Category: ஸுனன் குப்ரா-பைஹகீ

Sunan al-Kubra lil Behaqi
Al-Sunan al-Kabir

Kubra-Bayhaqi-17565

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

17565. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(கத்னா எனும்) விருத்தசேதனம் செய்வது ஆண்களுக்கு சுன்னதாகும். பெண்களுக்கு அது சிறந்ததாகும்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

பைஹகீ இமாம் கூறுகிறார்:

இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும். இந்தச் செய்தி நபித்தோழரின் கூற்றாக வந்துள்ளது. இதுவே மஹ்ஃபூல்-முன்னுரிமைபெற்ற செய்தியாகும்.


الْخِتَانُ سُنَّةٌ لِلرِّجَالِ , مَكْرُمَةٌ لِلنِّسَاءِ


Kubra-Bayhaqi-17567

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

17567. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(கத்னா எனும்) விருத்தசேதனம் செய்வது ஆண்களுக்கு சுன்னதாகும். பெண்களுக்கு அது சிறந்ததாகும்.

அறிவிப்பவர்: உஸாமா பின் உமைர் (ரலி)

பைஹகீ இமாம் கூறுகிறார்:

இதன் அறிவிப்பாளர்தொடரில் இடம்பெறும் ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் என்பவரை ஆதாரமாக ஏற்கக்கூடாது.

இந்தச் செய்தி ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் —> மக்ஹூல் —> அபூஅய்யூப் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. என்றாலும் இது முன்கதிஃ ஆகும்.


الْخِتَانُ سُنَّةٌ لِلرِّجَالِ وَمَكْرُمَةٌ لِلنِّسَاءِ


Kubra-Bayhaqi-17560

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

17560. உம்மு அதிய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

மதீனா நகரத்தில் இருந்த ஒரு பெண்மனி, பெண்களுக்கு (கத்னா எனும்) விருத்தசேதனம் செய்பவராக இருந்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், “ஒட்ட நறுக்கி விடாதே! (மேலோட்டமாக நறுக்குவாயாக!); இதுவே பெண்ணுக்கும் நல்லது; அவளின் (வருங்கால) கணவனுக்கும் பிடித்தமானது” என்று கூறினார்கள்.

பைஹகீ இமாம் கூறுகிறார்:

(மேற்கண்ட செய்தியில் இடம்பெறும்) முஹம்மது பின் ஹஸ்ஸான் என்பவர் யாரென்று அறியப்படாதவர் ஆவார். எனவே இந்தச் செய்தி பலவீனமானதாகும் என்று அபூதாவூத் இமாம் கூறினார்.


أَنَّ امْرَأَةً، كَانَتْ تَخْتِنُ بِالْمَدِينَةِ فَقَالَ لَهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” لَا تَنْهِكِي فَإِنَّ ذَلِكَ أَحْظَى لِلْمَرْأَةِ , وَأَحَبُّ إِلَى الْبَعْلِ


Kubra-Bayhaqi-17559

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

17559. உம்மு அதிய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (பெண்களுக்கு கத்னா எனும்) விருத்தசேதனம் செய்யும் பெண்ணிடம், “நீ விருத்தசேதனம் செய்யும்போது ஒட்ட நறுக்கி விடாதே! (மேலோட்டமாக நறுக்குவாயாக!); இதுவே பெண்ணுக்கும் நல்லது; அவளின் (வருங்கால) கணவனுக்கும் பிடித்தமானது” என்று கூறினார்கள்.


أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ خَاتِنَةً تَخْتِنُ فَقَالَ: ” إِذَا خَتَنْتِ فَلَا تَنْهِكِي، فَإِنَّ ذَلِكَ أَحْظَى لِلْمَرْأَةِ , وَأَحَبُّ إِلَى الْبَعْلِ


Kubra-Bayhaqi-15533

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

15533. கணவனை இழந்த பெண், மஞ்சள் அல்லது சிகப்புச் சாயம் பூசப்பட்ட ஆடைகள், நகை ஆகியவற்றை அணியக் கூடாது; தலைக்குச் சாயம் பூசக் கூடாது; சுர்மா இடக் கூடாது’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி)


الْمُتَوَفَّى عَنْهَا لَا تَلْبَسُ الْمُعَصْفَرَ مِنَ الثِّيَابِ وَلَا الْمُمَشَّقَةَ وَلَا الْحُلِيَّ وَلَا تَخْتَضِبُ وَلَا تَكْتَحِلُ


Kubra-Bayhaqi-14629

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

14629. அஸ்மா (ரலி) அவர்களிடம் தக்கடி கொண்டு வரப்பட்டால் அதன் ஆவி அடங்கும் வரை மூடி வைக்குமாறு உத்தரவிடுவார்கள். மேலும் அவர்கள் இவ்வாறு உண்ணுவது அதிக பரகத்தைப் பெற்றுத் தரும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : உர்வா (ரஹ்)


أَنَّهَا كَانَتْ إِذَا ثَرَدَتْ غَطَّتْهُ شَيْئًا حَتَّى يَذْهَبَ فَوْرُهُ ثُمَّ تَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” إِنَّهُ أَعْظَمُ لِلْبَرَكَةِ


Kubra-Bayhaqi-68

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

68. பதனிடப்பட்ட எல்லா தோல்களும் தூய்மையானவை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்…

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)


طَهُورُ كُلِّ إِهَابٍ دِبَاغُهُ


Kubra-Bayhaqi-20835

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

20835. நான் நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக அனுப்பப்படுவதற்கு முன்பு ஒரு பொருளை வாங்கினேன். அவர்களுக்கு மீதம் தரவேண்டியிருந்தது. எனவே நான், இந்த இடத்தில் இருங்கள் (மீதப் பணத்தைக் கொண்டு) வருகிறேன் என்று வாக்குறுதி வழங்கினேன். (ஆனால்) அதை மறந்துவிட்டேன். மூன்று நாட்களுக்குப் பின்னர் எனக்கு நினைவு வந்தது. அங்கே சென்ற போது அதே இடத்தில் அவர்கள் இருந்தார்கள். அப்போது, இளைஞனே எனக்கு கஷ்டத்தைத் தந்துவிட்டாயே? நான் மூன்று நாட்களே இதே இடத்தில் உன்னை எதிர்பார்த்து காத்திருந்தேன் என்று நபிகளார் கூறினார்கள்…

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அபீ ஹம்சா (ரலி)


بَايَعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَبَقِيَتْ لَهُ بَقِيَّةٌ , فَوَعَدْتُهُ أَنْ آتِيَهُ بِهَا فِي مَكَانِهِ ذَلِكَ , قَالَ: فَنَسِيتُهُ يَوْمِي ذَاكَ , وَالْغَدَ , فَأَتَيْتُهُ فِي الْيَوْمِ الثَّالِثِ وَهُوَ فِي مَكَانِهِ , فَقَالَ لِي: ” يَا فَتًى , لَقَدْ شَقَقْتَ عَلَيَّ , أَنَا هَهُنَا مِنْ ثَلَاثٍ أَنْتَظِرُكَ

 


Kubra-Bayhaqi-19293

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

19293. அகீகா(வாக கொடுக்கப்படும் பிராணியை) ஏழாவது நாள் அல்லது பதினான்காம் நாள் அல்லது இருபத்து ஒன்றாம் நாள் அறுக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: புரைதா (ரலி)


الْعَقِيقَةُ تُذْبَحُ لِسَبْعٍ , وَلِأَرْبَعَ عَشْرَةَ , وَلِإِحْدَى وَعِشْرِينَ


Kubra-Bayhaqi-17563

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

17563. …நபி (ஸல்) அவர்கள் தம் பேரர்களான ஹஸன் ரலி ஹுஸைன் ரலி ஆகியோருக்கு ஏழாம் நாளில் கத்னா செய்தனர்…


عَقَّ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْحَسَنِ وَالْحُسَيْنِ وَخَتَنَهُمَا لِسَبْعَةِ أَيَّامٍ


Next Page » « Previous Page