11775. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதன் செய்கின்ற பாவத்தின் காரணத்தால் அவனுக்கு பரக்கத் கிடைக்காமல் போகின்றது.
அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி)
«إِنَّ الرَّجُلَ لَيُحْرَمَ الرِّزْقَ بِالذَّنْبِ يُصِيبُهُ»
As-Sunan al-Kubra
11775. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதன் செய்கின்ற பாவத்தின் காரணத்தால் அவனுக்கு பரக்கத் கிடைக்காமல் போகின்றது.
அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி)
«إِنَّ الرَّجُلَ لَيُحْرَمَ الرِّزْقَ بِالذَّنْبِ يُصِيبُهُ»
9102.
«لَا يَصْلُحُ لِبَشَرٍ أَنْ يَسْجُدَ لِبَشَرٍ، وَلَوْ صَلَحَ لِبَشَرٍ أَنْ يَسْجُدَ لِبَشَرٍ لَأَمَرْتُ الْمَرْأَةَ أَنْ تَسْجُدَ لِزَوْجِهَا مِنْ عِظَمِ حَقِّهِ عَلَيْهَا»
9379.
جَاءَتِ ابْنَةُ هُبَيْرَةَ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَفِي يَدِهَا فَتَخٌ مِنْ ذَهَبٍ أَيْ خَوَاتِيمُ ضِخَامٌ ” نَحْوَهُ
7577.
«الرُّؤْيَا الْحَسَنَةُ مِنَ الرَّجُلِ الصَّالِحِ جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ»
10725.
«عَلَيْكُمْ بِالدُّلْجَةِ، فَإِنَّ الْأَرْضَ تُطْوَى بِاللَّيْلِ، فَإِذَا تَغَوَّلَتْ لَكُمُ الْغِيلَانُ فَنَادُوا بِالْأَذَانِ»
1065.
أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «قَرَأَ فِي صَلَاةِ الْمَغْرِبِ بِسُورَةِ الْأَعْرَافِ، فَرَّقَهَا فِي رَكْعَتَيْنِ»
1064. மர்வான் பின் அல்ஹகம் அவர்கள் கூறியதாவது:
(மதீனாவின் ஆளுநராயிருந்த) என்னிடம் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள், “நீங்கள் ஏன் மஃக்ரிப் தொழுகையில் மிகச் சிறிய அத்தியாயங்களையே ஓதுகிறீர்கள்! நபி (ஸல்) அவர்கள் நீளமான மிகப் பெரிய அத்தியாயங்கள் இரண்டை ஓத நான் பார்த்துள்ளேன்” என்று கூறினார்கள்.
இப்னு அபீ முலைகா (ரஹ்) கூறினார்:
நான் (உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்களிடம்) அபூ அப்தில்லாஹ் அவர்களே! அந்த இரண்டில் மிகப்பெரிய அத்தியாயம் எது என்று கேட்டேன். அதற்கு அவர்கள் அல் அஃராஃப் (7 வது) அத்தியாயம் என்று பதிலளித்தார்.
مَا لِي أَرَاكَ تَقْرَأُ فِي الْمَغْرِبِ بِقِصَارِ السُّوَرِ؟ قَدْ رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِيهَا بِطُولَى الطُّولَيَيْنِ
قُلْتُ: يَا أَبَا عَبْدِ اللهِ، مَا طُولَى الطُّولَيَيْنِ قَالَ: «الْأَعْرَافُ»
1063.
أَنَّهُ قَالَ لِمَرْوَانَ: أَبَا عَبْدِ الْمَلِكِ، أَتَقْرَأُ فِي الْمَغْرِبِ بِقُلْ هُوَ اللهُ أَحَدٌ، وَإِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرُ؟ قَالَ: نَعَمْ، قَالَ: فَمَحْلُوفَهُ لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَقْرَأُ فِيهَا بِأَطْوَلِ الطُّولَيَيْنِ المص»
9122.
பெண்களை அடிக்காதீர்கள்! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அதனால் பெண்கள் துணிச்சல் பெற்று (பழைய) குணம் கெட்டு கணவன்மார்களை எதிர்த்துப் பேசி சண்டையிட ஆரம்பித்தனர். இந்நிலையில், உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! பெண்களை அடிக்காதீர்கள்! என்று நீங்கள் தடையிட்டதிலிருந்து அவர்கள் குணம் கெட்டு கணவன்மார்களை எதிர்த்துப் பேசி சண்டையிடுகின்றனர் என்று முறையிட்டார்கள்.
எனவே நபி (ஸல்) அவர்கள், பெண்களை அடித்துக் கொள்ளுங்கள் என்று கூறி (அனுமதி வழங்கி)னார்கள். அந்த இரவில் கணவன்மார்கள் மனைவிமார்களை அடித்துவிட்டனர். அதனால் நபி (ஸல்) அவர்களின் வீட்டிற்கு அதிகமான பெண்கள் வந்து, கணவன்மார்கள் தங்களை அடிப்பதாகப் புகார் செய்தனர்.
எனவே, காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “சென்ற இரவில் முஹம்மதின் குடும்பத்தாரிடம் 70 வது பெண்கள் வந்து தங்களது கணவன்மார்கள் அடிப்பதாகப் புகார் கூறியுள்ளனர். அல்லாஹ்வின் மீது ஆணையாக! உங்களில் தனது மனைவியை அடிப்பவர் சிறந்தவரில்லை என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இயாஸ் பின் அப்துல்லாஹ் (ரலி)…
«لَا تَضْرِبُوا إِمَاءَ اللهِ» فَجَاءَ عُمَرُ فَقَالَ: «قَدْ ذَئِرَ النِّسَاءُ عَلَى أَزْوَاجِهِنَّ فَأَذِنَ لَهُمْ فَضَرَبُوهُنَّ فَطَافَ بِآلِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نِسَاءٌ كَثِيرٌ» فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَقَدْ طَافَ بِآلِ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اللَّيْلَةَ سَبْعُونَ امْرَأَةً كُلُّهُمْ يَشْتَكِينَ أَزْوَاجَهُنَّ، وَلَا تَجِدُونَ أُولَئِكَ خِيَارَكُمْ»
11121.
நபி (ஸல்) அவர்களுடன் ஹுனைன் யுத்தத்திற்குச் சென்றோம். அங்கு இணை வைப்பவர்களுக்கென்று ஒரு இலந்தை மரம் இருந்தது. அங்கு அவர்கள் (பரகத்தை) நாடி தங்களின் போர்க் கருவிகளைத் தொங்கவிட்டு அங்கு தங்கி (இஃதிகாஃப்) இருப்பார்கள். “தாத் அன்வாத்‘ என்று அதற்குச் சொல்லப்படும். நாங்கள் அந்த மரத்தின் பக்கம் சென்ற போது நபி (ஸல்) அவர்களிடத்தில் “அல்லாஹ்வின் தூதரே! அவர்களுக்கு “தாத் அன்வாத்‘ என்று இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஏற்படுத்துங்கள்” என்று கூறினோம்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் “சுப்ஹானல்லாஹ்! இவையெல்லாம் (அறியாமைக் கால) முன்னோர்களின் செயல் ஆகும்” என்று சொல்லி, “என் உயிர் யார் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நீங்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில் பனூ இஸ்ரவேலர்கள் கேட்டதைப் போல் கேட்கிறீர்கள். (அதாவது) பனூ இஸ்ராயீல்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில், “மூஸாவே! அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பதைப் போல் எங்களுக்கும் கடவுளை ஏற்படுத்துங்கள்‘ என்று கேட்டார்கள், (7:138) இதைப் போலவே, நீங்களும் கூறியுள்ளீர்கள். நிச்சயமாக, நீங்கள் உங்களுக்கு முன்னவர்களின் வழிமுறையைப் படிப்படியாகப் பின்பற்றுவீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூவாஹித்அல்லைசி(ரலி)
خَرَجْنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبْلَ حُنَيْنٍ فَمَرَرْنَا بِسِدْرَةٍ، فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ، اجْعَلْ لَنَا هَذِهِ ذَاتَ أَنْوَاطٍ، كَمَا لِلْكُفَّارِ ذَاتُ أَنْوَاطٍ، وَكَانَ الْكُفَّارُ يَنُوطُونَ سِلَاحَهُمْ بِسِدْرَةٍ وَيَعْكُفُونَ حَوْلَهَا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” اللهُ أَكْبَرُ، هَذَا كَمَا قَالَتْ بَنُو إِسْرَائِيلَ {اجْعَلْ لَنَا إِلَهًا كَمَا لَهُمْ آلِهَةً} [الأعراف: 138] إِنَّكُمْ تَرْكَبُونَ سَنَنَ الَّذِينَ مِنْ قَبْلِكُمْ
சமீப விமர்சனங்கள்