தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-4166

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு பெண் திரைக்குப் பின்னால் இருந்துக்கொண்டு, தனது கையை நபி (ஸல்) அவர்களிடம் நீட்டினார். அவரின் கையில் கடிதம் இருந்தது. அவரின் கையைப் பிடித்த நபி (ஸல்) அவர்கள், இது ஆணின் கரமா? அல்லது பெண்ணின் கரமா? என்று எனக்குத் தெரியவில்லையே! என்று கூறினார்கள். அதற்கு அந்தப்பெண், “பெண்ணின் கரம்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் பெண்ணாக இருந்தால் உங்கள் நகங்களை (மருதாணி போன்றதைக் கொண்டு) மாற்றியிருக்க வேண்டுமே! என்று கூறினார்கள்.

(அபூதாவூத்: 4166)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُحَمَّدٍ الصُّورِيُّ، حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَنَا مُطِيعُ بْنُ مَيْمُونٍ، عَنْ صَفِيَّةَ بِنْتِ عِصْمَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ:

أَوْمَتْ امْرَأَةٌ مِنْ وَرَاءِ سِتْرٍ بِيَدِهَا، كِتَابٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَبَضَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَهُ، فَقَالَ: «مَا أَدْرِي أَيَدُ رَجُلٍ، أَمْ يَدُ امْرَأَةٍ؟» قَالَتْ: بَلِ امْرَأَةٌ، قَالَ: «لَوْ كُنْتِ امْرَأَةً لَغَيَّرْتِ أَظْفَارَكِ» يَعْنِي بِالْحِنَّاءِ


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-4166.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-3637.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-19830-ஸஃபிய்யா பின்த் இஸ்மா யாரென அறியப்படாதவர்.

(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/1360)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

1 . இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • முதீஉ பின் மைமூன் —> ஸஃபிய்யா பின்த் இஸ்மா —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
    இறப்பு ஹிஜ்ரி 58
    வயது: 66
    உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
    (ரலி)

பார்க்க: அஹ்மத்-26258 , அபூதாவூத்-4166 , குப்ரா நஸாயீ-9311 , நஸாயீ-5089 , அல்முஃஜமுல் அவ்ஸத்-3765 , 6706 , குப்ரா பைஹகீ-13499 , 13500 ,

  • ஃகிப்தா பின்த் அம்ர் —> உம்முல் ஹஸன் —> உம்முல் ஹஸனின் பாட்டி —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
    இறப்பு ஹிஜ்ரி 58
    வயது: 66
    உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
    (ரலி)

பார்க்க: அபூதாவூத்-4165 , குப்ரா பைஹகீ-13498 ,

2 . உம்மு ஸுஃபர்-ஸவ்தா பின்த் ஆஸிம் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-712 .

3 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: கஷ்ஃபுல் அஸ்தார்-3013 ,

كشف الأستار عن زوائد البزار (3/ 384)

بَابُ اخْتِضَابِ النِّسَاءِ بِالْحِنَّاءِ

3013 – حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعِيدٍ، ثنا حُسَيْنُ بْنُ مُحَمَّدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الْمَلِكِ الْفِهْرِيِّ، عَنْ لَيْثٍ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ: أَنَّ امْرَأَةً، أَتَتِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تُبَايِعُهُ، وَلَمْ تَكُنْ مُخْتَضِبَةً، فَلَمْ يُبَايِعْهَا حَتَّى اخْتَضَبَتْ.

قَالَ الْبَزَّارُ: لا نَعْلَمُهُ يُرْوَى عَنِ ابْنِ عَبَّاسٍ، إِلا بِهَذَا الإِسْنَادِ , وَالْفِهْرِيُّ لَيْسَ بِهِ بَأْسٌ، وَلَيْسَ بِالْحَافِظِ.

இப்னுஅப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண் (பைஅத் எனும்) உறுதிமொழி வாங்குவதற்கு வந்தார். அவர் கையில் மருதாணியிடாதவராக இருந்ததால் அவரிடம் நபி (ஸல்) அவர்கள் உறுதிமொழியை ஏற்கவில்லை. அவர் மருதாணியிட்டு (கையின் நிறத்தை மாற்றிய பிறகே) அவரின் உறுதிமொழியை ஏற்றார்கள்.

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-34781-லைஸ் பின் அபூஸுலைம்-லைஸ் பின் அய்மன் என்பவர் பற்றி பல அறிஞர்கள் பலவீனமானவர் என்றும், நினைவாற்றல் சரியில்லாதவர் என்றும் விமர்சித்துள்ளனர். இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் இவர் மூளைக்குழம்பிவிட்டார். இவரின் எந்த செய்திகள் சரியானவை எந்த செய்திகள் தவறானவை என பிரித்து அறியமுடியவில்லை எனவே இவர் கைவிடப்பட்டுவிட்டார் என்று கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/484, தக்ரீபுத் தஹ்தீப்-5721)

எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

4 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-6178 .

5 . முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
பின் அப்துர்ரஹ்மான் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-1054 ,

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-5271 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.