Category: புஹாரி

Bukhari

Bukhari-2855

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2855. ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ் ஸாஇதீ(ரலி) அறிவித்தார்.

எங்கள் தோட்டத்தில் நபி(ஸல்) அவர்களுக்கு (சொந்தமான) ‘லுஹைஃப்’ என்றழைக்கப்பட்ட குதிரையொன்று இருந்தது.

அபூ அப்தில்லாஹ் (புகாரீயாகிய நான்) கூறுகிறேன்; அவர்களில் சிலர் அதன் பெயர் ‘லுஃகைஃப்’ என்று கூறுகிறார்கள்.
Book :56


«كَانَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَائِطِنَا فَرَسٌ يُقَالُ لَهُ اللُّحَيْفُ»، قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: ” وَقَالَ بَعْضُهُمُ: اللُّخَيْفُ


Bukhari-2854

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 46 குதிரைகளுக்கும், கழுதைகளுக்கும் பிரத்யேகப் பெயர் சூட்டுவது.

2854. அபூ கதாதா(ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்களுடன் (ஹுதைபிய்யா ஆண்டில் மக்காவுக்குப்) புறப்பட்டேன். (வழியில்) என்னுடைய தோழர்கள் சிலருடன் நான் பின்தங்கி விட்டேன். அவர்கள் இஹ்ராம் அணிந்திருந்தார்கள்; நான் இஹ்ராம் அணிந்திருக்கவில்லை. என் தோழர்கள் நான் பார்ப்பதற்கு முன்னால் ஒரு காட்டுக் கழுதையைப் பார்த்தார்கள். அதைப் பார்த்த பொழுது அதை நானாகப் பார்க்கட்டும் என்றுவிட்டுவிட்டார்கள்.

(நான் அதைப் பார்த்தவுடன்) ‘ஜராதா’ என்றழைக்கப்பட்ட என்னுடைய குதிரையின் மீது ஏறிக் கொண்டு என் தோழர்களிடம் என்னுடைய சாட்டையை எடுத்துத் தரும்படி கேட்டேன். அவர்கள் (இஹ்ராம் அணிந்திருந்ததால்) அதை (எடுத்துத் தர) மறுத்துவிட்டார்கள். எனவே, நான் அதை எடுத்து (அந்தக் காட்டுக் கழுதையைத்) தாக்கி, அதை (அதன் கால் நரம்புகளில்) வெட்டினேன். பிறகு (அதை அறுத்து) நான் உண்டேன்; அவர்களும் உண்டார்கள். பிறகு (அதை உண்டதற்காக) வருந்தினார்கள்.

அவர்கள் நபி(ஸல்) அவர்களை அடைந்தபோது நபி(ஸல்) அவர்கள், ‘அதிலிருந்து ஏதேனும் (ஒரு பகுதி இறைச்சி) உங்களிடம் இருக்கிறதா?’ என்று கேட்டார்கள். ‘அதனுடைய கால் எங்களிடம் இருக்கிறது’ என்று அவர்கள் பதிலளித்தார்கள்.

أَنَّهُ خَرَجَ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَتَخَلَّفَ أَبُو قَتَادَةَ مَعَ بَعْضِ أَصْحَابِهِ، وَهُمْ مُحْرِمُونَ وَهُوَ غَيْرُ مُحْرِمٍ، فَرَأَوْا حِمَارًا وَحْشِيًّا قَبْلَ أَنْ يَرَاهُ، فَلَمَّا رَأَوْهُ تَرَكُوهُ حَتَّى رَآهُ أَبُو قَتَادَةَ، فَرَكِبَ فَرَسًا لَهُ يُقَالُ لَهُ  الجَرَادَةُ، فَسَأَلَهُمْ أَنْ يُنَاوِلُوهُ سَوْطَهُ فَأَبَوْا، فَتَنَاوَلَهُ، فَحَمَلَ فَعَقَرَهُ، ثُمَّ أَكَلَ، فَأَكَلُوا فَنَدِمُوا، فَلَمَّا أَدْرَكُوهُ قَالَ: «هَلْ مَعَكُمْ مِنْهُ شَيْءٌ؟»، قَالَ: مَعَنَا رِجْلُهُ، فَأَخَذَهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَكَلَهَا


Bukhari-2853

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 45 அல்லாஹ்வின் பாதையில் (போரிடுவதற்காக) குதிரையைத் தயாராக வைத்திருப்பதின் சிறப்பு.

ஏனெனில் அல்லாஹ், மேலும் அவர்களை எதிர்த்துப் போரிடுவதற்கு உங்களால் முடிந்த அளவிற்கு பலத்தையும் (போருக்குத்) தயாராக உள்ள குதிரைகளையும் திரட்டி வைத்துக் கொள்ளுங்கள் (8:60) என்று கூறுகிறான்.

2853. ‘அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டும் அவனுடைய வாக்குறுதியை நம்பியும் இறைவழியில் (போரிடுவதற்காக) ஒரு குதிரையப் கட்டி வைக்கிறவர், அதற்குப் போடுகிற தீனி, புகட்டுகிற தண்ணீர் மற்றும் அதன் சாணம், சிறுநீர் ஆகியவையும் (நன்மைகளாக) அவரின் தட்டில் (வைத்து எடை) போடப்படும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 56


«مَنِ احْتَبَسَ فَرَسًا فِي سَبِيلِ اللَّهِ إِيمَانًا بِاللَّهِ وَتَصْدِيقًا بِوَعْدِهِ، فَإِنَّ شِبَعَهُ وَرِيَّهُ وَرَوْثَهُ وَبَوْلَهُ فِي مِيزَانِهِ يَوْمَ القِيَامَةِ»


Bukhari-2852

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 44

நல்லவர் மற்றும் கெட்டவரின் தலைமையின் கீழ் (மறுமைநாள் வரை) அறப்போர் நடந்து கொண்டிருக்கும்.

ஏனெனில் நபி (ஸல்) அவர்கள், (அல்லாஹ்வின் பாதையில் செலுத்தப்படும்) குதிரைகளின் நெற்றிகளில் மறுமைநாள் வரை நன்மை பிணைக்கப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார்கள்.

2852. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இறைவழியில் செலுத்தப்படும்) குதிரைகளின் நெற்றிகளில் மறுமைநாள் வரை நன்மை பிணைக்கப்பட்டிருக்கிறது. அந்த நன்மை யாதெனில் (அந்தக் குதிரையில் ஏறி அறப்போரிடுவதால் கிடைக்கும்) நற்கூலியும், போரில் கிடைக்கும் செல்வமும் ஆகும்.

அறிவிப்பவர்: உர்வா பின் அபுல்ஜஃத் அல்பாரிகீ (ரலி)

அத்தியாயம்: 56


الخَيْلُ مَعْقُودٌ فِي نَوَاصِيهَا الخَيْرُ إِلَى يَوْمِ القِيَامَةِ: الأَجْرُ وَالمَغْنَمُ


Bukhari-2851

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2851. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இறைவழியில் செலுத்தப்படும்) குதிரைகளின் நெற்றிகளில் பரக்கத் (அருள்வளம்) உள்ளது.

அத்தியாயம்: 56


«البَرَكَةُ فِي نَوَاصِي الخَيْلِ»


Bukhari-2850

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2850. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குதிரைகளின் நெற்றிகளில் மறுமை நாள் வரை நன்மை பிணைக்கப்பட்டிருக்கிறது.

அறிவிப்பவர்: உர்வா பின் அபுல்ஜஃத் அல்பாரிகீ (ரலி)

அத்தியாயம்: 56


«الخَيْلُ مَعْقُودٌ فِي نَوَاصِيهَا الخَيْرُ إِلَى يَوْمِ القِيَامَةِ»


Bukhari-2849

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 43

குதிரைகளின் நெற்றிகளில் மறுமை நாள் வரைக்கும் நன்மை பிணைக்கப் பட்டிருக்கின்றது.

2849. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இறைவழியில் செலுத்தப்படும்) குதிரைகளின் நெற்றிகளில் மறுமை நாள் வரைக்கும் நன்மை உள்ளது.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 56


«الخَيْلُ فِي نَوَاصِيهَا الخَيْرُ إِلَى يَوْمِ القِيَامَةِ»


Bukhari-2848

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 42 இருவர் பயணம் செய்வது.

2848. மாலிக் இப்னு ஹுவைரிஸ்(ரலி) கூறினார்.

நான் நபி(ஸல்) அவர்களிடமிருந்து திரும்பினேன். அப்போது எனக்கும் என் நண்பர் ஒருவருக்கும் நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் இருவரும் பயணத்தில் தொழுகை நேரம் வந்தால் பாங்கும் இகாமத்தும் சொல்லுங்கள். உங்களில் (வயதில்) பெரியவர் உங்களுக்கு இமாமாக நின்று தொழுகை நடத்தட்டும்’ என்று கூறினார்கள்.
Book : 56


انْصَرَفْتُ مِنْ عِنْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لَنَا أَنَا وَصَاحِبٍ لِي: «أَذِّنَا، وَأَقِيمَا وَلْيَؤُمَّكُمَا أَكْبَرُكُمَا»


Bukhari-2847

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 41

ஒற்றர் படையைத் தனியாக அனுப்பலாமா?

2847. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) கூறினார்.

(உளவுப் பணிக்காக) நபி(ஸல்) மக்களை அழைத்தார்கள். ‘அது அகழ்ப் போரின்போது என்று நினைக்கிறேன்’ என அறிவிப்பாளர் ஸதகா இப்னு ஃபள்ல்(ரஹ்) கூறினார். – ஸுபைர்(ரலி) (அதற்குத் தாம் தயாராக இருப்பதாக) பதிலளித்தார்கள். மீண்டும் நபி(ஸல்) அவர்கள் மக்களை (எதிரிகளை வேவு பார்த்து வரும்படி) அழைத்தார்கள். (மீண்டும்) ஸுபைர்(ரலி) (அதற்குத் தாம் தாயாராக இருப்பதாக) பதிலளித்தார்கள். மீண்டும் நபி(ஸல்) அவர்கள் மக்களை அழைத்தார்கள்; அப்போதும் ஸுபைர்(ரலி) (தாம் அதற்குத் தயாராக இருப்பதாக) பதிலளித்தார்கள்.

அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘ஒவ்வோர் இறைத்தூதருக்கும் பிரத்யேகமான தூய தோழர் ஒருவர் நிச்சயம் உண்டு. என் பிரத்யேகமான தூய தோழர் அவ்வாமின் மகன் ஸுபைராவார்’ என்று கூறினார்கள்.
Book : 56


نَدَبَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّاسَ – قَالَ صَدَقَةُ: أَظُنُّهُ يَوْمَ الخَنْدَقِ – فَانْتَدَبَ الزُّبَيْرُ، ثُمَّ نَدَبَ النَّاسَ، فَانْتَدَبَ الزُّبَيْرُ، ثُمَّ نَدَبَ النَّاسَ، فَانْتَدَبَ الزُّبَيْرُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ لِكُلِّ نَبِيٍّ حَوَارِيًّا وَإِنَّ حَوَارِيَّ الزُّبَيْرُ بْنُ العَوَّامِ»


Bukhari-2846

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 40 ஒற்றர் படையின் சிறப்பு.

2846. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

அனைத்துக் குலங்களும் நம்மை எதிர்த்துப் போரிடும் (இந்த அகழ்ப் போர்) நாளில் அந்தக் குலத்தாரின் செய்தியை என்னிடம் (உளவறிந்து) கொண்டு வருபவர் யார்? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். ஸுபைர்(ரலி), ‘நான் (உளவறிந்து கொண்டு வருகிறேன்)’ என்று கூறினார்கள்.

பிறகு (மீண்டும்) நபி(ஸல்) அவர்கள், ‘அந்தக் குலத்தாரின் செய்தியை என்னிடம் (உளவறிந்து) கொண்டு வருபவர் யார்?’ என்று கேட்க, ஸுபைர்(ரலி), ‘நான்’ என்று கூறினார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள், ‘ஒவ்வோர் இறைத்தூதருக்கும் பிரத்யேகமான தூய தோழர் ஒருவர் உண்டு. என் பிரத்யேகமான தூய தோழர் ஸுபைராவார்’ என்று கூறினார்கள்.
Book : 56


«مَنْ يَأْتِينِي بِخَبَرِ القَوْمِ يَوْمَ الأَحْزَابِ؟» قَالَ الزُّبَيْرُ: أَنَا، ثُمَّ قَالَ: «مَنْ يَأْتِينِي بِخَبَرِ القَوْمِ؟»، قَالَ الزُّبَيْرُ: أَنَا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ لِكُلِّ نَبِيٍّ حَوَارِيًّا وَحَوَارِيَّ الزُّبَيْرُ»


Next Page » « Previous Page