Category: ஸுனன் குப்ரா-பைஹகீ

Sunan al-Kubra lil Behaqi
Al-Sunan al-Kabir

Kubra-Bayhaqi-7132

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7132. முஹம்மது பின் அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹம்னா பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம் (உஹதுப் போரில்) உமது சகோதரர் கொல்லப்பட்டு விட்டார் என்று கூறப்பட்டது. அதற்கு அவர்கள், அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாக! என்றும் “இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்” (நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்) என்றும் கூறினார்கள்.

உமது தாய்மாமன் ஹம்ஸா (ரலி) அவர்களும் கொல்லப்பட்டு விட்டார் என்று கூறப்பட்டது. அதற்கு அவர்கள், “இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்” (நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்) என்று கூறினார்கள்.

உமது கணவரும் (முஸ்அப் பின் உமைர்-ரலி) கொல்லப்பட்டு விட்டார் என்று கூறப்பட்டது. அதற்கு அவர்கள் (அவரின் பிரிவால்) நான் கவலையடைகிறேன் என்று கூறினார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ஒரு பெண்ணிடம் கணவனுக்கு மற்றவர்களுக்கில்லாத தனி மதிப்பு (அந்தஸ்து) உள்ளது என்று கூறினார்கள்.


أَنَّهُ قِيلَ لَهَا: قُتِلَ أَخُوكِ فَقَالَتْ: رَحِمَهُ اللهُ إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ , فَقِيلَ لَهَا: قُتِلَ خَالُكِ حَمْزَةُ فَقَالَتْ: رَحِمَهُ اللهُ إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ , فَقِيلَ لَهَا: قُتِلَ زَوْجُكِ , فَقَالَتْ: وَاحُزْنَاهُ , فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِنَّ لِلزَّوْجِ مِنَ الْمَرْأَةِ لَشُعْبَةً لَيْسَتْ لِشَيْءٍ


Kubra-Bayhaqi-6964

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

6964. இறந்தவருக்கு நீங்கள் தொழுகை நடத்தினால் அவருக்காக துஆவைக் கலப்பற்றதாகச் செய்யுங்கள்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


إِذَا صَلَّيْتُمْ عَلَى الْمَيِّتِ فَأَخْلِصُوا لَهُ الدُّعَاءَ


Kubra-Bayhaqi-6959

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

6959. முதலில் இமாம் தக்பீர் கூறுவதும், பின்னர் முதல் தக்பீருக்குப் பின் அல்ஹம்து அத்தியாயத்தை மனதுக்குள் ஓதுவதும், பின்னர் உள்ள தக்பீர்களில் குர்ஆனிலிருந்து எதனையும் ஓதாமல் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறி, இறந்தவருக்காகத் தூய்மையான முறையில் துஆச் செய்வதும், மனதுக்குள் ஸலாம் கூறுவதும் ஜனாஸாத் தொழுகையில் நபிவழியாகும் என்று ஒரு நபித் தோழர் கூறியதாக அபூ உமாமா (ரலி) அறிவிக்கிறார்.


أَنَّ السُّنَّةَ فِي الصَّلَاةِ عَلَى الْجِنَازَةِ أَنْ يُكَبِّرَ الْإِمَامُ، ثُمَّ يَقْرَأُ بِفَاتِحَةِ الْكِتَابِ بَعْدَ التَّكْبِيرَةِ الْأُولَى سِرًّا فِي نَفْسِهِ، ثُمَّ يُصَلِّي عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَيُخْلِصُ الدُّعَاءَ لِلْجِنَازَةِ، فِي التَّكْبِيرَاتِ لَا يَقْرَأُ فِي شَيْءٍ مِنْهُنَّ، ثُمَّ يُسَلِّمُ سِرًّا فِي نَفْسِهِ


Kubra-Bayhaqi-6991

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6991.


سَمِعْتُ سَهْلَ بْنَ سَعْدٍ السَّاعِدِيَّ، يَقُولُ لِسَعِيدٍ: ” مِنْ سُنَّةِ الصَّلَاةِ عَلَى الْمَيِّتِ أَنْ يُكَبِّرَ ثُمَّ يُصَلِّيَ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ يَجْتَهِدَ لِلْمَيِّتِ فِي الدُّعَاءِ، ثُمَّ يُسَلِّمَ فِي نَفْسِهِ


Kubra-Bayhaqi-6947

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6947. நபி (ஸல்) அவர்கள் காலத்தில், ஜனாஸாத் தொழுகையில் நபித்தோழர்கள் ஏழு, ஐந்து, ஆறு-அல்லது நான்கு தக்பீர்கள் கூறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

உமர் (ரலி) அவர்கள் காலத்தில், அவர் நபித்தோழர்களை ஒன்று திரட்டி அவர்களின் கருத்துக்களை கேட்டார்கள். பிறகு அனைவரையும் லுஹர் தொழுகையைப் போன்று நான்கு தக்பீர் என்ற கருத்துக்குக் கொண்டு வந்தார்கள்…

அறிவிப்பவர் : அபூவாயில் (ரஹ்)


كَانُوا يُكَبِّرُونَ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَبْعًا وَخَمْسًا وَسِتًّا ” , أَوْ قَالَ: ” أَرْبَعًا “، فَجَمَعَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ أَصْحَابَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخْبَرَ كُلُّ رَجُلٍ بِمَا رَأَى، فَجَمَعَهُمْ عُمَرُ رَضِيَ اللهُ عَنْهُ عَلَى أَرْبَعِ تَكْبِيرَاتٍ كَأَطْوَلِ الصَّلَاةِ


Kubra-Bayhaqi-6855

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6855. ஒரு ஜனாஸாவை பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்த போது சிலர் வாகனத்தில் வருவதை ஸவ்பான் (ரலி) அவர்கள் கண்டார்கள். அப்போது அவர்கள், அல்லாஹ்வின் வானவர்கள் நடந்து வரும் போது நீங்கள் வாகனத்தின் மேல் வருகிறீர்களே! இதற்கு வெட்கப்படமாட்டீர்களா? என்று அவர்களைப் பார்த்துக் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ராஷித் பின் ஸஃத் (ரஹ்)


أَنَّهُ خَرَجَ فِي جِنَازَةٍ فَرَأَى نَاسًا خُرُوجًا عَلَى دَوَابِّهِمْ رُكْبَانًا فَقَالَ لَهُمْ ثَوْبَانُ: ” أَلَا تَسْتَحْيُونَ؟ مَلَائِكَةُ اللهِ عَلَى أَقْدَامِهِمْ وَأَنْتُمْ رُكْبَانٌ


Kubra-Bayhaqi-6856

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6855. ஒரு ஜனாஸாவை பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்த போது சிலர் வாகனத்தில் வருவதை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் வானவர்கள் நடந்து வரும் போது நீங்கள் வாகனத்தின் மேல் வருகிறீர்களே! இதற்கு வெட்கப்படமாட்டீர்களா? என்று அவர்களைப் பார்த்துக் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி)


قَالَ خَرَجَ رَسُولُ اللهِ صَلَّى الله عَلَيهِ وَسَلَّمَ فِي جِنَازَةٍ فَرَأَى نَاسًا رُكْبَانًا، فَقَالَ: ” أَلَا تَسْتَحْيُونَ؟ إِنَّ مَلَائِكَةَ اللهِ عَلَى أَقْدَامِهِمْ وَأَنْتُمْ عَلَى ظُهُورِ الدَّوَابِّ


Kubra-Bayhaqi-6854

ஹதீஸின் தரம்: More Info

6854. நபி (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாவை பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்த போது வாகனம் கொண்டு வரப்பட்டது. அதில் ஏற மறுத்தார்கள். (அடக்கம் செய்து) திரும்பிய போது வாகனம் கொண்டு வரப்பட்டது. அதில் ஏறிக் கொண்டார்கள்.

அவர்களிடம் இது பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் ‘வானவர்கள் நடந்து வந்தனர். அவர்கள் நடக்கும் போது நான் வாகனத்தில் ஏறவில்லை. அவர்கள் சென்றதும்–அல்லது (வானத்தில்) மேல் ஏறிச்சென்றதும்–நான் வாகனத்தில் ஏறிக் கொண்டேன்’ என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி)


أَنَّ النَّبِيَّ صَلَّى الله عَلَيهِ وَسَلَّمَ شَيَّعَ جِنَازَةً، فَأُتِيَ بِدَابَّةٍ فَأَبَى أَنْ يَرْكَبَهَا، فَلَمَّا انْصَرَفَ أُتِيَ بِدَابَّةٍ فَرَكِبَهَا، فَقِيلَ لَهُ فَقَالَ: ” إِنَّ الْمَلَائِكَةَ كَانَتْ تَمْشِي فَلَمْ أَكُنْ لِأَرْكَبُ وَهُمْ يَمْشُونَ فَلَمَّا ذَهَبُوا أَوْ قَالَ عَرَجُوا رَكِبْتُ


Kubra-Bayhaqi-6655

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6655. ஒரு முஸ்லிமைக் குளிப்பாட்டுபவர் அவரிடம் உள்ள குறைகளை மறைத்தால் அவரை அல்லாஹ் நாற்பது தடவை மன்னிக்கிறான்;

அவரை அடக்கம் செய்ய (கப்ர்) குழி தோண்டி அதில் அடக்கம் செய்தால் அவர் மறுமை நாளில் எழுப்பப்படும் வரை அவருக்காக தங்குமிடத்தை ஏற்படுத்தியவருக்கு கிடைப்பதைப் போன்ற கூலியை அவர் கொடுக்கப்படுவார்;

இறந்த மனிதருக்கு கஃபன் ஆடை அணிவிப்பவருக்கு அல்லாஹ் மறுமையில் சொர்க்கத்தின் ஸுன்துஸ், இஸ்தப்ரக் எனும் பச்சைப் பட்டாடைகளை அணிவிக்கிறான்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பவர் : அபூ ராஃபிவு (ரலி)


مَنْ غَسَّلَ مُسْلِمًا فَكَتَمَ عَلَيْهِ غَفَرَ اللهُ لَهُ أَرْبَعِينَ مَرَّةً، وَمَنْ حَفَرَ لَهُ فَأَجَنَّهُ أَجْرَى عَلَيْهِ كَأَجْرِ مَسْكَنٍ أَسْكَنَهُ إِيَّاهُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ، وَمَنْ كَفَّنَهُ كَسَاهُ اللهُ يَوْمَ الْقِيَامَةِ مِنْ سُنْدُسِ وَإِسْتَبْرَقِ الْجَنَّةِ


Kubra-Bayhaqi-6622

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6622. ஹதீஸ் எண்-6621 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.

இதில் “குளிப்பாட்டும் போது அவர்கள் அணிந்திருந்த ஆடையின் மேல் தண்ணீரை ஊற்றி கைகளால் தேய்த்து கழுவாமல் சட்டையால் தேய்த்து கழுவினார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.


فَذَكَرَ الْحَدِيثَ بِمَعْنَاهُ. إِلَّا أَنَّهُ قَالَ: ” فَغَسَّلُوهُ وَعَلَيْهِ قَمِيصٌ يَصُبُّونَ الْمَاءَ فَوْقَ الْقَمِيصِ وَيُدَلِّكُونَهُ بِالْقَمِيصِ دُونَ أَيْدِيهِمْ


Next Page » « Previous Page