Category: ஸுனன் குப்ரா-பைஹகீ

Sunan al-Kubra lil Behaqi
Al-Sunan al-Kabir

Kubra-Bayhaqi-10273

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

10273. யார் எனது கப்ரை ஸியாரத் செய்கின்றாரோ அவருக்கு நான் பரிந்துரை செய்வேன் என்றோ (அல்லது)

யார் என்னை சந்திக்கின்றாரோ அவருக்கு நான் மறுமையில் சாட்சியாக இருப்பேன் என்றோ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மேலும், (மக்கா, மதீனா ஆகிய) இரண்டு புனிதத் தலங்களில் யார் மரணிக்கிறாரோ அவரை, கியாமத் நாளில் அச்சமற்றவர்களில் (ஒருவராக) அல்லாஹ் எழுப்புவான் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : உமர் (ரலி)


مَنْ زَارَ قَبْرِي ” , أَوْ قَالَ: ” مَنْ زَارَنِي , كُنْتُ لَهُ شَفِيعًا ” أَوْ ” شَهِيدًا , وَمَنْ مَاتَ فِي أَحَدِ الْحَرَمَيْنِ بَعَثَهُ اللهُ فِي الْآمِنِينَ يَوْمَ الْقِيَامَةِ


Kubra-Bayhaqi-20336

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

20336.


أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطَبَ النَّاسَ فِي حَجَّةِ الْوَدَاعِ فَقَالَ: ” يَا أَيُّهَا النَّاسُ إِنِّي قَدْ تَرَكْتُ فِيكُمْ مَا إِنِ اعْتَصَمْتُمْ بِهِ فَلَنْ تَضِلُّوا أَبَدًا: كِتَابُ اللهِ , وَسُنَّةُ نَبِيِّهِ


Kubra-Bayhaqi-20337

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

20337. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் உங்களிடம் எனக்குப் பின் இரண்டை விட்டுச் செல்கிறேன். அவ்விரண்டையும் நீங்கள் பற்றிப்பிடிக்கும் காலமெல்லாம் அல்லது அதன்படி செயல்படும் காலமெல்லாம் நீங்கள் வழிதவற மாட்டீர்கள். 1. அல்லாஹ்வின் வேதம் (திருக்குர்ஆன்). 2 . அவனுடைய நபியின் வழிமுறைகள். நிச்சயமாக இவ்விரண்டும் ஹவ்ளுல் கவுஸரிடம், என்னை வந்தடையும் வரை ஒன்றையொன்று பிரியாது.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)


إِنِّي قَدْ خَلَّفْتُ فِيكُمْ مَا لَنْ تَضِلُّوا بَعْدَهُمَا مَا أَخَذْتُمْ بِهِمَا , أَوْ عَمِلْتُمْ بِهِمَا , كِتَابُ اللهِ , وَسُنَّتِي , وَلَنْ يَفْتَرِقَا حَتَّى يَرِدَا عَلَيَّ الْحَوْضَ


Kubra-Bayhaqi-6905

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6905.


مَا صَلَّى ثَلَاثَةُ صُفُوفٍ مِنَ الْمُسْلِمِينَ عَلَى رَجُلٍ مُسْلِمٍ يَسْتَغْفِرُونَ لَهُ إِلَّا أَوْجَبَ ” فَكَانَ مَالِكٌ إِذَا صَلَّى عَلَى جِنَازَةٍ يَعْنِي فَتَقَالَ أَهْلَهَا صَفَّهُمْ صُفُوفًا ثَلَاثَةً ثُمَّ يُصَلِّي عَلَيْهَا. لَفْظُ حَدِيثِ جَرِيرِ بْنِ حَازِمٍ وَفِي رِوَايَةِ يَزِيدَ بْنِ هَارُونَ ” إِلَّا غُفِرَ لَهُ


Kubra-Bayhaqi-6919

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6919. இப்னு உமர் (ரலி) அவர்கள் ஒரு நேரத்தில் ஒன்பது ஜனாஸாக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். அப்போது ஆண்களின் உடல்களை இமாமுக்கு அருகிலும், பெண்களின் உடல்களை கிப்லாவுக்கு (கிப்லாவின் பக்கம் உள்ள சுவருக்கு) அருகிலும் வைத்தார்கள். அனைத்து உடல்களும் ஒரே நேர் வரிசையில் வைக்கப்பட்டன. உமர் (ரலி) அவர்களின் மனைவி உம்மு குல்சூம், ஸைத் பின் உமர் என்ற அவரது மகன் ஆகியோரின் உடல்களும் வைக்கப்பட்டன.

அப்போது ஸயீத் பின் ஆஸ் (ரலி) இமாமாக இருந்தார். அந்தச் சபையில் இப்னு அப்பாஸ் (ரலி), அபூ ஹுரைரா (ரலி), அபூ ஸயீத் (ரலி), அபூ கதாதா (ரலி) ஆகிய நபித்தோழர்களும் இருந்தனர். அப்போது ஒரு மனிதர் ‘இதை நான் ஆட்சேபிக்கிறேன்’ என்றார். அப்போது நான், இப்னு அப்பாஸ் (ரலி) அபூ ஹுரைரா (ரலி), அபூ ஸயீத் (ரலி), அபூ கதாதா (ரலி) ஆகியோரைப் பார்த்து, ‘இது என்ன?’ என்று கேட்டேன். அதற்கவர்கள், ‘இது நபி வழி தான்’ எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர் : நாஃபிவு (ரஹ்)


أَنَّهُ صَلَّى عَلَى تِسْعِ جَنَائِزَ رِجَالٍ وَنِسَاءٍ فَجَعَلَ الرِّجَالَ مِمَّا يَلِي الْإِمَامَ وَالنِّسَاءَ مِمَّا يَلِي الْقِبْلَةَ، وَصَفَّهُمْ صَفًّا وَاحِدًا قَالَ: ” وَوُضِعَتْ جِنَازَةُ أُمِّ كُلْثُومِ بِنْتِ عَلِيٍّ امْرَأَةِ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُمْ وَابْنٍ لَهَا يُقَالُ لَهُ: زَيْدُ بْنُ عُمَرَ وَالْإِمَامُ يَوْمَئِذٍ سَعِيدُ بْنُ الْعَاصِ وَفِي النَّاسِ يَوْمَئِذٍ ابْنُ عَبَّاسٍ، وَأَبُو هُرَيْرَةَ، وَأَبُو سَعِيدٍ، وَأَبُو قَتَادَةَ ” , قَالَ: ” فَوُضِعَ الْغُلَامُ مِمَّا يَلِي الْإِمَامَ “، قَالَ رَجُلٌ: فَأَنْكَرْتُ ذَلِكَ، فَنَظَرْتُ إِلَى ابْنِ عَبَّاسٍ، وَأَبِي هُرَيْرَةَ، وَأَبِي سَعِيدٍ، وَأَبِي قَتَادَةَ رَضِيَ اللهُ عَنْهُمْ، فَقُلْتُ: مَا هَذَا؟ قَالُوا: السُّنَّةُ،


Kubra-Bayhaqi-3673

ஹதீஸின் தரம்: More Info

3673. அல்கமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களுடன், நோயாளியாக இருந்த அவரின் சகோதரர் உத்பா (ரலி) அவர்களை நலம் விசாரிக்க சென்றேன். அப்போது அவர் ஒரு பலகை போன்றதின் மீது ஸஜ்தா செய்து தொழுதுக் கொண்டிருந்ததை அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) பார்த்தார்கள்.

உடனே அவர்கள், அதை அவரிடமிருந்து எடுத்து விட்டு உன்னால் முடிந்தால் முகத்தை தரையில் வைத்து தொழு! அது முடியாவிட்டால் ருகூஉ ஸஜ்தாக்களை சைகை செய்து தொழுதுக் கொள்! ருகூஉல் குனிவதை விட ஸஜ்தாவில் சற்று கூடுதலாக குனிந்து நிறைவேற்று! என்று கூறினார்கள்.


دَخَلْتُ مَعَ عَبْدِ اللهِ عَلَى أَخِيهِ عُتْبَةَ نَعُودُهُ وَهُوَ مَرِيضٌ فَرَأَى مَعَ أَخِيهِ مِرْوَحَةً يَسْجُدُ عَلَيْهَا، فَانْتَزَعَهَا مِنْهُ عَبْدُ اللهِ، وَقَالَ: اسْجُدْ عَلَى الْأَرْضِ فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَأَوْمِ إِيمَاءً وَاجْعَلِ السُّجُودَ أَخْفَضَ مِنَ الرُّكُوعِ


Kubra-Bayhaqi-5014

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5014. (நபி (ஸல்) அவர்கள் தொழுகையை நிறைவேற்றிய நிலையில் ஒரு மனிதர் வந்தார். அவர் தனியாக தொழ நின்றபோது நபி (ஸல்) அவர்கள், “இவருடன் சேர்ந்து தொழுவதன் மூலம் இவருக்கு லாபம் அளிக்கக் கூடியவர் யார்?” என்று கேட்டார்கள்)

அப்போது, அபூபக்ர் (ரலி) அவர்கள் (தான், ஏற்கனவே நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி  தொழுகையை நிறைவுசெய்திருந்தும்) எழுந்து அவருடன் தொழுதார்கள்.

அறிவிப்பவர் : ஹஸன் பஸரீ (ரஹ்)


فِي هَذَا الْخَبَرِ فَقَامَ أَبُو بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ فَصَلَّى مَعَهُ، وَقَدْ كَانَ صَلَّى مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Kubra-Bayhaqi-5997

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5997. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“அல்கஹ்ஃப்” எனும் (18ஆவது) அத்தியாயத்தின் ஆரம்பப் பத்து வசனங்களை மனனம் செய்திருப்பவர் (பெருங்குழப்பவாதியான) தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டு பாதுகாக்கப்படுவார்.

அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி)


مَنْ حَفِظَ عَشْرَ آيَاتٍ مِنْ أَوَّلِ سُورَةِ الْكَهْفِ عُصِمَ مِنْ فِتْنَةِ الدَّجَّالِ


Kubra-Bayhaqi-5996

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

5996. ஜும்ஆ நாளில் யாரேனும் கஹ்ஃப் (18வது) அத்தியாயத்தை ஓதினால் அடுத்த ஜும்ஆ வரை அவருக்குப் பிரகாசம் நீடிக்கிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஸயீத் (ரலி)

………


مَنْ قَرَأَ سُورَةَ الْكَهْفِ فِي يَوْمِ الْجُمُعَةِ أَضَاءَ لَهُ مِنَ النُّورِ مَا بَيْنَ الْجُمُعَتَيْنِ


Kubra-Bayhaqi-4918

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4918.


وَأَخْبَرَنَا أَبُو بَكْرٍ أَحْمَدُ بْنُ الْحَسَنِ الْقَاضِي، أنبأ حَاجِبُ بْنُ أَحْمَدَ، أنبأ مُحَمَّدُ بْنُ رَافِعٍ، ثنا إِبْرَاهِيمُ بْنُ الْحَكَمِ بْنِ أَبَانَ، حَدَّثَنِي أَبِي، عَنْ عِكْرِمَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” يَا عَبَّاسُ، يَا عَمَّ رَسُولِ اللهِ، أَلَا أُهْدِي لَكَ “، فَذَكَرَهُ بِمَعْنَاهُ مُرْسَلًا. وَكَذَلِكَ رَوَاهُ جَمَاعَةٌ مِنَ الْمَشْهُورِينَ عَنْ مُحَمَّدِ بْنِ رَافِعٍ


Next Page » « Previous Page