Category: ஸுனன் குப்ரா-பைஹகீ

Sunan al-Kubra lil Behaqi
Al-Sunan al-Kabir

Kubra-Bayhaqi-16522

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

16522. நபி (ஸல்) அவர்கள் எதற்கும் சகுனம் பார்த்ததில்லை. (வரிவாங்குவதற்கு) அதிகாரியை அவர்கள் அனுப்பும் போது அவருடையப் பெயரைப் பற்றிக் கேட்பார்கள். அவருடையப் பெயர் அவர்களுக்குப் பிடித்திருந்தால் சந்தோஷம் அடைவார்கள். அவர்களுடைய முகத்தில் அதனால் மகிழ்ச்சி தென்படும். அவருடைய பெயரை அவர்கள் வெறுத்தால் அதன் வெறுப்பு அவர்களது முகத்தில் தென்படும். அவர்கள் ஒரு ஊருக்குச் சென்றால் அதன் பெயரைப் பற்றி விசாரிப்பார்கள். அதன் பெயர் அவர்களுக்குப் பிடித்திருந்தால் அதனால் சந்தோஷம் அடைவார்கள். அதனால் அவர்களுடைய முகத்தில் மகிழ்ச்சி தென்படும். அதன் பெயரை அவர்கள் வெறுத்தால் அதன் வெறுப்பு அவர்களின் முகத்தில் தென்படும்.

அறிவிப்பவர் : புரைதா (ரலி)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ لَا يَتَطَيَّرُ مِنْ شَيْءٍ , وَكَانَ إِذَا بَعَثَ عَامِلًا سَأَلَ عَنِ اسْمِهِ , فَإِذَا أَعْجَبَهُ اسْمُهُ فَرِحَ بِهِ , وَرُئِيَ بِشْرُ ذَلِكَ فِي وَجْهِهِ , وَإِنْ كَرِهَ اسْمَهُ رُئِيَ كَرَاهِيَةُ ذَلِكَ فِي وَجْهِهِ , وَإِذَا دَخَلَ قَرْيَةً سَأَلَ عَنِ اسْمِهَا , فَإِنْ أَعْجَبَهُ اسْمُهَا فَرِحَ بِهَا , وَرُئِيَ بِشْرُ ذَلِكَ فِي وَجْهِهِ , وَإِنْ كَرِهَ اسْمَهَا رُئِيَ كَرَاهِيَةُ ذَلِكَ فِي وَجْهِهِ


Kubra-Bayhaqi-19308

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

19308. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாளில் உங்களுடைய தந்தையின் பெயருடன் உங்களது பெயரால்  நீங்கள் அழைக்கப்படுவீர்கள். ஆகையால் உங்களது பெயர்களை அழகுபடுத்திக் கொள்ளுங்கள்.

அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி)


إِنَّكُمْ تُدْعَوْنَ يَوْمَ الْقِيَامَةِ بِأَسْمَائِكُمْ وَأَسْمَاءِ آبَائِكُمْ , فَأَحْسِنُوا أَسْمَاءَكُمْ


Kubra-Bayhaqi-7064

ஹதீஸின் தரம்: More Info

7064. உஸ்மான் (ரலி) அவர்கள் மண்ணறைக்கு அருகில் நின்றால் தாடி நனைகின்ற அளவு அழுவார்கள். சொர்க்கம், நரகத்தைப் பற்றி கூறப்படும் போது தாங்கள் அழுவதில்லை. ஆனால் மண்ணறையைப் பார்த்தால் அழுகிறீர்களே ஏன் ? என்று அவர்களிடத்தில் வினவப்பட்டது.

அதற்கு அவர்கள், “மண்ணறை மறுமையின் நிலைகளில் முதல் நிலையாகும். இதில் இருந்து ஒருவன் ஈடேற்றம் பெற்றுவிட்டால் இதன் பிறகு உள்ளவை இதை விட எளிதானதாகும். இதிலிருந்து அவன் ஈடேற்றம் பெறாவிட்டால் இதற்குப் பின்னுள்ளவை இதைவிடக் கடினமாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன் என்று பதில் கூறினார்கள்.

மேலும், “நான் கண்ட காட்சிகளிலேயே மண்ணறை தான் மிகக் கோரமாக இருந்தது என்று உஸ்மான் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

மேலும், இறந்தவரின் பிரேதத்தை அடக்கம் செய்த பின், (மக்களை நோக்கி) ‘உங்கள் சகோதரருக்காகப் பாவமன்னிப்புத் தேடுங்கள். அவருக்காக உறுதிப்பாட்டைக் கேளுங்கள். ஏனெனில் அவர் இப்போது விசாரிக்கப்படுகிறார்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள் என உஸ்மான் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஹானிஉ (ரஹ்)

 

ஹிஷாம் பின் யூஸுஃப் அவர்களிடமிருந்து அறிவிக்கும் மற்ற அறிவிப்பாளர்கள், அடக்கம் செய்த பின் “கப்ரின் அருகில் நின்று” என்ற வார்த்தையை கூடுதலாக

كَانَ عُثْمَانُ رَضِيَ اللهُ عَنْهُ إِذَا وَقَفَ عَلَى قَبْرٍ بَكَى حَتَّى يَبُلَّ لِحْيَتَهُ , قَالَ: فَيُقَالُ لَهُ: تَذْكُرُ الْجَنَّةَ وَالنَّارَ فَلَا تَبْكِي وَتَبْكِي مِنْ هَذَا؟ قَالَ: فَقَالَ: إِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” إِنَّ الْقَبْرَ أَوَّلُ مَنَازِلِ الْآخِرَةِ فَمَنْ نَجَا مِنْهُ فَمَا بَعْدَهُ أَيْسَرُ مِنْهُ وَمَنْ لَمْ يَنْجُ مِنْهُ فَمَا بَعْدَهُ أَشَدُّ مِنْهُ

قَالَ: وَقَالَ عُثْمَانُ: ” مَا رَأَيْتُ مَنْظَرًا قَطُّ إِلَّا وَالْقَبْرُ أَفْظَعُ مِنْهُ

قَالَ عُثْمَانُ رَضِيَ اللهُ عَنْهُ: وَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا فَرَغَ مِنْ دَفْنِ الْمَيِّتِ قَالَ: ” اسْتَغْفِرُوا لِمَيِّتِكُمْ وَسَلُوا لَهُ التَّثْبِيتَ فَإِنَّهُ الْآنَ يُسْأَلُ “

زَادَ فِيهِ غَيْرُهُ عَنْ هِشَامٍ وَوَقَفَ عَلَيْهِ فَقَالَ: ” اسْتَغْفِرُوا ” وَأَسْنَدَ قَوْلَهَ: مَا رَأَيْتُ مَنْظَرًا إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Kubra-Bayhaqi-6600

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம் :

மரணம் நெருங்கியவரிடம் ஓதவேண்டியவை.

6600. உங்களில் மரணவேளை நெருங்கியவர்களுக்கு யாஸீன் (36-வது) அத்தியாயத்தை ஓதுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : மஃகில் பின் யஸார் (ரலி)

 


اقْرَءُوهَا عِنْدَ مَوْتَاكُمْ،

يَعْنِي سُورَةَ يس


Kubra-Bayhaqi-7097

ஹதீஸின் தரம்: Pending

7097. ஜஃபர் பின் அபூதாலிப் (ரலி) அவர்களின் மரணசெய்தி அறிவிக்கப்பட்டபோது, ஜஃபரின் வீட்டினருக்கு கவலை தரும் செய்தி வந்து விட்டதால் அவரது குடும்பத்தாருக்காக உணவு செய்து கொடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஜஃபர் (ரலி)


لَمَّا نُعِيَ جَعْفَرٌ , قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” اصْنَعُوا لِآلِ جَعْفَرٍ طَعَامًا فَقَدْ أَتَاهُمْ أَمْرٌ يَشْغَلُهُمْ


Kubra-Bayhaqi-7096

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7096. (ஜஃபர் பின் அபூதாலிப் (ரலி) அவர்களின் மரணசெய்தி வந்தபோது) ஜஃபரின் வீட்டினருக்கு கவலை தரும் செய்தி வந்து விட்டதால் அவரது குடும்பத்தாருக்காக உணவு செய்து கொடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஜஃபர் (ரலி)


اصْنَعُوا لِآلِ جَعْفَرٍ طَعَامًا فَقَدْ أَتَاهُنَّ مَا يَشْغَلُهُنَّ ” , أَوْ ” أَتَاهُمْ مَا يَشْغَلُهُمْ


Kubra-Bayhaqi-6982

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6982. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாத் தொழுகை வைக்கும்போது, அதில் நான்கு தக்பீர்கள் கூறி ஒரு ஸலாம் கொடுத்தார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)


أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى عَلَى جِنَازَةٍ فَكَبَّرَ عَلَيْهَا أَرْبَعًا وَسَلَّمَ تَسْلِيمَةً


Kubra-Bayhaqi-6988

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6988.


أَمَّنَا عَبْدُ اللهِ بْنُ أَبِي أَوْفَى عَلَى جِنَازَةِ ابْنَتِهِ فَكَبَّرَ أَرْبَعًا، فَمَكَثَ سَاعَةً حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُكَبِّرُ خَمْسًا، ثُمَّ سَلَّمَ عَنْ يَمِينِهِ وَعَنْ شِمَالِهِ , فَلَمَّا انْصَرَفَ، قُلْنَا لَهُ: مَا هَذَا؟ قَالَ: ” إِنِّي لَا أَزِيدُكُمْ عَلَى مَا رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ ” , أَوْ ” هَكَذَا صَنَعَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ “، ثُمَّ رَكِبَ دَابَّتَهَ، وَقَالَ لِلْغُلَامِ: ” أَيْنَ أَنَا؟ ” قَالَ: أَمَامَ الْجِنَازَةِ، قَالَ: ” أَلَمْ أَنْهَكَ ” , وَكَانَ قَدْ كُفَّ يَعْنِي بَصَرُهُ


Kubra-Bayhaqi-6989

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6989. மூன்று காரியங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்துவந்தார்கள். ஆனால் மக்கள் அவற்றை விட்டுவிட்டனர். (கடமையான) தொழுகையில் ஸலாம் கூறுவது போன்று ஜனாஸாத் தொழுகையில் ஸலாம் கூறுவது அவற்றில் ஒன்றாகும்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)


ثَلَاثُ خِلَالٍ كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَلُهُنَّ، تَرَكَهُنَّ النَّاسُ , إِحْدَاهُنَّ: التَّسْلِيمُ عَلَى الْجِنَازَةِ مِثْلُ التَّسْلِيمِ فِي الصَّلَاةِ


Next Page » « Previous Page