தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bazzar-6178

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், (ஒரு தடவை) அன்ஸாரி நபித்தோழியரிடம் வந்தார்கள். அப்போது அவர்களிடம், “அன்ஸாரி பெண்களே! நீங்கள் உருவமில்லாத (வடிவத்தில்) மருதாணி வையுங்கள்;

(பெண்களுக்கு கத்னா எனும் விருத்தசேதனம் செய்யும்போது) மேலோட்டமாக நறுக்குங்கள்! ஒட்ட நறுக்கி விடாதீர்கள்! இதுவே உங்கள் கணவருக்கு பிடித்தமானது;

உபகாரம் செய்வோருக்கு நன்றிமறப்பதை விட்டு உங்களை எச்சரிக்கிறேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: நாஃபிஉ (ரஹ்)

மின்தல் என்பவர், “உபகாரம் செய்வோர்” என்பதின் கருத்து “கணவர்கள்” என்று விளக்கம் கூறினார்.

பஸ்ஸார் இமாம் கூறுகிறார்:

இதுவே இப்னு உமர் (ரலி) அவர்களின் வழியாக வரும் செய்திகளில் (நான் தொகுத்த வரிசையின்படி) கடைசி செய்தியாகும்.

(bazzar-6178: 6178)

حَدَّثنا سَهْل بن بحر، حَدَّثنا علي بن عَبد الحميد، حَدَّثنا مَنْدَلُ بْنُ عَلِيٍّ، عَن ابْنِ جُرَيج، عَن إِسْمَاعِيل بْنِ أُمَيَّة، عَن نافعٍ، عَن ابْنِ عُمَر قَالَ:

دَخَلَ عَلَى النَّبِيّ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم نسوة من الأنصار فقال: يانساء الأنصار اختضبن خمسا

وَاخْفِضْنَ، ولاَ تُنْهِكْنَ فَإِنَّهُ أَحْظَى عِنْدَ أَزْوَاجِكُنَّ وَإِيَّاكُنْ وَكُفْرَ الْمُنَعَّمِينَ

قَالَ مَنْدَلٌ: يَعْنِي الأَزْوَاجَ.

آخِرُ مِسْنَدِ ابْنِ عُمَرَ وَالْحَمْدُ للَّهِ


Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-6178.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-1755.




குறிப்பு: இதில் இடம்பெறும்- اختضبن خمسا என்ற வார்த்தை தவறாகும். முஸ்னத் பஸ்ஸாரின் வேறு பிரதிகளிலும், வேறு நூல்களிலும் اختضبن غَمْساً என்று இடம்பெற்றுள்ளது.

إسناد شديد الضعف فيه مندل بن علي العنزي وهو متروك الحديث (جوامع الكلم)

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-32455-(மன்தல் அல்லது) மின்தல் பின் அலீ என்பவர் பற்றி ஹதீஸ்கலை அறிஞர்களில் அதிகமானோர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.
  • இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்கள், இவர் நினைவாற்றல் சரியில்லாதவர் என்பதால் முர்ஸலான செய்திகளை மர்ஃபூவாகவும், மவ்கூஃபான செய்திகளை முஸ்னதாகவும் அறிவிப்பார் என்பதால் இவர் கைவிடப்பட்டவர் என்று விமர்சித்துள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.4/152, தக்ரீபுத் தஹ்தீப்-1/970)

இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

4 . இந்தச் செய்தியின் முதல் பகுதியின் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-6178 , கஷ்ஃபுல் அஸ்தார்-3014, ஷுஅபுல் ஈமான்-8279 ,

كشف الأستار عن زوائد البزار (3/ 385)

3014 – حَدَّثَنَا سَهْلُ بْنُ بَحْرٍ، ثنا عَلِيُّ بْنُ عَبْدِ الْحَمِيدِ، ثنا مَنْدَلُ بْنُ عَلِيٍّ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أُمَيَّةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: دَخَلَ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نِسْوَةٌ مِنَ الأَنْصَارِ، فَقَالَ: ” يَا نِسَاءَ الأَنْصَارِ: اخْتَضِبْنَ غَمْسًا، وَأَخْفِضْنَ وَلا تُنْهِكْنَ , فَإِنَّهُ أَحْظَى عِنْدَ أَزْوَاجِكُنَّ، وَإِيَّاكُمْ وَكُفْرَ الْمُنَعَّمِينَ “. قَالَ مَنْدَلٌ: يَعْنِي: الزَّوْجَ.

மேலும் பார்க்க: அபூதாவூத்-4166 .

  • இந்தச் செய்தியின் இரண்டாவது பகுதியின் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
    இறப்பு ஹிஜ்ரி 74
    வயது: 84
    நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
    (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-5271.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.