Category: ஸுனன் குப்ரா-பைஹகீ

Sunan al-Kubra lil Behaqi
Al-Sunan al-Kabir

Kubra-Bayhaqi-8083

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

8083. நோன்பாளி கட்டியணைப்பது பற்றி ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதி அளித்தார்கள். மற்றொருவர் வந்து கேட்ட போது அவருக்கு அனுமதி மறுத்தார்கள். அனுமதி வழங்கப்பட்டவர் முதியவராகவும், அனுமதி மறுக்கப்பட்டவர் இளைஞராகவும் இருந்தனர்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْمُبَاشَرَةِ لِلصَّائِمِ فَرَخَّصَ لَهُ , وَأَتَاهُ آخَرُ فَسَأَلَهُ فَنَهَاهُ، فَإِذَا الَّذِي رَخَّصَ لَهُ شَيْخٌ، وَالَّذِي نَهَاهُ شَابٌّ


Kubra-Bayhaqi-13459

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

13459. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ், அடியானுக்கு சொர்க்கத்தில் அந்தஸ்தை உயர்த்துவான். அப்போது அந்த அடியான், “என் இறைவா இது எனக்கு எப்படிக் கிடைத்தது?” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “உனக்காக உன் குழந்தை பாவமன்னிப்புக் கேட்டதால் (உனக்கு இந்த அந்தஸ்து கிடைத்தது)” என்று கூறுவான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


إِنَّ اللهَ لَيَرْفَعُ الْعَبْدَ الدَّرَجَةَ فَيَقُولُ: رَبِّ أَنَّى لِي هَذِهِ الدَّرَجَةُ، فَيَقُولُ: بِدُعَاءِ وَلَدِكَ لَكَ


Kubra-Bayhaqi-7952

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7952. ஸிலது பின் ஸுஃபர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள், சந்தேகத்திற்குரிய நாளில் (ஷஃபானின் முப்பதாம் நாளில்) அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்களிடம் இருந்தபோது அவர்கள் ஆட்டுக்கறியை கொண்டு வந்து (வைத்து) சாப்பிடுங்கள் என்று கூறினார்கள். அப்போது (நோன்பு வைத்திருந்த) சிலர் விலகிச் சென்றனர். அதற்கு அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்கள், சந்தேகத்திற்குரிய நாளில் (ஷஃபானின் முப்பதாம் நாளில்) யார் நோன்பு நோற்கிறாரோ அவர் அபுல்காஸிம்-நபி (ஸல்) அவர்களுக்கு மாறு செய்து விட்டார் என்றுக் கூறினார்கள்.


كُنَّا عِنْدَ عَمَّارِ بْنِ يَاسِرٍ، فَأَتَى بِشَاةٍ مَصْلِيَّةٍ، فَقَالَ: كُلُوا فَتَنَحَّى بَعْضُ الْقَوْمِ، فَقَالَ إِنِّي صَائِمٌ، فَقَالَ عَمَّارٌ: ” مَنْ صَامَ يَوْمَ الشَّكِّ فَقَدْ عَصَى أَبَا الْقَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Kubra-Bayhaqi-8028

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8028.


وَأَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، ثنا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ , ثنا إِبْرَاهِيمُ بْنُ أَبِي دَاوُدَ الْبُرُلُّسِيُّ، ثنا أَبُو سَعِيدٍ يَحْيَى بْنُ سُلَيْمَانَ الْجُعْفِيُّ , ثنا حَفْصُ بْنُ غِيَاثٍ، ثنا هِشَامُ بْنُ حَسَّانَ، فَذَكَرَهُ بِمَعْنَاهُ، تَفَرَّدَ بِهِ هِشَامُ بْنُ حَسَّانَ الْفِرْدَوْسِيُّ وَقَدْ أَخْرَجَهُ أَبُو دَاوُدَ فِي السُّنَنِ , وَبَعْضُ الْحُفَّاظِ لَا يَرَاهُ مَحْفُوظًا. قَالَ أَبُو دَاوُدَ: سَمِعْتُ أَحْمَدَ بْنَ حَنْبَلٍ يَقُولُ: لَيْسَ مِنْ ذَا شَيْءٌ , قُلْتُ: وَقَدْ رُوِيَ مِنْ وَجْهٍ آخَرَ ضَعِيفٍ عَنْ أَبِي هُرَيْرَةَ مَرْفُوعًا، وَرُوِيَ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّهُ قَالَ فِي الْقَيْءِ: ” لَا يُفْطِرُ


Kubra-Bayhaqi-8027

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8027. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நோன்பாளிக்கு கட்டுப்படுத்த முடியாமல் (தானாக) வாந்தி வந்தால் அவர் நோன்பை (களாவாக) மீண்டும் நிறைவேற்றுவது கடமை இல்லை. வேண்டுமென்றே வாந்தி எடுத்தால் அவர் நோன்பை (களாவாக) மீண்டும் நிறைவேற்ற வேண்டும்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)


مَنْ ذَرَعَهُ الْقَيْءُ وَهُوَ صَائِمٌ فَلَيْسَ عَلَيْهِ قَضَاءٌ، وَإِنِ اسْتَقَاءَ فَلْيَقْضِ


Kubra-Bayhaqi-8134

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

8134. முஆத் பின் ஸுஹ்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் நோன்புத் துறக்கும் போது, “அல்லாஹும்ம லக ஸும்து வ அலா ரிஸ்க்கிக அஃப்த்தர்து” (பொருள்: அல்லாஹ்வே! உனக்காக நோன்பு வைத்தேன். உனது உணவினால் நோன்புத் துறக்கின்றேன்) எனக் கூறுவார்கள் என்ற செய்தி எனக்கு கிடைத்தது.

அறிவிப்பவர்: ஹுஸைன் பின் அப்துர்ரஹ்மான் (ரஹ்)


أَنَّهُ بَلَغَهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَفْطَرَ قَالَ: ” اللهُمَّ لَكَ صُمْتُ، وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ


Kubra-Bayhaqi-8504

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8504. அபூஹுரைரா (ரலிஅவர்கள் அறிவித்தார்கள்:

ஒரு முறை நபி {ஸல்} அவர்கள் சொற்பொழிவு மேடை மீது ஏறும் போது மூன்று முறை “ஆமீன்” கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! (நீங்கள் மிம்பரின் மீது ஏறும் போது “ஆமீன்” என மூன்று முறை கூறினீர்களே!) இது போன்று இதற்கு முன் செய்ததில்லையே என வினவப்பட்டது.

என்னிடம் வானவர் ஜிப்ரயீல் (அலை) வருகை தந்து, “யார் ரமலான் மாதத்தை அடைந்தும் அவன் பாவங்கள் மன்னிக்கப்படவில்லையோ அவன் மூக்கு மண்ணைக் கவ்வட்டும் என்று கூறினார். நான் ஆமீன் என்றேன்.

பிறகு, “யாரிடத்தில் (முஹம்மதாகிய) நீங்கள் நினைவுகூறப்பட்டும் அவன் உங்கள் மீது ஸலவாத் கூறவில்லையோ அவன் மூக்கு மண்ணைக் கவ்வட்டும் என்று கூறினார். நான் ஆமீன் என்றேன்.

பிறகு, “தம் பெற்றோரில் ஒருவரையோ அல்லது அவர்கள் இருவரையுமோ முதுமைப் பருவத்தில் அடைந்தும் (அவர்களுக்கு உடலாலும் பொருளாலும் ஊழியம் செய்து, அதன் மூலம்) சொர்க்கம் செல்லத் தவறியவரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும் என்று கூறினார். நான் ஆமீன் என்றேன்” என்று (பதில்) கூறினார்கள்.


أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ارْتَقَى الْمِنْبَرَ فَقَالَ: ” آمِينَ آمِينَ آمِينَ ”  فَقِيلَ لَهُ: يَا رَسُولَ اللهِ مَا كُنْتَ تَصْنَعُ هَذَا؟ فَقَالَ: ” قَالَ لِي جَبْرَائِيلُ عَلَيْهِ السَّلَامُ: رَغِمَ أَنْفُ عَبْدٍ دَخَلَ عَلَيْهِ رَمَضَانُ فَلَمْ يُغْفَرْ لَهُ، فَقُلْتُ: آمِينَ، ثُمَّ قَالَ: رَغِمَ أَنْفُ عَبْدٍ ذُكِرْتَ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيْكَ فَقُلْتُ: آمِينَ، ثُمَّ قَالَ: رَغِمَ أَنْفُ عَبْدٍ أَدْرَكَ وَالِدَيْهِ أَوْ أَحَدَهُمَا فَلَمْ يَدْخُلِ الْجَنَّةَ فَقُلْتُ: آمِينَ “

لَفْظُ حَدِيثِ عَبْدِ الْعَزِيزِ

وَفِي رِوَايَةِ سُلَيْمَانَ رَقِيَ الْمِنْبَرَ وَقَالَ: رَغِمَ أَنْفُ عَبْدٍ أَوْ بَعْدُ


Kubra-Bayhaqi-13407

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

13407. நபி (ஸல்) அவர்கள் இரத்தம் குத்தி எடுத்துக்கொண்டிருக்கும் போது அவர்களிடத்தில் நான் வந்தேன். அந்த வேலை முடிந்தவுடன் அவர்கள், “அப்துல்லாஹ்வே” என்று (என்னை) அழைத்து, “இந்த இரத்தத்தைக் கொண்டு சென்று இதை யாரும் பார்க்காதவாறு கீழே கொட்டிவிடு” என்று கூறினார்கள்.

நான் நபி (ஸல்) அவர்களை விட்டுத் தனியே சென்று அதைக் குடித்து விட்டேன். நான் அவர்களிடம் திரும்பி வந்தபோது, “அப்துல்லாஹ்வே! அதை நீ என்ன செய்தாய்?” என்று கேட்டார்கள். “மக்களை விட்டும் மறைவான இடம் என்று நான் கருதிய ஒரு இடத்தில் அதை வைத்துவிட்டேன்” என்று நான் கூறினேன். அவர்கள், “அதை நீ குடித்து விட்டாயா?” என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். உடனே அவர்கள், “இரத்தத்தைக் குடிக்குமாறு உனக்கு ஏவியது யார்? மக்களால் உனக்குக் கேடு உண்டாகட்டும். உன்னால் மக்களுக்குக் கேடு உண்டாகட்டும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி)


احْتَجَمَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَعْطَانِي دَمَهُ، وَقَالَ: ” اذْهَبْ فَوَارِهِ لَا يَبْحَثُ عَنْهُ سَبُعٌ أَوْ كَلْبٌ أَوْ إِنْسَانٌ ” قَالَ: فَتَنَحَّيْتُ عَنْهُ فَشَرِبْتُهُ، ثُمَّ أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: ” مَا صَنَعْتَ؟ ” قُلْتُ: صَنَعْتُ الَّذِي أَمَرْتَنِي قَالَ: ” مَا أَرَاكَ إِلَّا قَدْ شَرِبْتَهُ ” قُلْتُ: نَعَمْ قَالَ: ” مَاذَا تَلْقَى أُمَّتِي مِنْكَ؟ ” قَالَ أَبُو جَعْفَرٍ: وَزَادَنِي بَعْضُ أَصْحَابِ الْحَدِيثِ عَنْ أَبِي سَلَمَةَ قَالَ: فَيَرَوْنَ أَنَّ الْقُوَّةَ الَّتِي كَانَتْ فِي ابْنِ الزُّبَيْرِ مِنْ قُوَّةِ دَمِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Kubra-Bayhaqi-14709

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

14709. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு பெண் தன் கணவருடன் படுக்கையை(ப் பகிர்ந்து கொள்வதை) வெறுத்து (தனியாக) இரவைக் கழித்தால், காலை விடியும் வரை அல்லது (கணவனின் படுக்கைக்கு) அவள் திரும்பும் வரை வானவர்கள் அவளைச் சபிக்கின்றனர்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

 

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூதாவூத் தயாலிஸீ அவர்கள் காலை விடியும் வரை அல்லது (கணவனின் படுக்கைக்கு) அவள் திரும்பும் வரை என்று சந்தேகமாக அறிவிக்கிறார்.


إِذَا بَاتَتِ الْمَرْأَةُ هَاجِرَةً لِفِرَاشِ زَوْجِهَا لَعَنَتْهَا الْمَلَائِكَةُ حَتَّى تُصْبِحَ أَوْ تُرَاجِعَ

شَكَّ أَبُو دَاوُدَ


Kubra-Bayhaqi-14708

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

14708. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தன் மனைவியைப் படுக்கைக்கு அழைத்து, அவள் (அவருக்கு உடன்பட) மறுத்துவிட, அதன் விளைவாக அவர் இரவைக் கோபத்துடன் கழித்தாரென்றால் அவளை, காலை விடியும் வரை வானவர்கள் சபித்துக் கொண்டேயிருக்கின்றனர்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)


إِذَا دَعَا الرَّجُلُ امْرَأَتَهُ إِلَى فِرَاشِهِ فَأَبَتْ فَبَاتَ غَضْبَانًا لَعَنَتْهَا الْمَلَائِكَةُ حَتَّى تُصْبِحَ


Next Page » « Previous Page