தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-5271

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

(கத்னா எனும்) விருத்தசேதனம் பற்றி வந்துள்ளவை.

உம்மு அதிய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

மதீனா நகரத்தில் இருந்த ஒரு பெண்மனி, பெண்களுக்கு (கத்னா எனும்) விருத்தசேதனம் செய்பவராக இருந்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், “ஒட்ட நறுக்கி விடாதே! (மேலோட்டமாக நறுக்குவாயாக!); இதுவே பெண்ணுக்கும் நல்லது; அவளின் (வருங்கால) கணவனுக்கும் பிடித்தமானது” என்று கூறினார்கள்.

அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தி உபைதுல்லாஹ் பின் அம்ர் —> அப்துல்மலிக் என்ற அறிவிப்பாளர்தொடரிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது பலமான செய்தியல்ல. இது முர்ஸலாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

(மேற்கண்ட செய்தியில் இடம்பெறும்) முஹம்மது பின் ஹஸ்ஸான் என்பவர் யாரென்று அறியப்படாதவர் ஆவார். எனவே இந்தச் செய்தி பலவீனமானதாகும்.

(அபூதாவூத்: 5271)

بَابُ مَا جَاءَ فِي الْخِتَانِ

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدِّمَشْقِيُّ، وَعَبْدُ الْوَهَّابِ بْنُ عَبْدِ الرَّحِيمِ الْأَشْجَعِيُّ، قَالَا: حَدَّثَنَا مَرْوَانُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَسَّانَ، قَالَ عَبْدُ الْوَهَّابِ الْكُوفِيُّ: عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ أُمِّ عَطِيَّةَ الْأَنْصَارِيَّةِ،

أَنَّ امْرَأَةً كَانَتْ تَخْتِنُ بِالْمَدِينَةِ فَقَالَ لَهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَنْهِكِي فَإِنَّ ذَلِكَ أَحْظَى لِلْمَرْأَةِ، وَأَحَبُّ إِلَى الْبَعْلِ»

قَالَ أَبُو دَاوُدَ: رُوِيَ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنْ عَبْدِ الْمَلِكِ، بِمَعْنَاهُ وَإِسْنَادِهِ قَالَ أَبُو دَاوُدَ: «لَيْسَ هُوَ بِالْقَوِيِّ وَقَدْ رُوِيَ مُرْسَلًا» قَالَ أَبُو دَاوُدَ: وَمُحَمَّدُ بْنُ حَسَّانَ مَجْهُولٌ وَهَذَا الْحَدِيثُ ضَعِيفٌ


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-4587.
Abu-Dawood-Shamila-5271.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-4589.




إسناد ضعيف فيه محمد بن حسان وهو مجهول (جوامع الكلم)

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-38579-முஹம்மது பின் ஹஸ்ஸான் என்பவர் பற்றி, இவர் யாரென்று அறியப்படாதவர் என அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    இப்னு அதீ,பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    போன்ற அறிஞர்கள் கூறியுள்ளனர்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/539)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும். 

  • இந்த செய்தியின் அனைத்து அறிவிப்பாளர்தொடர்களும் பலவீனமாக இருந்தாலும் இது பலதரப்பட்ட அதிகமான அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது என்பதின் அடிப்படையில் அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள் இதை ஸஹீஹ் (லிஃகைரிஹீ) என்று கூறியுள்ளார்.

(நூல்: அஸ்ஸஹீஹா-722)

(இந்தக் கருத்தில் வரும் செய்திகளை சிலர் சரியானது என்று கருதுவதால் பெண்களுக்கும் கத்னா செய்வது அவசியம் என்று சிலரும், சுன்னத் என்று சிலரும், கட்டாயம் இல்லை; விரும்பினால் செய்துக் கொள்ளலாம் என்று சிலரும் கூறியுள்ளனர்)

  • பெண்களின் பிறப்புறுப்பில் உணர்வுகளின் முடிச்சு என்று கூறப்படும் பகுதியை வெட்டி எடுப்பதை பெண்களின் கத்னா என்கின்றனர்.
  • ஷாபி இமாம் உள்ளிட்ட பலர் ஆண்களுக்கும், பெண்களுக்கும் கத்னா கடமை என்கின்றனர். அபூஹனீஃபா பிறப்பு ஹிஜ்ரி 80
    இறப்பு ஹிஜ்ரி 150
    வயது: 70
    இமாம், மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
    இறப்பு ஹிஜ்ரி 179
    வயது: 86
    முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
    இமாம் ஆகியோர் உள்ளிட்ட பலர் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அது சுன்னத் என்று கூறுவதாக நவவீ பிறப்பு ஹிஜ்ரி 631
    இறப்பு ஹிஜ்ரி 676
    வயது: 45
    அவர்கள் குறிப்பிடுகிறார்.
  • பெண்களுக்கும் கத்னா செய்ய வேண்டும் என்று வரும் செய்திகள் அனைத்தும் பலவீனமாக உள்ளன. அதனால் பெண்கள் கத்னா செய்வது இஸ்லாமிய வழி அல்ல. மேலும் மருத்துவ ஆய்வு ரீதியிலும் இது சரியானதல்ல என்று கூறப்பட்டுள்ளது.

காரணம், ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாலுணர்வை அல்லாஹ் வழங்கியுள்ளான். அந்த உணர்வைக் கொண்டே உலகம் நிலை பெற்றுள்ளது. அவர்கள் உடலுறவின் மூலம் அந்த இச்சையைத் தணித்துக் கொள்கின்றனா். பெண்களுக்கு கத்னா செய்வதால் அவர்கள் அந்த பாக்கியத்தை இழந்து விடுகின்றனர். இல்லறத்தில் அவர்கள் பூரண திருப்தியை அடைவதில்லை. அடைய முடியாது. ஆண்களுக்கு கத்னா செய்வது அவா்களின் அந்த உணர்வுக்குத் தடையாக இராது. அதற்கு உறுதுணையாக இருக்கும். இதற்கு மேல் விளக்கமாக இதை எழுதஇயலாது. இறைவன் எந்த நோக்கத்திற்காக பிறப்புறுப்புக்களை அமைத்துள்ளானோ அந்த நோக்கத்தில் பெரும்பகுதி பெண்களுக்கு கத்னா செய்வதால் அடிபட்டுப் போகின்றது. அல்லாஹ் வழங்கிய பாக்கியத்தை அழித்துக் கொள்வது என்ற அடிப்படையில் பார்க்கும் போது பெண்களுக்கு கத்னா செய்வது கொடூரமானது என்று அறியலாம்.

1 . இந்தக் கருத்தில் உம்மு அதிய்யா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-5271 , ஸுனன் குப்ரா பைஹகீ-17559 , 17560, ஷுஅபுல் ஈமான்-8278 , முவள்ளிஹு அவ்ஹாம்-,

2 . ளஹ்ஹாக் பின் கைஸ் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: ஹாகிம்-6236 .

3 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-2253 .

4 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-6178 .

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-26468 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.