக்கப்படும் பிராணியை) ஏழாவது நாள் அல்லது பதினான்காம் நாள் அல்லது இருபத்து ஒன்றாம் நாள் அறுக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: புரைதா (ரலி)


«الْعَقِيقَةُ تُذْبَحُ لِسَبْعٍ , أَوْ أَرْبَعَ عَشْرَةَ , أَوْ أَحَدَ وَعِشْرِينَ»


Almujam-Assaghir-900

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

900. …யார் மஃக்ரிப் தொழுகைக்கு பின் ஆறு ரக்அத்கள் தொழுவாரோ அவருடைய பாவங்கள் கடல் நுரை அளவு இருந்தாலும்  மன்னிக்கப்படும்…

அறிவிப்பாளர் : அம்மார் (ரலி)


رَأَيْتُ عَمَّارَ بْنَ يَاسِرٍ صَلَّى بَعْدَ الْمَغْرِبِ سِتَّ رَكَعَاتٍ , فَقُلْتُ: يَا أَبَتِ , مَا هَذِهِ الصَّلَاةُ؟ فَقَالَ: رَأَيْتُ حَبِيبِي رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ صَلَّى بَعْدَ الْمَغْرِبِ سِتَّ رَكَعَاتٍ , وَقَالَ: «مَنْ صَلَّى بَعْدَ الْمَغْرِبِ سِتَّ رَكَعَاتٍ غُفِرَتْ لَهُ ذُنُوبُهُ , وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ»


« Previous Page