Category: ஸுனன் குப்ரா-பைஹகீ

Sunan al-Kubra lil Behaqi
Al-Sunan al-Kabir

Kubra-Bayhaqi-4317

ஹதீஸின் தரம்: Pending

4317.


عَلَيْكُمْ بِقِيَامِ اللَّيْلِ فَإِنَّهُ دَأَبُ الصَّالِحِينَ قَبْلَكُمْ، وَهُوَ قُرْبَةٌ لَكُمْ إِلَى رَبِّكُمْ، وَمَكْفَرَةٌ لِلسَّيِّئَاتِ، وَمَنْهَاةٌ عَنِ الْإِثْمِ


Kubra-Bayhaqi-14862

ஹதீஸின் தரம்: More Info

14862. கணவனிடம் (தகுந்த காரணமின்றி) விவாகரத்து கோரி சண்டையிடும் பெண்கள் தான் நயவஞ்கபெண்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.


الْمُخْتَلِعَاتُ وَالْمُنْتَزِعَاتُ هُنَّ الْمُنَافِقَاتُ


Kubra-Bayhaqi-14860

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

14860. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தகுந்த காரணமின்றி கணவனிடம் விவாகரத்து கோரிய பெண்ணுக்கு சுவர்க்கத்தின் வாடை தடுக்கப்பட்டு விட்டது.

அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி)


أَيُّمَا امْرَأَةٍ سَأَلَتْ زَوْجَهَا طَلَاقًا فِي غَيْرِ مَا بَأْسٍ فَحَرَامٌ عَلَيْهَا رَائِحَةُ الْجَنَّةِ


Kubra-Bayhaqi-10976

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

10976. “அல்லாஹ்வின் தூதரே! (கடன் வாங்கி) சிரமப்படுவோருக்கு ஒருவர் தவணை வழங்குகின்றார் எனில், அவர் தவணை அளிக்கும் ஒவ்வொரு நாளிலும் அவர் கொடுத்த கடன் தொகையை தர்மம் செய்த கூலி அவருக்கு உண்டு என்றும்,

(கடன் வாங்கி) சிரமப்படுபவருக்கு ஒருவர் தவணை வழங்குகின்றார் எனில், அவர் தவணை அளிக்கும் ஒவ்வொரு நாளிலும் அவர் கொடுத்த கடன் தொகையைப் போல் ஒரு மடங்கு தர்மம் செய்த கூலி அவருக்கு உண்டு என்றும் நீங்கள் கூறியதாக நான் செவிமடுத்தேனே! (அது சரி தானா?)” என புரைதா (ரலி) கேட்ட போது,

“கடனின் (தவணைக்) காலம் முடிவதற்கு முன்னால் ஒவ்வொரு நாளும் (அது போல் ஒரு மடங்கு) தர்மம் செய்த கூலி அவருக்கு உண்டு. கடன் தவணை முடிந்த பின்னும் (கூடுதல்) அவகாசம் அளித்தாலும் அவருக்கு ஒவ்வொரு நாளும் அவர் அளித்த தொகையைப் போல் ஒருமடங்கு தர்மம் செய்த கூலி உண்டு” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : புரைதா (ரலி)


مَنْ أَنْظَرَ مُعْسِرًا فَإِنَّ لَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلِهِ صَدَقَةً” قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللهِ بِكُلِّ يَوْمٍ صَدَقَةٌ , ثُمَّ قُلْتُ لَهُ: بِكُلِّ يَوْمٍ مِثْلِهِ صَدَقَةٌ , فَقَالَ لَهُ: ” بِكُلِّ يَوْمٍ صَدَقَةٌ مَا لَمْ يَحِلَّ الدَّيْنُ فَإِذَا حَلَّ الدَّيْنُ فَإِنْ أَنْظَرَهُ بَعْدَ الْحِلِّ فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلِهِ صَدَقَةٌ


Kubra-Bayhaqi-6881

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

6881. அப்துர் ரஹ்மான் இப்னு அபீ லைலா (ரஹ்) அறிவித்தார்.

ஸஹ்ல் இப்னு ஹுனைஃப் (ரலி), கைஸ் இப்னு ஸஅத் (ரலி) ஆகியோர் காதிஸியாவில் ஓரிடத்தில் அமர்ந்திருந்தபோது சிலர் ஒரு ஜனாஸாவை கொண்டு சென்றனர். உடனே அவர்கள் இருவரும் எழுந்தார்கள்.

அப்போது அவர்களிடம் ‘இது இந்நாட்டில் அபயம் பெற்ற (காபிரின்) ஜனாஸாவல்லவா?’ எனக்கூறப்பட்டது. அதற்கு அவ்விருவரும், ‘நபி (ஸல்) அவர்களைக் கடந்து ஒரு ஜனாஸா சென்றபோது எழுந்து நின்றார்கள்; அப்போது அவர்களிடம் அது யூதரின் ஜனாஸா எனக் கூறப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘இவர் மனிதரில்லையா?’ எனப் பதிலளித்தார்கள் என்றார்கள்.


كَانَ سَهْلُ بْنُ حُنَيْفٍ، وَقَيْسُ بْنُ سَعْدٍ قَاعِدَيْنِ بِالْقَادِسِيَّةِ فَمَرُّوا عَلَيْهِمَا بِجِنَازَةٍ فَقَامَا، فَقِيلَ لَهُمَا: هُوَ مِنْ أَهْلِ الْأَرْضِ أَوْ مِنْ أَهْلِ الذِّمَّةِ، فَقَالَا: إِنَّ رَسُولَ اللهِ صَلَّى الله عَلَيهِ وَسَلَّمَ مَرَّتْ بِهِ جِنَازَةٌ فَقَامَ، فَقِيلَ لَهُ إِنَّهَا جِنَازَةُ يَهُودِيٍّ، فَقَالَ: ” أَلَيْسَتْ نَفْسًا


Kubra-Bayhaqi-2749

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2749. ஹுதைஃபா (ரலி) அவர்கள் அறிவித்தார்.

நான் ஒரு முறை நபி ஸல் அவர்களுடன் இரவுத் தொழுகை தொழுதேன்…

நபி (ஸல்) அவர்கள் இரண்டு ஸஜ்தாக்களுக்கிடையே, ‘ரப்பிக்ஃபிர்லீ ரப்பிக்ஃபிர்லீ (இறைவா! என்னை மன்னித்து விடு; இறைவா! என்னை மன்னித்து விடு)’ என்று கூறக்கூடியவர்களாக இருந்தார்கள், மேலும்  (இரண்டு ஸஜ்தாக்களுக்கிடையே) ஸஜ்தாவில் இருக்கும் அளவு (தாமதித்து) இருப்பார்கள்.


أَنَّهُ صَلَّى مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرَ الْحَدِيثَ قَالَ: وَكَانَ يَقُولُ بَيْنَ السَّجْدَتَيْنِ: ” رَبِّ اغْفِرْ لِي رَبِّ اغْفِرْ لِي، وَجَلَسَ بِقَدْرِ سُجُودِهِ


Kubra-Bayhaqi-8868

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

8868. நபித்தோழர்களில் ஒருவர் உமர் (ரலி) அவர்களிடம் வந்து ஹஜ்ஜூக்கு முன் உம்ரா செய்வதை நபிகள் நாயகம் தடுத்துள்ளார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த நோயின் போது இதை நான் நபி (ஸல்) அவர்களிடம் செவியுற்றேன் என்று கூறினார்.

அறிவிப்பவர் : ஸயீத் பின் முஸய்யப் (ரஹ்)


أَنَّ رَجُلًا مِنْ أَصْحَابِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَى عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ , فَشَهِدَ عِنْدَهُ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَرَضِهِ الَّذِي قُبِضَ فِيهِ يَنْهَى عَنِ الْعُمْرَةِ قَبْلَ الْحَجِّ


Kubra-Bayhaqi-10326

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

10326. ஒலியெழுப்பும் மணி ஷைத்தானின் இசைக் கருவியாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


الْجَرَسُ مَزَامِيرُ الشَّيْطَانِ


Kubra-Bayhaqi-10327

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

10327. மணியும் நாயும்  இருக்கும் ஜமாஅத்தில் மலக்குகள் உடன் இருப்பதில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


لَا تَصْحَبِ الْمَلَائِكَةُ رُفْقَةً فِيهَا جَرَسٌ أَوْ كَلْبٌ


Kubra-Bayhaqi-17798

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

17798. இணைவைப்போருடன் உங்களுடைய பொருட்களாலும் உயிராலும் நாவுகளாலும் ஜிஹாத் செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)


جَاهِدُوا – يَعْنِي الْمُشْرِكِينَ – بِأَمْوَالِكُمْ وَأَنْفُسِكُمْ وَأَلْسِنَتِكُمْ


Next Page » « Previous Page