தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-2663

A- A+


ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்:

நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ் கூறப்படும்போது அதை (பின்வருமாறு) மறுத்து கூறுவது தடை செய்யப்பட்டதாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தன் சொகுசு இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருக்கும் உங்களில் ஒருவரை நான் இத்தகைய நிலையில் காணக் கூடாது:

அதாவது, நான் கட்டளையிட்ட ஒரு செயலோ அல்லது நான் விலக்கிய ஒரு செயலோ (குறித்து) அவரிடம் வரும்போது, அவர், ‘இது பற்றி எனக்குத் தெரியாது; அல்லாஹ்வின் வேதத்தில் (குர்ஆனில்) எதைக் காண்கிறோமோ, அதை மட்டுமே நாங்கள் பின்பற்றுவோம்’ என்று கூறுவார்.

அறிவிப்பவர்: அபூராஃபிஃ (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்த ஹதீஸ் “ஹஸன்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.

அறிவிப்பாளர்களில் சிலர் இந்த ஹதீஸை ஸுஃப்யான் பின் உயைனா —> இப்னுல் முன்கதிர் —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் நபித்தோழரை விட்டுவிட்டு (முர்ஸலாக) அறிவித்துள்ளனர். மேலும், ஸுஃப்யான் —> ஸாலிம்-அபுன்னள்ர் —> உபைதுல்லாஹ் பின் அபூராஃபிஃ —> அவரது தந்தை (அபூ ராஃபிஃ (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.

இப்னு உயைனா அவர்கள் இந்த ஹதீஸைத் தனித்தனியாக அறிவிக்கும்போது, முஹம்மத் பின் முன்கதிரின் அறிவிப்பையும், ஸாலிம் அபுன்னள்ரின் அறிவிப்பையும் பிரித்துக் காட்டுவார். ஆனால், இவ்விரண்டையும் சேர்த்து அறிவிக்கும்போது (கீழே உள்ள அறிவிப்பாளர்தொடர் அமைப்பில்) இவ்வாறு ஒன்றாக இணைத்து அறிவித்துவிடுவார்.

நபி (ஸல்) அவர்களின் விடுதலை பெற்ற அடிமையான இந்த அபூராஃபிஃ (ரலி) அவர்களின் இயற்பெயர் அஸ்லம் என்பதாகும்.

(திர்மிதி: 2663)

بَابُ مَا نُهِيَ عَنْهُ أَنْ يُقَالَ عِنْدَ حَدِيثِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ المُنْكَدِرِ، وَسَالِمٍ أَبِي النَّضْرِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي رَافِعٍ، وَغَيْرِهِ رَفَعَهُ قَالَ:

” لَا أُلْفِيَنَّ أَحَدَكُمْ مُتَّكِئًا عَلَى أَرِيكَتِهِ يَأْتِيهِ أَمْرٌ مِمَّا أَمَرْتُ بِهِ أَوْ نَهَيْتُ عَنْهُ، فَيَقُولُ: لَا أَدْرِي، مَا وَجَدْنَا فِي كِتَابِ اللَّهِ اتَّبَعْنَاهُ “

«هَذَا حَدِيثٌ حَسَنٌ» وَرَوَى بَعْضُهُمْ هَذَا الْحَدِيثَ عَنْ سُفْيَانَ، عَنْ ابْنِ المُنْكَدِرِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُرْسَلًا. وَعَنْ سَالِمٍ أَبِي النَّضْرِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. ” وَكَانَ ابْنُ عُيَيْنَةَ إِذَا رَوَى هَذَا الحَدِيثَ عَلَى الِانْفِرَادِ بَيَّنَ حَدِيثَ مُحَمَّدِ بْنِ المُنْكَدِرِ مِنْ حَدِيثِ سَالِمٍ أَبِي النَّضْرِ، وَإِذَا جَمَعَهُمَا رَوَى هَكَذَا، وَأَبُو رَافِعٍ مَوْلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْمُهُ: أَسْلَمُ “


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-2663.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.