Category: ஸுனன் குப்ரா-பைஹகீ

Sunan al-Kubra lil Behaqi
Al-Sunan al-Kabir

Kubra-Bayhaqi-3967

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3967. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உளூ இல்லாதவருக்கு தொழுகை இல்லை. உளூச் செய்யும் போது பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் பெயரால் என்று) கூறாதவருக்கு உளூ இல்லை. தனது தொழுகையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறாதவருக்கு தொழுகை இல்லை.

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி)


لَا صَلَاةَ لِمَنْ لَا وُضُوءَ لَهُ، وَلَا وُضُوءَ لِمَنْ لَا يَذْكُرُ اسْمَ اللهِ عَلَيْهِ وَلَا صَلَاةَ لِمَنْ لَمْ يُصَلِّ عَلَى نَبِيِّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

أَخْبَرَنَاهُ أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ ثنا أَبُو عَبْدِ اللهِ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ أَحْمَدَ الصَّفَّارُ ثنا الْحَسَنُ بْنُ عَلِيِّ بْنِ بَحْرٍ الْبُرِّيُّ ثنا أَبِي قَالَ: حَدَّثَنِي عَبْدُ الْمُهَيْمِنِ فَذَكَرَهُ


Kubra-Bayhaqi-194

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

194. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உளூ இல்லாதவருக்கு தொழுகை இல்லை. அல்லாஹ்வின் பெயர் கூறி உளூச் செய்யாதவருக்கு உளூ இல்லை. அன்ஸாரீ நபித்தோழர்களை நேசிக்காதவர் என்னை நம்பிக்கை கொண்டவராக ஆகமாட்டார்.

அறிவிப்பவர்: ஸயீத் பின் ஸைத் (ரலி)


لَا صَلَاةَ لِمَنْ لَا وُضُوءَ لَهُ، وَلَا وُضُوءَ لِمَنْ لَمْ يَذْكُرِ اسْمَ اللهِ عَلَيْهِ، وَلَا يُؤْمِنُ بِي مَنْ لَا يُحِبُّ الْأَنْصَارَ


Kubra-Bayhaqi-193

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

193. உளூ இல்லாதவருக்கு தொழுகை இல்லை. அல்லாஹ்வின் பெயர் கூறி உளூச் செய்யாதவருக்கு உளூ இல்லை. என்னை நம்பிக்கை கொள்ளாதவர் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவராக ஆகமாட்டார். அன்ஸாரீ நபித்தோழர்களை நேசிக்காதவர் என்னை நம்பிக்கை கொண்டவராக ஆகமாட்டார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: ஸயீத் பின் ஸைத் (ரலி)


لَا صَلَاةَ لِمَنْ لَا وُضُوءَ لَهُ، وَلَا وُضُوءَ لِمَنْ لَمْ يَذْكُرِ اسْمَ اللهِ عَلَيْهِ، وَلَا يُؤْمِنُ بِاللهِ مَنْ لَا يُؤْمِنُ بِي، وَلَا يُؤْمِنُ بِي مَنْ لَا يُحِبُّ الْأَنْصَارَ


Kubra-Bayhaqi-184

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

184. அப்துல்அஸீஸ் பின் முஹம்மது அத்தராவர்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உளூ இல்லாதவருக்கு தொழுகை இல்லை என்ற நபிமொழியின் கருத்து என்னவென்றால், தொழுகைக்காக உளூச் செய்பவர், பெருந் தொடக்கை நீக்க குளிப்பவர் தொழுகைக்காக உளூச் செய்கிறேன் என்றோ அல்லது பெருந் தொடக்கை நீக்க குளிக்கிறேன் என்றோ நிய்யத் செய்யாமல் உளூச் செய்தால் அவருக்கு உளூ இல்லை, குளிப்பு இல்லை என்பதாகும் என்று ரபீஆ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.


وَذَكَرَ رَبِيعَةُ أَنَّ تَفْسِيرَ حَدِيثِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” لَا وُضُوءَ لِمَنْ لَمْ يَذْكُرِ اسْمَ اللهِ عَلَيْهِ “. أَنَّهُ الَّذِي يَتَوَضَّأُ وَيَغْتَسِلُ، وَلَا يَنْوِي وُضُوءًا لِلصَّلَاةِ، وَلَا غُسْلًا لِلْجَنَابَةِ


Kubra-Bayhaqi-200

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

200. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் அல்லாஹ்வின் பெயர் கூறி உளூச் செய்தால் அவரின் உடல் முழுவதும் தூய்மையாகும். அல்லாஹ்வின் பெயர் கூறாமல் உளூச் செய்தால் அவரின் உளூவின் அவயங்கள் தவிர மற்றவை தூய்மையாகாது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


مَنْ تَوَضَّأَ وَذَكَرَ اسْمَ اللهِ تَطَهَّرَ جَسَدُهُ كُلُّهُ، وَمَنْ تَوَضَّأَ وَلَمْ يَذْكُرِ اسْمَ اللهِ لَمْ يَتَطَهَّرْ إِلَّا مَوْضِعُ الْوُضُوءِ


Kubra-Bayhaqi-196

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

196. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் பெயர் கூறாமல் உளூச் செய்தவர் உளூச் செய்தவராக ஆகமாட்டார். உளூச்செய்யாமல் தொழுதவர் தொழுதவராக ஆகமாட்டார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


مَا تَوَضَّأَ مَنْ لَمْ يَذْكُرِ اسْمَ اللهِ عَلَيْهِ، وَمَا صَلَّى مَنْ لَمْ يَتَوَضَّأْ


Kubra-Bayhaqi-195

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

195. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உளூ இல்லாதவருக்கு தொழுகை இல்லை. உளூச் செய்யும் போது பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் பெயரால் என்று) கூறாதவருக்கு உளூ இல்லை.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


لَا صَلَاةَ لِمَنْ لَا وُضُوءَ لَهُ، وَلَا وُضُوءَ لِمَنْ لَا يَذْكُرِ اسْمَ اللهِ عَلَيْهِ


Kubra-Bayhaqi-183

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

183.  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உளூ இல்லாதவருக்கு தொழுகை இல்லை. உளூச் செய்யும் போது பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் பெயரால் என்று) கூறாதவருக்கு உளூ இல்லை.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


لَا صَلَاةَ لِمَنْ لَا وُضُوءَ لَهُ، وَلَا وُضُوءَ لِمَنْ لَمْ يَذْكُرِ اسْمَ اللهِ عَلَيْهِ


Kubra-Bayhaqi-192

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

192. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உளூ இல்லாதவருக்கு அவரின் தொழுகை செல்லுபடியாகாது. உளூச் செய்யும் போது பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் பெயரால் என்று) கூறாதவருக்கு அவரின் உளூ செல்லுபடியாகாது.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)


لَا صَلَاةَ لِمَنْ لَا وُضُوءَ لَهُ، وَلَا وُضُوءَ لِمَنْ لَمْ يَذْكُرِ اسْمَ اللهِ عَلَيْهِ


Kubra-Bayhaqi-16783

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

16783.


كُنْتُ بِالشَّامِ , فَبَعَثَ الْمُهَلَّبُ سِتِّينَ رَأْسًا مِنَ الْخَوَارِجِ , فَنُصِبُوا عَلَى دَرَجِ دِمَشْقَ , وَكُنْتُ عَلَى ظَهْرِ بَيْتٍ لِي إِذْ مَرَّ أَبُو أُمَامَةَ , فَنَزَلْتُ فَاتَّبَعْتُهُ , فَلَمَّا وَقَفَ عَلَيْهِمْ دَمَعَتْ عَيْنَاهُ وَقَالَ: سُبْحَانَ اللهِ مَا يَصْنَعُ الشَّيْطَانُ بِبَنِي آدَمَ , ثَلَاثًا , كِلَابُ جَهَنَّمَ , كِلَابُ جَهَنَّمَ , شَرُّ قَتْلَى تَحْتَ ظِلِّ السَّمَاءِ , ثَلَاثَ مَرَّاتٍ , خَيْرُ قَتْلَى مَنْ قَتَلُوهُ , طُوبَى لِمَنْ قَتَلَهُمْ أَوْ قَتَلُوهُ ثُمَّ الْتَفَتَ إِلَيَّ فَقَالَ: يَا أَبَا غَالِبٍ أَعَاذَكَ اللهُ مِنْهُمْ , قُلْتُ: رَأَيْتُكَ بَكَيْتَ حِينَ رَأَيْتَهُمْ؟ قَالَ: بَكَيْتُ رَحْمَةً , رَأَيْتُهُمْ كَانُوا مِنْ أَهْلِ الْإِسْلَامِ , هَلْ تَقْرَأُ سُورَةَ آلِ عِمْرَانَ؟ قُلْتُ: نَعَمْ , فَقَرَأَ: {هُوَ الَّذِي أَنْزَلَ عَلَيْكَ الْكِتَابَ مِنْهُ آيَاتٌ مُحْكَمَاتٌ هُنَّ أُمُّ الْكِتَابِ} [آل عمران: 7] , حَتَّى بَلَغَ {وَمَا يَعْلَمُ تَأْوِيلَهُ إِلَّا اللهُ} [آل عمران: 7] , وَإِنَّ هَؤُلَاءِ كَانَ فِي قُلُوبِهِمْ زَيْغٌ , وَزِيغَ بِهِمْ , ثُمَّ قَرَأَ {وَلَا تَكُونُوا كَالَّذِينَ تَفَرَّقُوا وَاخْتَلَفُوا} [آل عمران: 105] إِلَى قَوْلِهِ: {فَفِي رَحْمَةِ اللهِ هُمْ فِيهَا خَالِدُونَ} [آل عمران: 107] , قُلْتُ: هُمْ هَؤُلَاءِ يَا أَبَا أُمَامَةَ؟ قَالَ: نَعَمْ , قُلْتُ: مِنْ قِبَلِكَ تَقُولُ , أَوْ شَيْءٌ سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: إِنِّي إِذًا لَجَرِيءٌ , بَل سَمِعْتُهُ لَا مَرَّةً , وَلَا مَرَّتَيْنِ , حَتَّى عَدَّ سَبْعًا , ثُمَّ قَالَ: إِنَّ بَنِي إِسْرَائِيلَ تَفَرَّقُوا عَلَى إِحْدَى وَسَبْعِينَ فِرْقَةً , وَإِنَّ هَذِهِ الْأُمَّةَ تَزِيدُ عَلَيْهِمْ [ص:326] فِرْقَةً , كُلُّهَا فِي النَّارِ إِلَّا السَّوَادُ الْأَعْظَمُ , قُلْتُ: يَا أَبَا أُمَامَةَ أَلَا تَرَى مَا يَفْعَلُونَ؟ قَالَ: عَلَيْهِمْ مَا حُمِّلُوا , وَعَلَيْكُمْ مَا حُمِّلْتُمْ


Next Page » « Previous Page