தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-1054

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

முஸ்லிம் பின் அப்துர்ரஹ்மான் (ரலி) அவர்களின் அறிவிப்புகள்:

முஸ்லிம் பின் அப்துர்ரஹ்மான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கா வெற்றியின்போது ஸஃபா குன்றின் மீது இருந்தவர்களாக நபி (ஸல்) அவர்கள் பெண்களிடம் (பைஅத் எனும்) உறுதிமொழி வாங்கிகொண்டிருந்ததை நான் பார்த்தேன். அப்போது உறுதிமொழி கூறிய ஒரு பெண்ணின் கை ஆணின் கையைப்போன்று இருந்ததால் நபி (ஸல்) அவரிடமிருந்து உறுதிமொழியை ஏற்க மறுத்துவிட்டார்கள். எனவே அந்தப் பெண் திரும்பிச் சென்று தனது கையில் மஞ்சள்நிற சாயமிட்டு வந்தார்.

மேலும் ஒரு மனிதர் இரும்பு மோதிரம் அணிந்துக் கொண்டு வந்தார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இரும்பு மோதிரம் அணிந்திருக்கும் கையை அல்லாஹ் தூய்மையாக்கமாட்டான்” என்று கூறினார்கள்.

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 1054)

مُسْلِمُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عِقَالٍ الْحَرَّانِيُّ، ثنا أَبُو جَعْفَرٍ النُّفَيْلِيُّ، ثنا عَبَّادُ بْنُ كَثِيرٍ الرَّمْلِيُّ، عَنْ شَمْسِيَّةَ بِنْتِ نَبْهَانَ، عَنْ مَوْلَاهَا مُسْلِمُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ:

رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُبَايِعُ النِّسَاءَ عَامَ الْفَتْحِ عَلَى الصَّفَا، فَقَالَتِ امْرَأَةٌ كَأَنَّ يَدَهَا يَدُ الرِّجَالِ، فَأَبَى أَنْ يُبَايِعَهَا حَتَّى ذَهَبَتْ فَغَيَّرَتْ يَدَهَا بِصُفْرَةٍ، وَأَتَاهُ رَجُلٌ فِي يَدِهِ خَاتَمٌ مِنْ حَدِيدٍ، فَقَالَ: «مَا طَهَّرَ اللهُ كَفًّا فِيهَا خَاتَمٌ مِنْ حَدِيدٍ»


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-1054.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-16428.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-20654-அப்பாத் பின் கஸீர் அர்ரம்லீ-அஷ்ஷாமீ என்பவர் பற்றி இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
    இறப்பு ஹிஜ்ரி 234
    வயது: 73
    ஆகியோர் மட்டுமே பலமானவர் என்று கூறியுள்ளனர்.
  • புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    இமாம் இவர் விசயத்தில் ஆட்சேபனை உள்ளது என்று கூறியுள்ளார்.
  • அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    அபூஸுர்ஆ ஆகியோர் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அபூநுஐம் ஆகியோர் இவர் ஒரு பொருட்டே அல்ல என்று கூறியுள்ளனர்.
  • இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்கள், அப்பாத் பின் கஸீர் அஸ்ஸகஃபீ அல்பஸரீ என்பவர் வேறு; இவர் வேறு என்று கூறுவதுடன் இவர் அறிவிக்கும் ஒரு செய்தியால்.. இவரை இவ்வாறு கடுமையாக விமர்சித்துள்ளார்.
  • அபூஸுர்ஆ அவர்கள், இரண்டு அப்பாத் பின் கஸீர்களை பற்றியும் கேட்கப்படும் போது இருவருமே பலவீனமானவர்கள் தான் என்று கூறினார்.
  • இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    அவர்கள், இவர் அப்பாத் பின் கஸீர் அல்பஸரீயை விட சிறந்தவர் என்று கூறியுள்ளார். (புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    இமாமின் விமர்சனத்தின்படி) தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அவர்கள், இவர் அப்பாத் பின் கஸீர் அல்பஸரீயை விட மிக பலவீனமானவர் என்று கூறியுள்ளார். இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவரை பலவீனமானவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-6/85, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-5/543, தாரீகுல் இஸ்லாம்-4/94, 4/418, ஸியரு-7/107, தஹ்தீபுல் கமால்-14/150, தஹ்தீபுத் தஹ்தீப்-2/281, தக்ரீபுத் தஹ்தீப்-1/482, அல்ஜாமிஉ ஃபில்ஜர்ஹி வத்தஃதீல்-2037, 1/436)

மேலும் இதில் வரும் ராவீ-19318-ஷம்ஸிய்யா பின்த் நப்ஹான் யாரென அறியப்படாதவர் ஆவார்.

எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

5 . இந்தக் கருத்தில் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
பின் அப்துர்ரஹ்மான்(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-1054 , அல்முஃஜமுல் அவ்ஸத்-1114 , கஷ்ஃபுல் அஸ்தார்-2993 ,

كشف الأستار عن زوائد البزار على الكتب الستة (3/ 378)

باب في الخاتم الحديد

2993- حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْحَرَّانِيُّ ، حَدَّثَنَا عَبَّادُ بْنُ كَثِيرٍ ، عَنْ شُمَيْسَةَ بِنْتِ نَبْهَانَ ، عَنْ مَوْلاهَا مُسْلِمِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ، قَالَ : رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ يُبَايِعُ النِّسَاءَ ، عَامَ الْفَتْحِ ، عَلَى الصَّفَاءِ ، فَجَاءَتْهُ امْرَأَةٌ يَدُهَا كَيَدِ الرَّجُلِ ، فَلَمْ يُبَايِعْهَا ، حَتَّى ذَهَبَتْ ، فَغَيَّرَتْ يَدَهَا بِصُفْرَةٍ ، أَوْ بِحُمْرَةٍ ، وَجَاءَهُ رَجُلٌ عَلَيْهِ خَاتَمٌ ، فَقَالَ : مَا طَهَّرَ اللَّهُ يَدًا ، فِيهَا خَاتَمٌ مِنْ حَدِيدٍ. قَالَ الْبَزَّارُ : لا نَعْلَمُ رَوَى مُسْلِمٌ ، إِلا هَذَا.

மேலும் பார்க்க: அபூதாவூத்-4166 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.