17560. உம்மு அதிய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
மதீனா நகரத்தில் இருந்த ஒரு பெண்மனி, பெண்களுக்கு (கத்னா எனும்) விருத்தசேதனம் செய்பவராக இருந்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், “ஒட்ட நறுக்கி விடாதே! (மேலோட்டமாக நறுக்குவாயாக!); இதுவே பெண்ணுக்கும் நல்லது; அவளின் (வருங்கால) கணவனுக்கும் பிடித்தமானது” என்று கூறினார்கள்.
பைஹகீ இமாம் கூறுகிறார்:
(மேற்கண்ட செய்தியில் இடம்பெறும்) முஹம்மது பின் ஹஸ்ஸான் என்பவர் யாரென்று அறியப்படாதவர் ஆவார். எனவே இந்தச் செய்தி பலவீனமானதாகும் என்று அபூதாவூத் இமாம் கூறினார்.
وَأَخْبَرَنَا أَبُو عَلِيٍّ الرُّوذْبَارِيُّ، أنبأ أَبُو بَكْرِ بْنُ دَاسَةَ، ثنا أَبُو دَاوُدَ، ثنا سُلَيْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، وَعَبْدُ الْوَهَّابِ بْنُ عَبْدِ الرَّحِيمِ الْأَشْجَعِيُّ، قَالَا: ثنا مَرْوَانُ، ثنا مُحَمَّدُ بْنُ حَسَّانَ، قَالَ: عَبْدُ الْوَهَّابِ الْكُوفِيُّ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ أُمِّ عَطِيَّةَ الْأَنْصَارِيَّةِ،
أَنَّ امْرَأَةً، كَانَتْ تَخْتِنُ بِالْمَدِينَةِ فَقَالَ لَهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” لَا تَنْهِكِي فَإِنَّ ذَلِكَ أَحْظَى لِلْمَرْأَةِ , وَأَحَبُّ إِلَى الْبَعْلِ
قَالَ أَبُو دَاوُدَ: مُحَمَّدُ بْنُ حَسَّانَ مَجْهُولٌ , وَهَذَا الْحَدِيثُ ضَعِيفٌ
Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-17560.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-16137.
إسناد ضعيف فيه محمد بن حسان وهو مجهول (جوامع الكلم)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ முஹம்மது பின் ஹஸ்ஸான் என்பவர் யாரென்று அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: அபூதாவூத்-5271.
சமீப விமர்சனங்கள்