Category: புஹாரி

Bukhari

Bukhari-3241

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3241. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் (மிஅராஜ் – விண்ணுலகப் பயணத்தின் போது) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன். நரகத்தையும் எட்டிப் பார்த்தேன். அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாக பெண்களைக் கண்டேன். என இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவித்தார்.
Book :59


«اطَّلَعْتُ فِي الجَنَّةِ فَرَأَيْتُ أَكْثَرَ أَهْلِهَا الفُقَرَاءَ، وَاطَّلَعْتُ فِي النَّارِ فَرَأَيْتُ أَكْثَرَ أَهْلِهَا النِّسَاءَ»


Bukhari-3240

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 8 சொர்க்கம் குறித்த வர்ணனையும், அது படைக்கப்பட்டிருக்கிறது என்பதும்.

பார்க்க இறை வசனங்கள்:- 1)2:25 2)69:23 3)76:14 4)18:31 5)76:18 6)37:47 7)56:19 8)78:33 9)78:34 10)83:25 11)83:26 12)83:27 13)55:66 14)56:15 15)56:37 16)56:89 17)56:29 18)56:31 19)56:34 20)56:25 21)55:48 22)55:54 23)55:64.

3240. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் இறந்துவிட்டால் (மறுமை வாழ்வில்) அவரின் இருப்பிடம் (எதுவென்று) காலையிலும், மாலையிலும் அவருக்கு எடுத்துக் காட்டப்படும். அதாவது, அவர் சொர்க்கவாசியாக இருந்தால், சொர்க்கவாசிகளின் இருப்பிடமும், அவர் நரகவாசியாக இருந்தால், நரகவாசியின் இருப்பிடமும் (எடுத்துக் காட்டப்படும்)
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book : 59


«إِذَا مَاتَ أَحَدُكُمْ، فَإِنَّهُ يُعْرَضُ عَلَيْهِ مَقْعَدُهُ بِالْغَدَاةِ وَالعَشِيِّ، فَإِنْ كَانَ مِنْ أَهْلِ الجَنَّةِ، فَمِنْ أَهْلِ الجَنَّةِ، وَإِنْ كَانَ مِنْ أَهْلِ النَّارِ فَمِنْ أَهْلِ النَّارِ»


Bukhari-3239

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3239. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் (மிஅராஜ் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் மூஸா அவா்களை ‘ஷனூஆ’ குலத்தைச் சேர்ந்த மனிதரைப் போன்று பழுப்பு (கோதுமை) நிறமுடைய உயரமான, சுருள் முடி கொண்ட மனிதராகக் கண்டேன். ஈசா அவர்களை நடுத்தர உயரமும் சிகப்பும் வெண்மையும் சார்ந்த மிதமான சரும அமைப்பு கொண்டவர்களாகவும் (சுருள் சுருளாக இல்லாமல்) படிந்த, தொங்கலான தலைமுடியுடையவர்களாகவும் கண்டேன்.

நரகத்தின் காவலரான (வானவர்) மாலிக்கையும், (இறுதிக் காலத்தில் வரவிருக்கும் பெரும் பொய்யனான) தஜ்ஜாலையும் கண்டேன். இவையெல்லாம் அல்லாஹ் எனக்குக் காண்பித்த அவனுடைய சான்றுகளில் அடங்கியவை. நீங்கள் அவனை (தஜ்ஜாலை) சந்திக்கவிருப்பதில் சந்தேகம் ஏதும் கொள்ள வேண்டாம். என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

‘தஜ்ஜால் உள்ளே நுழைந்து விடாமல் மதீனா நகரத்தை வானவர்கள் காவல் காப்பார்கள்’ என்று நபி(ஸல்) கூறினார்கள் என அனஸ்(ரலி) அவர்களும், அபூ பக்ர்(ரலி) அவர்களும் அறிவித்தார்கள்.
Book :59


رَأَيْتُ لَيْلَةَ أُسْرِيَ بِي مُوسَى رَجُلًا آدَمَ طُوَالًا جَعْدًا، كَأَنَّهُ مِنْ رِجَالِ شَنُوءَةَ،

وَرَأَيْتُ عِيسَى رَجُلًا مَرْبُوعًا، مَرْبُوعَ الخَلْقِ إِلَى الحُمْرَةِ وَالبَيَاضِ، سَبِطَ الرَّأْسِ،

وَرَأَيْتُ مَالِكًا خَازِنَ النَّارِ، وَالدَّجَّالَ فِي آيَاتٍ أَرَاهُنَّ اللَّهُ إِيَّاهُ: {فَلاَ تَكُنْ فِي مِرْيَةٍ مِنْ لِقَائِهِ} [السجدة: 23]،

قَالَ أَنَسٌ، وَأَبُو بَكْرَةَ: عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَحْرُسُ المَلاَئِكَةُ المَدِينَةَ مِنَ الدَّجَّالِ»


Bukhari-3238

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3238. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘(வானவர் ஜிப்ரீல் அவர்கள் முதன் முதலாக ஹிரா குகையில் எனக்கு வஹீ (இறைச்செய்தி) கொண்டு வந்தார்.).. பிறகு சிறிது காலத்திற்கு (மூன்றாண்டுகளுக்கு) எனக்கு வஹீ (இறைச்செய்தி) வருவது நின்று போய்விட்டது. (அந்தக் கால கட்டத்தில் ஒரு முறை) நான் (பாதையில்) நடந்து சென்று கொண்டிருந்தபோது வானத்திலிருந்து ஒரு சப்தத்தைக் கேட்டேன். உடனே, என் பார்வையை வானத்தை நோக்கி உயர்த்தினேன். அங்கே ‘ஹிரா’ குகையில் என்னிடம் வந்த அதே வானவர் வானத்திற்கும் பூமிக்குமிடையே (இருந்த பிரமாண்டமான) ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டிருந்தார். அவரைக் கண்டு நான் பீதிக்குள்ளாகி விட்டேன்.

அதன் விளைவாக (மூர்ச்சையுற்றுத்) தரையில் விழுந்து விட்டேன். பிறகு, (மயக்கம் தெளிந்தவுடன்) என் வீட்டாரிடம் சென்று, ‘எனக்குப் போர்த்துங்கள். எனக்குப் போர்த்துங்கள்’ என்று (நடுக்கத்துடன்) கூறினேன். அவ்வாறே போர்வை போர்த்தப்பட்டது. அப்போது அல்லாஹு தஆலா,

‘(போர்வை) போர்த்திக் கொண்டிருப்பவரே! எழுந்திருங்கள். பிறகு (அல்லாஹ்வின் தண்டனை குறித்து, மக்களை) அச்சுறுத்தி எச்சரியுங்கள். மேலும், உங்களுடைய இறைவனின் பெருமையை எடுத்துரையுங்கள். மேலும், உங்கள் ஆடைகளைத் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள். மேலும், (சிலைகள்

ثُمَّ فَتَرَ عَنِّي الوَحْيُ فَتْرَةً، فَبَيْنَا أَنَا أَمْشِي، سَمِعْتُ صَوْتًا مِنَ السَّمَاءِ، فَرَفَعْتُ بَصَرِي قِبَلَ السَّمَاءِ، فَإِذَا المَلَكُ الَّذِي جَاءَنِي بِحِرَاءٍ، قَاعِدٌ عَلَى كُرْسِيٍّ بَيْنَ السَّمَاءِ وَالأَرْضِ، فَجُئِثْتُ مِنْهُ، حَتَّى هَوَيْتُ إِلَى الأَرْضِ، فَجِئْتُ أَهْلِي فَقُلْتُ: زَمِّلُونِي زَمِّلُونِي،

فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى {يَا أَيُّهَا المُدَّثِّرُ قُمْ فَأَنْذِرْ} [المدثر: 2] إِلَى قَوْلِهِ {وَالرُّجْزَ} [المدثر: 5] فَاهْجُرْ

قَالَ أَبُو سَلَمَةَ: وَالرِّجْزُ: الأَوْثَانُ


Bukhari-3237

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3237. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தன் மனைவியைப் படுக்கைக்கு அழைத்து, அவள் (அவருக்கு உடன்பட) மறுத்துவிட, அதன் விளைவாக அவர் இரவைக் கோபத்துடன் கழித்தாரென்றால் அவளை, காலை விடியும் வரை வானவர்கள் சபித்துக் கொண்டேயிருக்கின்றனர்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

இந்த செய்தியை அஃமஷ் அவர்களிடமிருந்து ஷுஃபா, அபூஹம்ஸா, இப்னு தாவூத், அபூமுஆவியா ஆகியோரும் அறிவித்துள்ளனர்.

அத்தியாயம்: 59


«إِذَا دَعَا الرَّجُلُ امْرَأَتَهُ إِلَى فِرَاشِهِ فَأَبَتْ فَبَاتَ غَضْبَانَ عَلَيْهَا لَعَنَتْهَا المَلاَئِكَةُ حَتَّى تُصْبِحَ»


Bukhari-3236

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3236. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் இன்றிரவு இரண்டு பேர்களைக் (கனவில்) கண்டேன். அவர்கள் என்னிடம் வந்து கூறினார்கள்: (அந்த இருவர் சார்பாக அவர்களில் ஒருவரான ஜிப்ரீல் என்னிடம் சொன்னார்:) ‘அதோ, அங்கே நெருப்பை மூட்டிக் கொண்டிருப்பவர் நரகத்தின் காவலரான (வானவர்) மாலிக் ஆவார். நான் ஜிப்ரீல்; (என்னுடனிருக்கும்) இவர் மீக்காயீல் ஆவார்.
என சமுரா இப்னு ஜுன்தப்(ரலி) அறிவித்தார்.
Book :59


«رَأَيْتُ اللَّيْلَةَ رَجُلَيْنِ أَتَيَانِي قَالاَ الَّذِي يُوقِدُ النَّارَ مَالِكٌ خَازِنُ النَّارِ، وَأَنَا جِبْرِيلُ وَهَذَا مِيكَائِيلُ»


Bukhari-3235

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3235. மஸ்ரூக்(ரலி) அறிவித்தார்.

நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம், ‘அப்படியென்றால், ‘பிறகு அவர் (நம் தூதரின் பக்கம்) நெருங்கி, அருகே வந்தார். அந்நெருக்கத்தின் அளவு (வளைந்த) வில்லின் இரண்டு முனைகளைப் போல் அல்லது அதை விடச் சமீபமாக இருந்தது’ என்னும் (திருக்குர்ஆன் 53:8,9) இறைவசனம் எங்கே?’ என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், ‘அது (குர்ஆனில் ‘அவர் நெருங்கி அருகே வந்தார்’ என்பதில் ‘அவர்’ என்பது) ஜிப்ரீல்(அலை) அவர்களைக் குறிக்கிறது. ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் ஒரு மனிதரின் உருவில் வருவார்கள்; இந்த முறை அவர்கள் வந்தது அவர்களின் உண்மையான உருவம் எதுவோ அந்த உருவத்திலாகும். எனவேதான் அவர் அடிவானத்தையே அடைத்தார்’ என்று பதிலளித்தார்கள்.
Book :59


قُلْتُ لِعَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: فَأَيْنَ قَوْلُهُ {ثُمَّ دَنَا فَتَدَلَّى فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَى} [النجم: 9] قَالَتْ: «ذَاكَ جِبْرِيلُ كَانَ يَأْتِيهِ فِي صُورَةِ  الرَّجُلِ، وَإِنَّهُ أَتَاهُ هَذِهِ المَرَّةَ فِي صُورَتِهِ الَّتِي هِيَ صُورَتُهُ فَسَدَّ الأُفُقَ»


Bukhari-3234

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3234. ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

‘முஹம்மத்(ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள்’ என்று கூறுபவன் பெரிய தவறு புரிந்துவிட்டான்: எனினும், அவர்கள் ஜிப்ரீல்(அலை) அவர்களை, அவர்களின் (அசல்) உருவிலும் (அசல் படைப்பின்) அமைப்பிலும் வான விளிம்பு முழுவதையும் அடைத்தபடி (தோற்றமளிக்கக்) கண்டார்கள்.
Book :59


«مَنْ زَعَمَ أَنَّ مُحَمَّدًا رَأَى رَبَّهُ فَقَدْ أَعْظَمَ، وَلَكِنْ قَدْ رَأَى جِبْرِيلَ فِي صُورَتِهِ وَخَلْقُهُ سَادٌّ مَا بَيْنَ الأُفُقِ»


Bukhari-3233

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3233. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

‘நிச்சயமாக, அவர் தம் இரட்சகனின் சான்றுகளில் பெரியதைக் கண்டார்’ என்னும் (திருக்குர்ஆன் 53:18) இறைவசனத்தின் பொருள்,

‘நபி(ஸல்) அவர்கள் வானவர் ஜிப்ரீலை – அடிவானத்தை அடைத்துக் கொண்ட ஒரு பச்சை விரிப்பின் மீது (அல்லது அவர் தன்னுடைய இறக்கையை விரித்தபடி அதனால் அடிவானத்தை அடைத்து விரித்தபடி நிற்கக்) கண்டார்கள்’ என்பதாகும்.
Book :59


{لَقَدْ رَأَى مِنْ آيَاتِ رَبِّهِ الكُبْرَى} [النجم: 18]، قَالَ: «رَأَى رَفْرَفًا أَخْضَرَ سَدَّ أُفُقَ السَّمَاءِ»


Bukhari-3232

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3232. அபூஇஸ்ஹாக் அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்) அவர்களிடம், ‘‘(வேத அறிவிப்பு நின்றுபோயிருந்த இடைப்பட்ட காலத்தில் வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள், நபி (ஸல்) அவர்களை நெருங்கிவர) அந்நெருக்கத்தின் அளவு (வளைந்த) வில்லின் இரு முனைகளுக்கிடையிலுள்ள நெருக்கத்தைப் போல், அல்லது அதைவிடச் சமீபமாக இருந்தது. பிறகு அவருக்கு (ஜிப்ரீலுக்கு) அல்லாஹ் அறிவித்ததையெல்லாம் அவர் அவனுடைய அடியாருக்கு அறிவித்தார். (53: 9,10)” என்னும் இறைவசனத்தைப் பற்றிக் கேட்டேன்.

அப்போது அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீலுக்கு அறு நூறு இறக்கைகள் இருக்க (அவரது நிஜத் தோற்றத்தில்) அவரைக் கண்டார்கள்” என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் எங்களிடம் தெரிவித்தார்கள் என விளக்கினார்கள்.44

அத்தியாயம் : 59


سَأَلْتُ زِرَّ بْنَ حُبَيْشٍ عَنْ قَوْلِ اللَّهِ تَعَالَى {فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَى. فَأَوْحَى إِلَى عَبْدِهِ مَا أَوْحَى} [النجم: 10] قَالَ: حَدَّثَنَا ابْنُ مَسْعُودٍ: أَنَّهُ «رَأَى جِبْرِيلَ، لَهُ سِتُّمِائَةِ جَنَاحٍ»


Next Page » « Previous Page