Category: ஸுனன் குப்ரா-பைஹகீ

Sunan al-Kubra lil Behaqi
Al-Sunan al-Kabir

Kubra-Bayhaqi-6621

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6621. நபி (ஸல்) அவர்கள் இறந்த பின் அவர்களைக் குளிப்பாட்ட முடிவு செய்தனர். ‘மற்றவர்களின் ஆடைகளைக் களைந்து விட்டு குளிப்பாட்டுவது போல் நபி (ஸல்) அவர்களைக் குளிப்பாட்டுவதா? அல்லது அவர்கள் அணிந்திருந்த ஆடையுடனே குளிப்பாட்டுவதா என்பது தெரியவில்லை’ என்று பேசிக் கொண்டனர். அவர்கள் இதில் கருத்து வேறுபாடு கொண்ட போது அல்லாஹ் அவர்களுக்குத் தூக்கத்தை ஏற்படுத்தினான்.

‘நபி (ஸல்) அவர்கள் அணிந்துள்ள ஆடையுடனே குளிப்பாட்டுங்கள்’ என்று வீட்டின் மூலையிலிருந்து ஒருவர் கூறினார். அவர் யாரென்று நமக்குத் தெரியவில்லை. அதன்படி அவர்கள் அணிந்திருந்த ஆடையின் மேல் தண்ணீரை ஊற்றி அதன் மேல் தேய்த்துக் கழுவினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நபி (ஸல்) இறந்த அந்தச் சந்தர்ப்பம் மீண்டும் வரும் என்றிருந்தால் நபி (ஸல்) அவர்களை அவர்களின் மனைவியர் தான் அவர்களைக் குளிப்பாட்டுவோம் என்று ஆயிஷா (ரலி) கூறுவார்கள்.

அறிவிப்பவர் : அப்பாத் பின் அப்துல்லாஹ் (ரஹ்)


لَمَّا أَرَادُوا غُسْلَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اخْتَلَفَ الْقَوْمُ فِيهِ، فَقَالَ بَعْضُهُمْ: أَنُجَرِّدُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ ثِيَابِهِ كَمَا نُجَرِّدُ مَوْتَانَا، أَوْ نُغَسِّلُهُ وَعَلَيْهِ ثِيَابُهُ؟ فَأَلْقَى الله عَلَيْهِمُ السِّنَةَ حَتَّى مَا مِنْهُمْ رَجُلٌ إِلَّا نَائِمٌ ذَقْنُهُ عَلَى صَدْرِهِ، فَقَالَ قَائِلٌ مِنْ نَاحِيَةِ الْبَيْتِ مَا يَدْرُونَ مَا هُوَ: اغْسِلُوا رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهِ ثِيَابُهُ، فَغَسَّلُوهُ وَعَلَيْهِ قَمِيصُهُ، يَصُبُّونَ الْمَاءَ عَلَيْهِ وَيُدَلِّكُونَهُ مِنْ فَوْقِهِ، قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللهُ عَنْهَا: ” وَايْمُ اللهِ، لَوِ اسْتَقْبَلْتُ مِنْ أَمْرِي مَا اسْتَدْبَرْتُ مَا غَسَّلَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا نِسَاؤُهُ


Kubra-Bayhaqi-6665

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

6665. நபி(ஸல்) இறந்த அந்தச் சந்தர்ப்பம் மீண்டும் வரும் என்றிருந்தால் நபி (ஸல்) அவர்களை அவர்களின் மனைவியர் தான் அவர்களைக் குளிப்பாட்டுவோம் என்று ஆயிஷா (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்பாத் பின் அப்துல்லாஹ் (ரஹ்)


لَوْ كُنْتُ اسْتَقْبَلْتُ مِنَ الْأَمْرِ مَا اسْتَدْبَرْتُ، مَا غَسَّلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غَيْرُ نِسَائِهِ


Kubra-Bayhaqi-17834

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

17834.


أَنَّ طَلْحَةَ بْنَ الْبَرَاءِ رَضِيَ اللهُ عَنْهُ لَمَّا لَقِيَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: يَا نَبِيَّ اللهِ، مُرْنِي بِمَا أَحْبَبْتَ وَلَا أَعْصِي لَكَ أَمْرًا. قَالَ: فَعَجِبَ لِذَلِكَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ غُلَامٌ، فَقَالَ لَهُ عِنْدَ ذَلِكَ: ” فَاقْتُلْ أَبَاكَ “. قَالَ: فَخَرَجَ مُوَلِّيًا لِيَفْعَلَ، فَدَعَاهُ، قَالَ: ” إِنِّي لَمْ أُبْعَثْ لِقَطِيعَةِ رَحِمٍ


Kubra-Bayhaqi-6620

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6620.


أَنَّ طَلْحَةَ بْنَ الْبَرَاءِ مَرِضَ فَأَتَاهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُهُ فَقَالَ: ” إِنِّي لَا أَرَى طَلْحَةَ إِلَّا قَدْ حَدَثَ بِهِ الْمَوْتُ فَآذِنُونِي بِهِ حَتَّى أَشْهَدَهُ فَأُصَلِّيَ عَلَيْهِ، وَعَجِّلُوهُ، فَإِنَّهُ لَا يَنْبَغِي لِجِيفَةِ مُسْلِمٍ أَنْ تُحْبَسَ بَيْنَ ظَهْرَانَيْ أَهْلِهِ


Kubra-Bayhaqi-20752

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

20752. …

பெரும் பாவங்கள் யாவை?’ என்று ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவை ஒன்பது என்று கூறிவிட்டு…

‘முஸ்லிமான பெற்றோருக்கு நோவினை அளிப்பது, உயிருள்ளவருக்கும் இறந்தவர்களுக்கும் கிப்லாவாக இருக்கும் கஃபாவின் புனிதத்தை மறுத்தல்’ என்று குறிப்பிட்டார்கள்…

அறிவிப்பவர் : உமைர் (ரலி)


كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجَّةِ الْوَدَاعِ , فَسَمِعْتُهُ يَقُولُ: ” أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللهِ الْمُصَلُّونَ , أَلَا وَإِنَّهُ مَنْ يُتِمُّ الصَّلَاةَ الْمَكْتُوبَةَ يَرَاهَا لِلَّهِ عَلَيْهِ حَقًّا , وَيُؤَدِّي الزَّكَاةَ الْمَفْرُوضَةَ , وَيَصُومُ رَمَضَانَ , وَيَجْتَنِبُ الْكَبَائِرَ ” , فَقَالَ لَهُ رَجُلٌ: يَا رَسُولَ اللهِ , وَمَا الْكَبَائِرُ؟ قَالَ: ” الْكَبَائِرُ تِسْعٌ , أَعْظَمُهُنَّ إِشْرَاكٌ بِاللهِ , وَقَتْلُ نَفْسِ مُؤْمِنٍ , وَأَكْلُ الرِّبَا , وَأَكْلُ مَالِ الْيَتِيمِ , وَقَذْفُ الْمُحْصَنَةِ , وَالْفِرَارُ مِنَ الزَّحْفِ , وَعُقُوقُ الْوَالِدَيْنِ , وَالسِّحْرُ , وَاسْتِحْلَالُ الْبَيْتِ الْحَرَامِ , مَنْ لَقِيَ اللهَ وَهُوَ بَرِيءٌ مِنْهُنَّ كَانَ مَعِي فِي جَنَّةٍ مَصَارِيعُهَا مِنْ ذَهَبٍ


Kubra-Bayhaqi-6723

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6723. …

பெரும் பாவங்கள் யாவை?’ என்று ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவை ஒன்பது என்று கூறிவிட்டு…

‘முஸ்லிமான பெற்றோருக்கு நோவினை அளிப்பது, உயிருள்ளவருக்கும் இறந்தவர்களுக்கும் கிப்லாவாக இருக்கும் கஃபாவின் புனிதத்தை மறுத்தல்’ என்று குறிப்பிட்டார்கள்…

அறிவிப்பவர் : உமைர் (ரலி)


أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي حَجَّةِ الْوَدَاعِ: ” أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللهِ الْمُصَلُّونَ، مَنْ يُقِمِ الصَّلَوَاتِ الْخَمْسَ الَّتِي كُتِبْنَ عَلَيْهِ، وَيَصُومُ رَمَضَانَ يَحْتَسِبُ صَوْمَهُ، يَرَى أَنَّهُ عَلَيْهِ حَقٌّ، وَيعْطِي زَكَاةَ مَالِهِ يَحْتَسِبُهَا، وَيَجْتَنِبُ الْكَبَائِرَ الَّتِي نَهَى الله عَنْهَا “، ثُمَّ إِنَّ رَجُلًا سَأَلَهُ، فَقَالَ: يَا رَسُولَ اللهِ، مَا الْكَبَائِرُ؟ فَقَالَ: ” هُنَّ تِسْعٌ: الشِّرْكُ إِشْرَاكٌ بِاللهِ، وَقَتْلُ نَفْسِ مُؤْمِنٍ بِغَيْرِ حَقٍّ، وَفِرَارٌ يَوْمَ الزَّحْفِ، وَأَكْلُ مَالِ الْيَتِيمِ، وَأَكْلُ الرِّبَا، وَقَذْفُ الْمُحْصَنَةِ، وَعُقُوقُ الْوَالِدَيْنِ الْمُسْلِمَيْنِ، وَاسْتِحْلَالُ الْبَيْتِ الْحَرَامِ قِبْلَتِكُمْ أَحْيَاءً وَأَمْوَاتًا ” ثُمَّ قَالَ: ” لَا يَمُوتُ رَجُلٌ لَمْ يَعْمَلْ هَؤُلَاءِ الْكَبَائِرَ، وَيقِيمُ الصَّلَاةَ، وَيؤْتِي الزَّكَاةَ، إِلَّا كَانَ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي دَارٍ أَبْوَابُهَا مَصَارِيعُ مِنْ ذَهَبٍ “. سَقَطَ مِنْ كِتَابِي أَوْ مِنْ كِتَابِ شَيْخِي ” السِّحْرُ


Kubra-Bayhaqi-7179

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7179. பிலால் பின் யஹ்யா கூறியதாவது:

ஹுதைபா (ரலி) அவர்கள் தனது குடும்பத்தில் யாரேனும் மரணித்தால் அவரின் மரணச் செய்தியை அறிவிக்க வேண்டாம் எனக் கூறுவார்கள்.

ஏனெனில் மரண அறிவிப்புச் செய்வதில் இது சேருமோ என்று நான் பயப்படுகிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மரண செய்தியை அறிவிப்புச் செய்வதற்கு தடை விதித்ததை நான் செவியேற்றுள்ளேன் என்றும் கூறினார்கள்.


كَانَ حُذَيْفَةُ إِذَا كَانَتْ فِي أَهْلِهِ جِنَازَةٌ لَمْ يُؤْذِنْ بِهَا أَحَدًا وَيَقُولُ: ” إِنِّي أَخَافُ أَنْ يَكُونَ نَعْيًا إِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْهَى عَنِ النَّعْيِ


Kubra-Bayhaqi-16684

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

16684. …எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை காக்கிறாரோ அவருக்கு அது மறுமையில் நரக நெருப்பிலிருந்து காக்கும் திரையாக இருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்…

அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி)


نَالَ رَجُلٌ مِنْ رَجُلٍ عِنْدَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَدَّ عَلَيْهِ رَجُلٌ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” مَنْ رَدَّ عَنْ عِرْضِ أَخِيهِ كَانَ لَهُ حِجَابًا مِنَ النَّارِ


Kubra-Bayhaqi-10274

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

10274. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் இறந்த பின், ஹஜ் செய்பவர் என்னுடைய மண்ணறையை தரிசிக்க வந்தால் நான் வாழும் போது என்னை சந்தித்தவரைப் போன்றவராவார்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)


مَنْ حَجَّ فَزَارَ قَبْرِي بَعْدَ مَوْتِي كَانَ كَمَنْ زَارَنِي فِي حَيَاتِي


Next Page » « Previous Page