1513.
فِيمَنْ وَقَعَ عَلَى امْرَأَتِهِ وَهِيَ حَائِضٌ أَنَّهُ ” يَتَصَدَّقُ بِدِينَارٍ أَوْ نِصْفِ دِينَارٍ
Sunan al-Kubra lil Behaqi
Al-Sunan al-Kabir
1513.
فِيمَنْ وَقَعَ عَلَى امْرَأَتِهِ وَهِيَ حَائِضٌ أَنَّهُ ” يَتَصَدَّقُ بِدِينَارٍ أَوْ نِصْفِ دِينَارٍ
1512.
فِي الَّذِي يَأْتِي امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ فَذَكَرَهُ مَوْقُوفًا
1511.
فِي الَّذِي يَأْتِي امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ قَالَ: ” يَتَصَدَّقُ بِدِينَارٍ أَوْ بِنِصْفِ دِينَارٍ
20999. வேறு அறிவிப்பாளர் தொடரில், நாபிஉ (ரஹ்) அவர்கள், நாங்கள் இப்னு உமர் (ரலி) அவர்களுடன் இருக்கும் போது இசை சத்தத்தை கேட்டோம் என்று கூறியதாக கூடுதலாக வந்துள்ளது..
كُنَّا مَعَ ابْنِ عُمَرَ فَسَمِعْتُ صَوْتَ مِزْمَارٍ , فَذَكَرَ نَحْوَهُ
20997. …ஒரு இடையனின் குழலோசை இப்னு உமர் (ரலி) அவர்களின் காதில் விழுந்தது. அப்போது அவர்கள் தமது இரு காதுகளிலும் விரலை வைத்துக் கொண்டு அந்தப் பாதையை விட்டுவிட்டு வாகனத்தைத் திருப்பினார்கள். உனக்குக் கேட்கிறதா? என்று வினவினார்கள். அதற்கு நான் ஆம் என்றேன்.
அவர்கள் (சிறிது தூரம்) சென்ற பிறகு எனக்குக் கேட்கவில்லை என்று நான் கூறினேன். கைகளை (காதிலிருந்து) எடுத்து விட்டு மறுபடியும் அதே பாதைக்கு வாகனத்தைத் திருப்பினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு இடையனின் குழலோசையைக் கேட்ட போது அவர்கள் இதைப் போன்று செய்வதை நான் பார்த்தேன் என்று கூறினார்கள்…
அறிவிப்பவர் : நாஃபிஃ (ரஹ்)
سَمِعَ ابْنُ عُمَرَ , مِزْمَارًا قَالَ: فَوَضَعَ إِصْبَعَيْهِ عَلَى أُذُنَيْهِ , وَنَأَى عَنِ الطَّرِيقِ , وَقَالَ لِي: ” يَا نَافِعُ هَلْ تَسْمَعُ شَيْئًا؟ ” , قَالَ: فَقُلْتُ: لَا , قَالَ: فَرَفَعَ إِصْبَعَيْهِ مِنْ أُذُنَيْهِ وَقَالَ: ” كُنْتُ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ , فَسَمِعَ مِثْلَ هَذَا , فَصَنَعَ مِثْلَ هَذَا. وَفِي رِوَايَةِ الْقَاضِي قَالَ: كُنْتُ أَسِيرُ مَعَ ابْنِ عُمَرَ فَسَمِعَ زَمْرَ رِعَاءٍ , فَتَرَكَ الطَّرِيقَ وَجَعَلَ يَقُولُ: ” هَلْ تَسْمَعُ؟ ” , قُلْتُ: لَا , ثُمَّ عَارَضَ الطَّرِيقَ , ثُمَّ قَالَ: ” هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَلَ
20991. …அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ் உங்களுக்கு மதுவையும், சூதாட்டத்தையும், மத்தளத்தையும் தடை செய்துள்ளான்.
மேலும் கூறினார்கள் : போதையூட்டக்கூடிய அனைத்தும் தடை செய்யப்பட்டதாகும்…
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
سَأَلْتُ ابْنَ عَبَّاسٍ , عَنِ الْجَرِّ , فَذَكَرَ قِصَّةَ عَبْدِ الْقَيْسِ قَالَ: ثُمَّ قَالَ: يَعْنِي النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِنَّ اللهَ حَرَّمَ عَلَيَّ , أَوْ حَرَّمَ الْخَمْرَ وَالْمَيْسِرَ وَالْكُوبَةَ ” , وَقَالَ: ” كُلُّ مُسْكِرٍ حَرَامٌ “
20990. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ் உங்களுக்கு மதுவையும், சூதாட்டத்தையும், மத்தளத்தையும் தடை செய்துள்ளான்.
மேலும் கூறினார்கள் : போதையூட்டக்கூடிய அனைத்தும் தடை செய்யப்பட்டதாகும்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
إِنَّ اللهَ تَبَارَكَ وَتَعَالَى حَرَّمَ عَلَيْكُمُ الْخَمْرَ وَالْمَيْسِرَ وَالْكُوبَةَ ” وَهُوَ الطَّبْلُ وَقَالَ: ” كُلُّ مُسْكِرٍ حَرَامٌ
20943. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ் உங்களுக்கு மதுவையும், சூதாட்டத்தையும், மத்தளத்தையும் தடை செய்துள்ளான்.
மேலும் கூறினார்கள் : போதையூட்டக்கூடிய அனைத்தும் தடை செய்யப்பட்டதாகும்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
إِنَّ اللهَ حَرَّمَ عَلَيْكُمُ الْخَمْرَ وَالْمَيْسِرَ وَالْكُوبَةَ ” , وَقَالَ: ” كُلُّ مُسْكِرٍ حَرَامٌ
20988. அப்துர் ரஹ்மான் இப்னு ஃகன்ம் அல்அஷ்அரீ (ரஹ்) கூறினார்:
‘அபூ ஆமிர் (ரலி)’ அல்லது ‘அபூ மாலிக் அல்அஷ்அரீ (ரலி)’ என்னிடம் கூறினார்கள் – அல்லாஹ்வின் மீதாணையாக அவர்கள் என்னிடம் பொய் சொல்லவில்லை. (அவர்கள் கூறினார்)
நான் நபி(ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன்:
என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபசாரம் (புரிவது), (ஆண்கள்) பட்டுத் துணி (அணிவது), மது (அருந்துவது), இசைக் கருவிகள் (இசைப்பது) ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்துவிட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவி கேட்டுச்) செல்வான். அப்போது அவர்கள், ‘நாளை எங்களிடம் வா’ என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்களின் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்துவிடுவான். (எஞ்சிய) மற்றவர்களைக் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றிவிடுவான்.
حَدَّثَنِي أَبُو عَامِرٍ , أَوْ أَبُو مَالِكٍ , وَاللهِ مَا كَذَبَنِي , أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” لَيَكُونَنَّ فِي أُمَّتِي أَقْوَامٌ يَسْتَحِلُّونَ الْحَرِيرَ وَالْخَمْرَ وَالْمَعَازِفَ , وَلَيَنْزِلَنَّ أَقْوَامٌ إِلَى جَنْبِ عَلَمٍ , تَرُوحُ عَلَيْهِمْ سَارِحَةٌ لَهُمْ , فَيَأْتِيهِمْ رَجُلٌ لِحَاجَتِهِ , فَيَقُولُونَ: ارْجِعْ إِلَيْنَا غَدًا , فَيُبَيِّتُهُمُ اللهُ , فَيَضَعُ الْعَلَمَ , وَيَمْسَخُ آخَرِينَ قِرَدَةً وَخَنَازِيرَ إِلَى يَوْمِ الْقِيَامَةِ
சமீப விமர்சனங்கள்