Category: ஸுனன் குப்ரா-பைஹகீ

Sunan al-Kubra lil Behaqi
Al-Sunan al-Kabir

Shuabul-Iman-7581

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7581. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உறவானது, இறை அரியணையின் கால்களை பிடித்துக்கொண்டுள்ளது. பதிலுக்குப் பதில் உறவாடுகின்றவர் (உண்மையில்) உறவைப் பேணியவர் அல்ல. மாறாக உறவு முறிந்தாலும் அந்த உறவுடன் இணைகின்றவரே உறவைப் பேணுபவர் ஆவார்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


إِنَّ الرَّحِمَ مُعَلَّقَةٌ بِالْعَرْشِ، وَلَيْسَ الْوَاصِلُ بِالْمُكَافِئِ، إِنَّ الْوَاصِلَ إِذَا قُطِعَتْ رَحِمَهُ وَصَلَهَا


Kubra-Bayhaqi-13220

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

13220. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உறவானது, இறை அரியணையின் கால்களை பிடித்துக்கொண்டுள்ளது. பதிலுக்குப் பதில் உறவாடுகின்றவர் (உண்மையில்) உறவைப் பேணியவர் அல்ல. மாறாக உறவு முறிந்தாலும் அந்த உறவுடன் இணைகின்றவரே உறவைப் பேணுபவர் ஆவார்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


إِنَّ الرَّحِمَ مُعَلَّقَةٌ بِالْعَرْشِ، وَلَيْسَ الْوَاصِلُ بِالْمُكَافِي، وَلَكِنَّ الْوَاصِلَ الَّذِي إِذَا انْقَطَعَتْ رَحِمُهُ وَصَلَهَا


Kubra-Bayhaqi-13219

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

13219. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பதிலுக்குப் பதில் உறவாடுகின்றவர் (உண்மையில்) உறவைப் பேணியவர் அல்ல. மாறாக உறவு முறிந்தாலும் அந்த உறவுடன் இணைகின்றவரே உறவைப் பேணுபவர் ஆவார்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


لَيْسَ الْوَاصِلُ بِالْمُكَافِي، وَلَكِنَّ الْوَاصِلَ مَنْ إِذَا قُطِعَتْ رَحِمُهُ وَصَلَهَا


Kubra-Bayhaqi-13221

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

13221. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும், தமது வாழ்நாள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று விரும்பினால் அவர் தமது உறவினர்களுடன் சேர்ந்து வாழட்டும்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


مَنْ أَحَبَّ أَنْ يُبْسَطَ لَهُ فِي رِزْقِهِ وَيُنْسَأَ لَهُ فِي أَثَرِهِ فَلْيَصِلْ رَحِمَهُ


Kubra-Bayhaqi-21127

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

21127. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வட்டியில் மிக மோசமான வட்டி, அநியாயமாக ஒரு முஸ்லிமின் மானத்தை வாங்குவதாகும்.

அறிவிப்பவர்: ஸயீத் பின் ஸைத் (ரலி)


مِنْ أَرْبَى الرِّبَا الِاسْتِطَالَةُ فِي عِرْضِ الْمُسْلِمِ بِغَيْرِ حَقٍّ


Kubra-Bayhaqi-13216

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

13216. …நானே அல்லாஹ். நானே ரஹ்மான். நான் “ரஹிமை’ (உறவுமுறையை) படைத்து அதற்குரிய பெயரை எனது பெயரிலிருந்து எடுத்தேன்.

யார் அதைச் சேர்த்துக் கொள்கிறாரோ அவரை நானும் சேர்த்துக் கொள்கிறேன். யார் அதைத் துண்டிக்கிறாரோ அவரை நானும் துண்டித்து விடுகிறேன் .”

என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி)


يَقُولُ قَالَ اللهُ عَزَّ وَجَلَّ: أَنَا اللهُ وَأَنَا الرَّحْمَنُ خَلَقْتُ الرَّحِمَ وَشَقَقْتُ لَهَا مِنَ اسْمِي، فَمَنْ وَصَلَهَا وَصَلْتُهُ وَمَنْ قَطَعَهَا بَتَتُّهُ


Kubra-Bayhaqi-13217

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

13217. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் படைப்புகளைப் படைத்து முடித்த போது, உறவானது எழுந்து நின்று, இது  “உறவுகளைத் துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்பு கோரும் இடம் தானே?” என்று கூறியது. அதற்கு அல்லாஹ் ஆம் என்று கூறினான்.

பின்பு “உன்னை (உறவை) பேணி நல்ல முறையில் நடந்து கொள்பவருடன் நானும் நல்ல முறையில் நடந்து கொள்வேன் என்பதும் உன்னைத் துண்டித்து விடுகின்றவரை நானும் துண்டித்து விடுவேன் என்பதும் உனக்குத் திருப்தியளிக்கவில்லையா?” என்று கேட்டான். அதற்கு உறவு, “ஆம், என் இறைவா” என்று கூறியது. அல்லாஹ், “இது உனக்காக நடக்கும்” என்று கூறினான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,

“நீங்கள் விரும்பினால் “நீங்கள் புறக்கணித்து பூமியில் குழப்பம் ஏற்படுத்தவும், உங்கள் உறவுகளை முறிக்கவும் முயல்வீர்களா? அவர்களையே அல்லாஹ் சபித்தான். அவர்களைச் செவிடாக்கினான். அவர்களின் பார்வைகளைக் குருடாக்கினான். அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள்மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா?” (47:22-24) ஆகிய இறைவசனங்களை ஓதிக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


إِنَّ اللهَ خَلَقَ الْخَلْقَ حَتَّى إِذَا فَرَغَ مِنْ خَلْقِهِ قَالَتِ الرَّحِمُ: هَذَا مَقَامُ الْعَائِذِ مِنَ الْقَطِيعَةِ قَالَ: نَعَمْ أَلَا تَرْضَيْنَ أَنْ أَصِلَ مَنْ وَصَلَكِ وَأَقْطَعَ مَنْ قَطَعَكِ؟ قَالَتْ: بَلَى يَا رَبِّ قَالَ: فَهُوَ لَكِ ” قَالَ رَسُولُ اللهِ صَلَى الله عَلَيْهِ وَسَلَّمَ: ” وَاقْرءُوا إِنْ شِئْتُمْ {فَهَلْ عَسَيْتُمْ إنْ تَوَلَّيْتُمْ أَنْ تُفْسِدُوا فِي الْأَرْضِ، وَتُقَطِّعُوا أَرْحَامَكُمْ أُولَئِكَ الَّذِينَ لَعَنَهُمُ اللهُ فَأَصَمَّهُمْ وَأَعْمَى أَبْصَارَهُمْ} [محمد: 23]


Kubra-Bayhaqi-13218

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

13218. உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழைய மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்…

அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி)


لَا يَدْخُلُ الْجَنَّةَ قَاطِعٌ


Kubra-Bayhaqi-19273

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

19273. நபி (ஸல்) அவர்கள்,  நபியான பிறகு தனக்காக அகீகா கொடுத்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

பைஹகீ இமாம் கூறுகிறார்:

அப்துல்லாஹ் பின் முஹர்ரர் என்பவரை ஹதீஸ்கலை அறிஞர்கள் கைவிட்டது இந்த செய்தியின் காரணமாகத்தான் என்று அப்துர்ரஸ்ஸாக் அவர்கள் கூறியுள்ளார்.

மேலும், இந்தச் செய்தி கதாதா (ரஹ்) வழியாகவும், அனஸ் (ரலி) வழியாகவும் வேறு அறிவிப்பாளர்தொடரில் வந்துள்ளது. அவை ஒரு பொருட்டே அல்ல.

 


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَقَّ عَنْ نَفْسِهِ بَعْدَ النُّبُوَّةِ.


Kubra-Bayhaqi-13408

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

13408. நபி (ஸல்) அவர்கள் இரத்தம் குத்தி எடுத்துவிட்டு பிறகு என்னிடம் “இந்த இரத்தத்தை எடுத்து பறவைகள் அல்லது மக்கள் மற்றும் கால்நடைகளின் (கண்ணில் படாதவாறு) புதைத்துவிடு” என்று கூறினார்கள்…

எனவே நான் தனியே சென்று அதைக் குடித்துவிட்டேன். பிறகு அவர்கள் என்னிடம் இதைப் பற்றிக் கேட்ட போது நான் அதைக் குடித்தேன் என்று நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிவித்தேன். அவர்கள் சிரித்தார்கள்.

அறிவிப்பவர் : சஃபீனா (ரலி)


احْتَجَمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ قَالَ لِي: ” خُذْ هَذَا الدَّمَ فَادْفِنْهُ مِنَ الدَّوَابِّ وَالطَّيْرِ “، أَوْ قَالَ: النَّاسُ وَالدَّوَابُّ شَكَّ ابْنُ أَبِي فُدَيْكٍ قَالَ: فَتَغَيَّبْتُ بِهِ، فَشَرِبْتُهُ قَالَ: ثُمَّ سَأَلَنِي، فَأَخْبَرْتُهُ أَنِّي شَرِبْتُهُ فَضَحِكَ


Next Page » « Previous Page