Category: தாரகுத்னீ

Sunan al-Daraqutni

Daraqutni-256

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

256. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உளூ இல்லாதவருக்கு தொழுகை இல்லை. உளூச் செய்யும் போது பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் பெயரால் என்று) கூறாதவருக்கு உளூ இல்லை.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«لَا صَلَاةَ لِمَنْ لَا وُضُوءَ لَهُ , وَلَا وُضُوءَ لِمَنْ لَمْ يَذْكُرِ اسْمَ اللَّهِ عَلَيْهِ»


Daraqutni-232

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

232. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் அல்லாஹ்வின் பெயர் கூறி உளூச் செய்தால் அவரின் உடல் முழுவதும் தூய்மையாகும். அல்லாஹ்வின் பெயர் கூறாமல் உளூச் செய்தால் அவரின் உளூவின் அவயங்கள் தவிர மற்றவை தூய்மையாகாது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«مَنْ تَوَضَّأَ وَذَكَرَ اسْمَ اللَّهِ تَطَهَّرَ جَسَدُهُ كُلُّهُ , وَمَنْ تَوَضَّأَ وَلَمْ يَذْكُرِ اسْمَ اللَّهِ لَمْ يَتَطَهَّرْ إِلَّا مَوْضِعُ الْوُضُوءِ»


Daraqutni-222

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

222. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் பெயர் கூறாமல் உளூச் செய்தவர் உளூச் செய்தவராக ஆகமாட்டார். உளூச்செய்யாமல் தொழுதவர் தொழுதவராக ஆகமாட்டார். என்னை நேசிக்காதவர் இறைநம்பிக்கை கொண்டவராக ஆகமாட்டார். அன்ஸாரீ நபித்தோழர்களை நேசிக்காதவர் என்னை நேசித்தவராக ஆகமாட்டார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«مَا تَوَضَّأَ مَنْ لَمْ يَذْكُرِ اسْمَ اللَّهِ , وَمَا صَلَّى مَنْ لَمْ يَتَوَضَّأْ , وَمَا آمَنَ بِي مَنْ لَمْ يُحِبَّنِي , وَمَا أَحَبَّنِي مَنْ لَمْ يُحِبَّ الْأَنْصَارَ»


Daraqutni-223

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

223. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் உளூச் செய்யும் போது பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் பெயரால் என்று) கூறவில்லையோ அவருக்கு உளூ நிறைவேறாது.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)


«لَا وُضُوءَ لِمَنْ لَمْ يَذْكُرِ اسْمَ اللَّهِ عَلَيْهِ»


Daraqutni-1226

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1226.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குர்ஆனின் அன்னை (எனப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை) ஓதாதவருக்குத் தொழுகையே இல்லை.


«لَا صَلَاةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِأُمِّ الْقُرْآنِ»


Daraqutni-1225

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1225.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘திருக்குர்ஆனின் தோற்றுவாயை (அல்ஹம்து சூராவை) ஓதாதவருக்குத் தொழுகை கூடாது.

அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி)


«لَا صَلَاةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِفَاتِحَةِ الْكِتَابِ». قَالَ زِيَادٌ فِي حَدِيثِهِ: لَا تُجْزِئُ صَلَاةٌ لَا يَقْرَأُ الرَّجُلُ فِيهَا بِفَاتِحَةِ الْكِتَابِ


Daraqutni-1222

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1222.


قَامَ إِلَى جَنْبِي عُبَادَةُ بْنُ الصَّامِتِ فَقَرَأَ مَعَ الْإِمَامِ وَهُوَ يَقْرَأُ فَلَمَّا انْصَرَفَ قُلْتُ لَهُ: أَبَا الْوَلِيدِ تَقْرَأُ وَتَسْمَعُ وَهُوَ يَجْهَرُ بِالْقِرَاءَةِ؟ , قَالَ: نَعَمْ إِنَّا قَرَأْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَغَلَطَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ سَبَّحَ , فَقَالَ لَنَا حِينَ انْصَرَفَ: «هَلْ قَرَأَ مَعِيَ أَحَدٌ؟» , قُلْنَا: نَعَمْ , قَالَ: «قَدْ عَجِبْتُ قُلْتُ مَنْ هَذَا الَّذِي يُنَازِعُنِي الْقُرْآنَ , إِذَا قَرَأَ الْإِمَامُ فَلَا تَقْرَءُوا مَعَهُ إِلَّا بِأُمِّ الْقُرْآنِ فَإِنَّهُ لَا صَلَاةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِهَا».


Daraqutni-1221

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1221.


أَتَيْتُ عُبَادَةَ بْنَ الصَّامِتِ فَذَكَرَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَهُ , وَقَالَ فِيهِ: «فَلَا يَقْرَأَنَّ أَحَدٌ مِنْكُمْ إِلَّا بِفَاتِحَةِ الْكِتَابِ فَإِنَّهُ لَا صَلَاةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِهَا»


Daraqutni-1220

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1220.

…அபூநுஐம் அவர்கள் சப்தமிட்டு கிராஅத் ஓதும் போது உப்பாதா பின் சாமித் அவர்கள் உம்முல் குர்ஆன் (அல்ஹம்து சூராவை சப்தமிட்டு ஓதுவதை) நான் செவியேற்றேன். நீங்கள் உங்கள் தொழுகையில் ஒன்றைச் செய்ததை நான் கண்டேனே என்று கூறினேன். அது என்ன? என்று அவர் கேட்டார். அபூ நுஐம் சப்தமிட்டு ஓதும்போது நீங்கள் உம்முல் குர்ஆன் (அல்ஹம்து சூராவை சப்தமிட்டு) ஓதுவதை நான் செவியேற்றேன்“ என்று கூறினார். அதற்கவர் “ஆம், நபியவர்கள் சப்தமிட்டு ஓதும் சில தொழுகைகளை எங்களுக்குத் தொழுவித்தார்கள் அவர்கள் தொழுது முடித்ததும் ”நான் சப்தமிட்டு ஓதும் போது உங்களில் யாராவது குர்ஆனிலிருந்து எதையேனும் ஓதுகிறீர்களா? எனக் கேட்டார்கள். நாங்கள் “ஆம் அல்லாஹ்வின் தூதரே“ என்று கூறினோம். அதற்கு நபியவர்கள் “நான் (தொழும் போது) குர்ஆனிலே நான் தடுமாறுகிறேனே! எனக்கு என்ன நேர்ந்தது? என்று (எனக்குள்) எண்ணிக் கொண்டேன். நான் சப்தமிட்டு கிராஅத் ஓதும் போது உம்முல் குர்ஆனைத் தவிர குர்ஆனிலிருந்து வேறு எதையும் உங்களில் எவரும் ஓத வேண்டாம்“ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: மஹ்மூத் பின் ரபீஃ


إِنَّهُ سَمِعَ عُبَادَةَ بْنَ الصَّامِتِ , يَقْرَأُ بِأُمِّ الْقُرْآنِ وَأَبُو نُعَيْمٍ يَجْهَرُ بِالْقِرَاءَةِ , فَقُلْتُ: رَأَيْتُكَ صَنَعْتَ فِي صَلَاتِكَ شَيْئًا , قَالَ: وَمَا ذَاكَ؟ , قَالَ: سَمِعْتُكَ تَقْرَأُ بِأُمِّ الْقُرْآنِ وَأَبُو نُعَيْمٍ يَجْهَرُ بِالْقِرَاءَةِ , قَالَ: نَعَمْ صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْضَ الصَّلَوَاتِ الَّتِي يُجْهَرُ فِيهَا بِالْقِرَاءَةِ فَلَمَّا انْصَرَفَ , قَالَ: «مِنْكُمْ مِنْ أَحَدٍ يَقْرَأُ شَيْئًا مِنَ الْقُرْآنِ إِذَا جَهَرْتُ بِالْقِرَاءَةِ؟» , قُلْنَا: نَعَمْ يَا رَسُولَ اللَّهِ , فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَأَنَا أَقُولُ مَا لِي أُنَازَعُ الْقُرْآنَ فَلَا يَقْرَأَنَّ أَحَدٌ مِنْكُمْ شَيْئًا مِنَ الْقُرْآنِ إِذَا جَهَرْتُ بِالْقِرَاءَةِ إِلَّا بِأُمِّ الْقُرْآنِ».


Daraqutni-1219

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1219.


سَأَلَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلْ تَقْرَءُونَ مَعِيَ وَأَنَا أُصَلِّي؟» قُلْنَا: إِنَّا نَقْرَأُ نَهُذُّهُ هَذًّا وَنَدْرُسُهُ دَرْسًا , قَالَ: «فَلَا تَقْرَءُوا إِلَّا بِأُمِّ الْقُرْآنِ سِرًّا فِي أَنْفُسَكُمْ»


Next Page » « Previous Page