தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Shuabul-Iman-7581

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உறவானது, இறை அரியணையின் கால்களை பிடித்துக்கொண்டுள்ளது. பதிலுக்குப் பதில் உறவாடுகின்றவர் (உண்மையில்) உறவைப் பேணியவர் அல்ல. மாறாக உறவு முறிந்தாலும் அந்த உறவுடன் இணைகின்றவரே உறவைப் பேணுபவர் ஆவார்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

(shuabul-iman-7581: 7581)

أَخْبَرَنَا أَبُو عَلِيٍّ الرُّوذْبَارِيُّ، نا عَلِيُّ بْنُ حَمْشَاذَ، نا إِسْحَاقُ بْنُ الْحَسَنِ بْنِ مَيْمُونٍ، أنا أَبُو نُعَيْمٍ، نا فِطْرٌ، عَنْ مُجَاهِدٍ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ عَمْرٍو، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

إِنَّ الرَّحِمَ مُعَلَّقَةٌ بِالْعَرْشِ، وَلَيْسَ الْوَاصِلُ بِالْمُكَافِئِ، إِنَّ الْوَاصِلَ إِذَا قُطِعَتْ رَحِمَهُ وَصَلَهَا


Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-.
Shuabul-Iman-Shamila-7581.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-7463.




إسناده حسن رجاله ثقات عدا فطر بن خليفة المخزومي وهو صدوق رمي بالتشيع

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும்  فطر بن خليفة المخزومي ஃபித்ரு பின் கலீஃபா நம்பகமானவர் என்றாலும் ஷீயா கொள்கையுடையவர் என்பதாலும், உஸ்மான் (ரலி) அவர்கள் விசயத்தில் வரம்பு மீறுபவர் என்பதாலும் சில ஹதீஸ்கலை அறிஞர்கள் இவரை ஆதாரமாக ஏற்றுக்கொள்ளவில்லை.

وقال الدارقطني : فطر زائغ ، ولم يحتج به البخاري
تهذيب التهذيب: (3 / 402)

صدوق رمي بالتشيع
تقريب التهذيب: (1 / 787)

  • புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்கள் மற்றொரு அறிவிப்பாளருடன் சேர்த்து இவரின் ஒரு ஹதீஸை பதிவு செய்துள்ளார்கள்.

சரியான ஹதீஸ் பார்க்க : புகாரி-5991 .

2 comments on Shuabul-Iman-7581

    1. அஸ்ஸலாமு அலைக்கும், ஜஸாகல்லாஹு கைரா. கூடுதல் தகவல் சேர்க்கப்பட்டுள்ளது.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.