Category: புஹாரி

Bukhari

Bukhari-3221

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3221. இப்னு ஷிஹாப் (ரஹ்) அறிவித்தார்.

உமர் இப்னு அப்தில் அஸீஸ்(ரஹ்) அஸர் தொழுகையைச் சிறிது பிற்படுத்தித் தொழுதார்கள். உடனே உர்வா (ரஹ்), ‘உண்மையில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் (வானிலிருந்து) இறங்கி இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு முன்னால் (அஸரை) இதற்கு முந்திய நேரத்தில்) தொழுதார்கள்’ என்றார்கள். அதற்கு உமர் இப்னு அப்தில் அஸீஸ் (ரஹ்), ‘நீங்கள் சொல்வதைச் சிந்தித்துச் சொல்லுங்கள், உர்வா!’ என்றார்கள்.

உடனே உர்வா (ரஹ்), ‘ஜிப்ரீல்(அலை) (வானிலிருந்து) இறங்கி, எனக்குத் தொழுகை நடத்த, நான் அவருடன் தொழுதேன். பிறகு (இரண்டாம் முறையாக) அவருடன் தொழுதேன். பிறகு (மூன்றாம் முறையாக) அவருடன் தொழுதேன். பிறகு (நான்காம் முறையாக) அவருடன் தொழுதேன். பிறகு (ஐந்தாம் முறையாக) அவருடன் தொழுதேன்’ என்று தம் விரல்களால் ஐந்து தொழுகைகளை எண்ணியபடி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொல்ல கேட்டேன்’ என்று தம் தந்தை அபூ மஸ்வூத் (ரலி) சொல்லக் கேட்டதாக பஷீர் இப்னு அபீ மஸ்வூத் (ரஹ்) சொல்ல செவியுற்றேன்’ என்றார்கள்.
Book :59


أَنَّ عُمَرَ بْنَ عَبْدِ العَزِيزِ أَخَّرَ العَصْرَ شَيْئًا، فَقَالَ لَهُ عُرْوَةُ: أَمَا إِنَّ جِبْرِيلَ قَدْ نَزَلَ فَصَلَّى أَمَامَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ عُمَرُ اعْلَمْ مَا تَقُولُ يَا عُرْوَةُ قَالَ: سَمِعْتُ بَشِيرَ بْنَ أَبِي مَسْعُودٍ يَقُولُ: سَمِعْتُ أَبَا مَسْعُودٍ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «نَزَلَ جِبْرِيلُ فَأَمَّنِي، فَصَلَّيْتُ مَعَهُ، ثُمَّ صَلَّيْتُ مَعَهُ، ثُمَّ صَلَّيْتُ مَعَهُ، ثُمَّ صَلَّيْتُ مَعَهُ، ثُمَّ صَلَّيْتُ مَعَهُ» يَحْسُبُ بِأَصَابِعِهِ خَمْسَ صَلَوَاتٍ


Bukhari-3220

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3220. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்களிலேயே அதிகமாக வாரி வழங்கக் கூடியவர்களாக இருந்தார்கள்; ரமளான் மாதத்தில் அவர்களை ஜிப்ரீல் (அலை) அவர்கள் சந்திக்கும் வேளையில் (வழக்கத்தை விட) அதிகமாக வாரி வழங்குவார்கள். ஜிப்ரீல்(அலை) அவர்கள் ரமளான் மாதத்தின் ஒவ்வோர் இரவிலும் நபி(ஸல்) அவர்களைச் சந்தித்து (அதுவரை அருளப்பட்டிருந்த) குர்ஆனை அவர்களுக்கு (ஓதிக் காடிக்) கற்றுத் தருவார்கள்.

ஜிப்ரீல்(அலை) அவர்கள், நபி(ஸல்) அவர்களைச் சந்திக்கும்போது அவர்கள் மழைக் காற்றை விட அதிகமாக (மக்களுக்கு) நன்மையை வாரி வழங்கும் கொடையாளராகத் திகழ்வார்கள்.

மேலும், நபி(ஸல்) அவர்கள், ‘குர்ஆன் முழுவதையும் ஜிப்ரீல் எனக்கு ஓதிக் காட்டி வந்தார்’ என்று கூறினார்கள்.

இதை அபூ ஹுரைரா(ரலி) அவர்களும் ஃபாத்திமா(ரலி) அவர்களும் அறிவித்தார்கள்.
Book :59


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَجْوَدَ النَّاسِ، وَكَانَ أَجْوَدُ مَا يَكُونُ فِي رَمَضَانَ حِينَ يَلْقَاهُ جِبْرِيلُ، وَكَانَ جِبْرِيلُ يَلْقَاهُ فِي كُلِّ لَيْلَةٍ مِنْ رَمَضَانَ، فَيُدَارِسُهُ القُرْآنَ، فَلَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ يَلْقَاهُ جِبْرِيلُ أَجْوَدُ بِالخَيْرِ مِنَ الرِّيحِ المُرْسَلَةِ»


Bukhari-3219

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3219. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரேயொரு (வட்டார) மொழி வழக்குப்படி ஜிப்ரீல் (திருக்குர்ஆனை) எனக்கு ஓதக் கற்றுத் தந்தார். ஆனால், நான் அதை இன்னும் பல (வட்டார) மொழி வழக்குகளின் படி எனக்கு ஓதக் கற்றுத் தருமாறு அவர்களைக் கேட்டுக் கொண்டேயிருந்தேன். (நான் கேட்க, கேட்க அதிகப்படுத்தப்பட்டுக் கொண்டே வந்து,) இறுதியில் ஏழு (வட்டார) மொழி வழக்குகள் அளவிற்கு வந்து நின்றது.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 59


«أَقْرَأَنِي جِبْرِيلُ عَلَى حَرْفٍ، فَلَمْ أَزَلْ أَسْتَزِيدُهُ حَتَّى انْتَهَى إِلَى سَبْعَةِ أَحْرُفٍ»


Bukhari-3218

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3218. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஜிப்ரீல்(அலை) அவர்களிடம், ‘தாங்கள் (இப்போது) எம்மைச் சந்தித்துக் கொண்டிருப்பதை விட அதிகமாக (அடிக்கடி) சந்திக்க மாட்டீர்களா?’ என்று (ஆர்வமுடன்) கேட்டார்கள்.

அப்போது, ‘(நபியே!) நாம் உங்களுடைய இறைவனின் உத்தரவின்றி இறங்குவதில்லை. எமக்கு முன்னிருப்பவையும் எமக்குப் பின்னால் இருப்பவையும் அவனுக்கே உரியவை.’ என்னும் (ஜிப்ரீல்(அலை) அவர்கள் சார்பாக பதில் கூறும் (திருக்குர்ஆன் 19:64) இறைவசனம் அருளப்பட்டது.
Book :59


قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِجِبْرِيلَ: «أَلاَ تَزُورُنَا أَكْثَرَ مِمَّا تَزُورُنَا؟»، قَالَ: فَنَزَلَتْ: {وَمَا نَتَنَزَّلُ إِلَّا بِأَمْرِ رَبِّكَ لَهُ مَا بَيْنَ أَيْدِينَا وَمَا خَلْفَنَا} [مريم: 64] الآيَةَ


Bukhari-3217

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3217. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் என்னிடம், ‘ஆயிஷாவே! இதோ ஜிப்ரீல் உன் மீது சலாமுரைக்கிறார்’ என்று கூறினார்கள். நான், ‘வ அலைஹிஸ் ஸலாமு வ ரஹ்முத்துல்லாஹி வ பரக்காத்துஹு – அவரின் மீதும் (அல்லாஹ்வின்) சாந்தியும் அல்லாஹ்வின் கருணையும் அவனுடைய அருள் வளங்களும் பொழியட்டும்.

(இறைத்தூதர் அவர்களே!) நான் பார்க்க முடியாததையெல்லாம் நீங்கள் பார்க்கிறீர்கள்’ என்று கூறினேன்.

ஆயிஷா(ரலி) ‘நீங்கள்’ என்று நபி(ஸல்) அவர்களையே குறிப்பிட்டதாக அறிவிப்பாளர் கூறுகிறார்.
Book :59


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ لَهَا: «يَا عَائِشَةُ هَذَا جِبْرِيلُ يَقْرَأُ عَلَيْكِ السَّلاَمَ»، فَقَالَتْ: وَعَلَيْهِ السَّلاَمُ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، تَرَى مَا لاَ أَرَى، تُرِيدُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Bukhari-3216

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3216. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

‘இரண்டு ஜோடி (பொருள்)களை இறைவழியில் செலவழித்தவர்களை சொர்க்கத்தின் காவலர்(களான வானவர்)கள் ‘இன்னாரே! இங்கே வாருங்கள்’ என்று அழைப்பார்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதைக் கேட்ட அபூ பக்ர்(ரலி), ‘இப்படிப்பட்டவருக்குக் கவலையே கிடையாதே’ என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் அவர்களில் ஒருவராயிருப்பீர்கள் என்று நம்புகிறேன்’ என்றார்கள்.
Book :59


«مَنْ أَنْفَقَ زَوْجَيْنِ فِي سَبِيلِ اللَّهِ، دَعَتْهُ خَزَنَةُ الجَنَّةِ، أَيْ فُلُ هَلُمَّ» فَقَالَ أَبُو بَكْرٍ: ذَاكَ الَّذِي لاَ تَوَى عَلَيْهِ، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَرْجُو أَنْ تَكُونَ مِنْهُمْ»


Bukhari-3215

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3215. ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

ஹாரிஸ் இப்னு ஹிஷாம் (ரலி) நபி (ஸல்) அவர்களிடம், ‘தங்களுக்கு வஹீ (இறைச்செய்தி) (வேத வெளிப்பாடு) எப்படி வருகிறது?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘அவையெல்லாம் (இப்படித்தான்:) சில வேளைகளில் வானவர் (ஜிப்ரீல்) என்னிடம் மணியோசையைப் போன்று (சத்தம் எழுப்பிய நிலையில்) வருவார்.

அவர் கூறியதை நான் நினைவில் (பாதுகாத்து) வைத்த நிலையில் அவர் என்னைவிட்டுப் பிரிந்து விடுவார். இவ்வாறு வருவது எனக்கு மிகக் கடுமையான சிரமம் தரக் கூடியதாக இருக்கும். சில வேளைகளில் அந்த வானவர் ஒரு மனிதரைப் போன்று காட்சியளித்து என்னுடன் பேசுவார். அப்போது அவர் கூறுவதை நினைவிலிருத்திக் கொள்வேன்’ என்று பதிலளித்தார்கள்.

அத்தியாயம்: 59


أَنَّ الحَارِثَ بْنَ هِشَامٍ سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ يَأْتِيكَ الوَحْيُ؟ قَالَ: «كُلُّ ذَاكَ يَأْتِينِي المَلَكُ أَحْيَانًا فِي مِثْلِ صَلْصَلَةِ الجَرَسِ، فَيَفْصِمُ عَنِّي، وَقَدْ وَعَيْتُ مَا قَالَ، وَهُوَ أَشَدُّهُ عَلَيَّ، وَيَتَمَثَّلُ لِي المَلَكُ أَحْيَانًا رَجُلًا فَيُكَلِّمُنِي، فَأَعِي مَا يَقُولُ»


Bukhari-3214

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3214. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

(கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்த) பனூ ஃகுன்கி கிளையாரின் குறுகலான வீதியில் .. கிளம்புகிற புழுதியின் பக்கம் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது.

அறிவிப்பாளர் மூஸா(ரஹ்), ‘ஜிப்ரீல்(அலை) அவர்கள், தங்களின் படை பரிவாரங்களுடன் கம்பீரமாக பவனி வருவதால் (கிளம்புகின்ற)…’ என்னும் வாசகத்தை அதிகப்படியாக அறிவித்தார்.
Book :59


«كَأَنِّي أَنْظُرُ إِلَى غُبَارٍ سَاطِعٍ فِي سِكَّةِ بَنِي غَنْمٍ» زَادَ مُوسَى، مَوْكِبَ جِبْرِيلَ


Bukhari-3213

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3213. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஹஸ்ஸான்(ரலி) அவர்களிடம், ‘எதிரிகளுக்கு (பதிலடியாக) வசைக் கவிதை பாடுங்கள். ஜிப்ரீல் உங்களுடன் (துணையாக) இருப்பார்’ என்று கூறினார்கள்.
Book :59


قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِحَسَّانَ: «اهْجُهُمْ – أَوْ هَاجِهِمْ وَجِبْرِيلُ مَعَكَ»


Bukhari-3212

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3212. ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) அறிவித்தார்.

மஸ்ஜிதுந் நபவீயில் (நபித் தோழரும் கவிஞருமான) ஹஸ்ஸான் இப்னு ஸாபித்(ரலி) கவிபாடிக் கொண்டிருக்க, உமர்(ரலி) அங்கு வந்தார்கள். (ஹஸ்ஸான்(ரலி) பள்ளிவாசலில் கவிபாடுவதை உமர்(ரலி) கண்டித்தார்கள்) ஹஸ்ஸான்(ரலி), ‘நான் இந்தப் பள்ளிவாசலில் உங்களை விடச் சிறந்தவர் (நபி(ஸல்) அவர்கள்) இருக்கும் போதே கவிபாடிக் கொண்டிருந்தேன்’ என்று கூறிவிட்டு,

அபூ ஹுரைரா(ரலி) பக்கம் திரும்பி, ‘அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் கேட்கிறேன். (என்னிடம்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘(ஹஸ்ஸானே!) என் சார்பாக (எதிரிகளின் வசைக் கவிகளுக்கு) நீங்கள் (கவிகளாலேயே) பதிலளியுங்கள். இறைவா! ஹஸ்ஸானுக்கு ரூஹுல் குதுஸ்(தூய ஆத்மா வானவர் ஜிப்ரீல் அவர்களின்) மூலம் துணை புரிவாயாக!’ என்று கூறியதை நீங்கள் செவியுற்றிருக்கிறீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு அபூ ஹுரைரா(ரலி), ‘ஆம் (செவியுற்றிருக்கிறேன்)’ என்று பதிலளித்தார்கள்.
Book :59


مَرَّ عُمَرُ فِي المَسْجِدِ وَحَسَّانُ يُنْشِدُ فَقَالَ: كُنْتُ أُنْشِدُ فِيهِ، وَفِيهِ مَنْ هُوَ خَيْرٌ مِنْكَ، ثُمَّ التَفَتَ إِلَى أَبِي هُرَيْرَةَ، فَقَالَ: أَنْشُدُكَ بِاللَّهِ، أَسَمِعْتَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «أَجِبْ عَنِّي، اللَّهُمَّ أَيِّدْهُ بِرُوحِ القُدُسِ؟» قَالَ: نَعَمْ


Next Page » « Previous Page