Category: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்

Musannaf-Abdur-Razzaq
Musannaf Abd al-Razzaq

Musannaf-Abdur-Razzaq-21146

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

21146. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒவ்வொரு திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் வானத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன. அந்த நாட்களில் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காத ஒவ்வோர் அடியாருக்கும் அல்லாஹ் மன்னிப்பு வழங்குகிறான்; தமக்கிடையே பகைமையுள்ள இருமனிதர்களைத் தவிர.

அப்போது “இவ்விருவரும் தமக்கிடையே சமாதானம் செய்து கொள்ளும்வரை இவர்களை விட்டுவையுங்கள்” என்று வானவர்களுக்கு அல்லாஹ் கூறிவிடுவான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

அறிவிப்பாளர் மஃமர் கூறினார்:

ஸுஹைலைத் தவிர மற்ற அறிவிப்பாளர்கள் “ஒவ்வொரு திங்கள், வியாழக்கிழமைகளில் (ஆதமுடைய மக்களின்) அமல்கள் (அல்லாஹ்விடம்) எடுத்துக்காட்டப்படும் என்று அறிவிக்கின்றனர்.


تُفْتَحُ أَبْوَابُ الْجَنَّةِ فِي كُلِّ اثْنَيْنِ وَخَمِيسٍ، وَقَالَ غَيْرُ سُهَيْلٍ: تُعْرَضُ الأَعْمَالُ كُلَّ اثْنَيْنِ وَخَمِيسٍ، فَيَغْفِرُ اللهُ لِكُلِّ عَبدٍ لاَ يُشْرِكُ بِهِ شَيْئًا، إِلاَّ المُتَشَاحِنَيْنِ، يَقُولُ اللهُ لِلْمَلاَئِكَةِ: دَعُوهُمَا حَتَّى يَصْطَلِحَا.


Musannaf-Abdur-Razzaq-7914

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

திங்கள் கிழமை நோன்பு வைத்தல்.

7914. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒவ்வொரு திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் வானத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன. அந்த நாட்களில் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காத ஒவ்வோர் அடியாருக்கும் அல்லாஹ் மன்னிப்பு வழங்குகிறான்; தமக்கிடையே பகைமையுள்ள இருமனிதர்களைத் தவிர.

அப்போது “இவ்விருவரும் தமக்கிடையே சமாதானம் செய்து கொள்ளும்வரை இவர்களை விட்டுவையுங்கள்” என்று வானவர்களில் சிலர், சிலரிடம் கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)


تُفْتَحُ أَبْوَابُ السَّمَاءِ كُلَّ اثْنَيْنِ وَخَمِيسٍ، فَيَغْفِرُ اللَّهُ لِكُلِّ عَبْدٍ لَا يُشْرِكُ بِاللَّهِ إِلَّا الْمُشَاحِنَيْنِ تَقُولُ الْمَلَائِكَةُ: ذَرُوهُمَا حَتَّى يَصْطَلِحَا


Musannaf-Abdur-Razzaq-7915

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7915. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

திங்கள், வியாழக் கிழமைகளில் நோன்பு வையுங்கள். ஏனெனில் அவ்விரண்டு நாட்களிலும் (அல்லாஹ்விடம் அடியார்களின்) செயல்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. மேலும் அல்லாஹ்விற்கு இணைவைக்காத அனைத்து அடியார்களுக்கும் (அந்த நாட்களில்) அல்லாஹ் மன்னிப்பை வழங்குகின்றான். ஆனால் விரோதம், பொறைமை கொண்டவரைத் தவிர. அவர் அதிலிருந்து மீளும் வரை அவரை விட்டுவிடுங்கள் என (வானவர்களுக்கு) அல்லாஹ் கூறிவிடுவான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


صُومُوا يَوْمَ الِاثْنَيْنِ وَالْخَمِيسِ؛ فَإِنَّهُمَا يَوْمَانِ تُرْفَعُ فِيهِمَا الْأَعْمَالُ، فَيَغْفِرُ اللَّهُ لِكُلِّ عَبْدٍ لَا يُشْرِكُ بِهِ إِلَّا لِصَاحِبِ إِحْنَةٍ يَقُولُ اللَّهُ: ذَرُوهُ حَتَّى يَتُوبَ


Musannaf-Abdur-Razzaq-21509

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

21509. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பள்ளிவாசல்களுக்கு (மனிதர்களில்) சிலர் தூண்களைப் போன்று இருப்பார்கள். அவர்களின் சபைத்தோழர்களாக வானவர்கள்   இருப்பார்கள். அவர்கள் பள்ளிவாசலுக்கு வராவிட்டால் வானவர்கள் அவர்களைத் தேடுவார்கள். அவர்களுக்கு ஏதேனும் தேவை இருந்தால் வானவர்கள் அவர்களுக்கு உதவுவார்கள். அவர்கள் நோயாளியாகி விட்டால் வானவர்கள் அவர்களை நலம் விசாரிப்பார்கள். அவர்கள் தாமதமாகி வராமல் இருந்தால் அவர்களைத் தேடுவார்கள். அவர்கள் வந்துவிட்டால், நீங்கள், “அல்லாஹ்வை நினைவு கூருங்கள்; அல்லாஹ் உங்களை நினைவு கூருவான்” என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அதாஉ பின் அப்துல்லாஹ் (ரஹ்)


إِنَّ لِلْمَسَاجِدِ أَوْتَادًا جُلَسَاؤُهُمُ المَلاَئِكَةُ يَتَفَقَّدُونَهُمْ، فَإِنْ كَانُوا فِي حَاجَةٍ أَعَانُوهُمْ، وَإِنْ مَرِضُوا عَادُوهُمْ، وَإِنْ خُلِّفُوا افْتَقَدُوهُمْ، وَإِنْ حَضَرُوا قَالُوا: اذْكُرُوا ذَكَرَكُمُ اللهُ.


Musannaf-Abdur-Razzaq-6500

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6500. நபி (ஸல்) அவர்கள் தோண்டப்படும் ஒரு கப்ருக்கு அருகில் அமர்ந்துக் கொண்டு ‘கால் பக்கம் விசாலமாக்கு! என்று குழி வெட்டுபவரிடம் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஒரு அன்ஸாரி நபித்தோழர் (ரலி)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ جَالِسًا عَلَى قَبْرٍ وَهُوَ يُلْحَدُ، فَقَالَ لِلَّذِي يَلْحَدُ: «أَوْسِعْ مِنْ قِبَلِ رِجْلَيْهِ»


Musannaf-Abdur-Razzaq-5677

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5677. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளின் தொழுகையில் முதல் ரக்அத்தில் (கூடுதலாக) ஏழு தக்பீர்கள் கூறி, பின்பு (கிராஅத்) குர்ஆன் ஓதி ருகூவிற்கு செல்லும் தக்பீர் கூறினார்கள். பின்பு இரண்டாவது ரக்அத்தில் (கூடுதலாக) ஐந்து தக்பீர்கள் கூறி, பின்பு (கிராஅத்) குர்ஆன் ஓதி பின்பு தக்பீர் கூறி ருகூஉ செய்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَبَّرَ يَوْمَ الْفِطْرِ فِي الرَّكْعَةِ الْأُولَى سَبْعًا، ثُمَّ قَرَأَ فَكَبَّرَ تَكْبِيرَةَ الرَّكْعَةِ، ثُمَّ كَبَّرَ فِي الْأُخْرَى خَمْسًا، ثُمَّ قَرَأَ، ثُمَّ كَبَّرَ، ثُمَّ رَكَعَ»


Musannaf-Abdur-Razzaq-15184

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

15184. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பிரதிவாதியிடம் ஆதாரம் இல்லையென்றால் சத்தியம் செய்வதே அவரின் கடமையாகும்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«الْمُدَّعَى عَلَيْهِ أَوْلَى بِالْيَمِينِ إِذَا لَمْ تَكُنْ بَيِّنَةٌ»


Musannaf-Abdur-Razzaq-2560

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி

2560. அல்ஹைஸம் பின் ஹனஷ் அவர்கள், இப்னு உமர் (ரலி) அவர்களைப் பார்த்தார். அவருக்கு அருகில் நின்று தொழுதார். அப்போது இப்னு உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் கபீரா; வல்ஹம்து லில்லாஹி கஸீரா; வ ஸுப்ஹானல்லாஹி புக்ரதவ் வ அஸீலா; அல்லாஹும்மஜ்அல்க அஹப்ப ஷைஇன் இலைக; வ அஹ்ஸன ஷைஇன் இன்தீ ”

(பொருள்; அல்லாஹ் மிகப் பெரியவன் அல்லாஹ் மிகப் பெரியவன் என்று பெருமைப்படுத்துகிறேன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது என்று அதிகமாகப் போற்றுகிறேன். அல்லாஹ் பரிசுத்தமானவன் என்று காலையிலும் மாலையிலும் அவனைத் துதிக்கிறேன்; அல்லாஹ்வே! எல்லாவற்றையும் விட உன்னையே எனக்கு பிரியமானதாக ஆக்கு; என்னிடத்தில் அழகானதாக ஆக்கு) என்று கூறினார்.

அறிவிப்பவர்: அபூஇஸ்ஹாக் (ரஹ்)


أَنَّهُ رَأَى ابْنَ عُمَرَ وَصَلَّى مَعَهُ إِلَى جَنْبِهِ، فَقَالَ: «اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ كَبِيرًا، وَالْحَمْدُ للَّهِ كَثِيرًا، وَسُبْحَانَ اللَّهِ بُكْرَةً وَأَصِيلًا، اللَّهُمَّ اجْعَلْكَ أَحَبَّ شَيْءٍ إِلَيَّ وَأَحْسَنَ شَيْءٍ عِنْدِي»


Musannaf-Abdur-Razzaq-2559

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2559. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கள் தொழுகையில் இருக்கும்போது ஒருவர் தொழுகையின் வரிசையில் சேர்ந்து “அல்லாஹு அக்பர் கபீரா, வல்ஹம்து லில்லாஹி கஸீரா, வ ஸுப்ஹானல்லாஹி புக்ரதவ் வ அஸீலா” (அல்லாஹ் மிகப் பெரியவன் என்று பெருமைப்படுத்துகிறேன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது என்று அதிகமாகப் போற்றுகிறேன். அல்லாஹ் பரிசுத்தமானவன் என்று காலையிலும் மாலையிலும் அவனைத் துதிக்கிறேன்) என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்தபின் “இன்ன இன்ன வார்த்தைகளை மொழிந்தவர் யார்?” என்று கேட்டார்கள். அப்போது அவர், நான்தான் அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! அதனால் நன்மையைத் தான் நாடினேன் என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அதற்காக வானத்தின் வாசல்கள் திறக்கப்பட்டதை நான் பார்த்தேன்” என்று கூறினார்கள்.

மேலும் இப்னு உமர் (ரலி) கூறினார்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறக் கேட்டதிலிருந்து நான் அதைக் கூறாமல் இருந்ததில்லை.


أَتَى رَجُلٌ وَالنَّاسُ فِي الصَّلَاةِ، فَقَالَ حِينَ وَصَلَ إِلَى الصَّفِّ: اللَّهُ أَكْبَرُ كَبِيرًا، وَالْحَمْدُ للَّهِ كَثِيرًا، وَسُبْحَانَ اللَّهِ بُكْرَةً وَأَصِيلًا، فَلَمَّا قَضَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّلَاةَ قَالَ: «مَنْ صَاحِبُ الْكَلِمَاتِ؟»، قَالَ الرَّجُلُ: أَنَا يَا رَسُولَ اللَّهِ، وَاللَّهِ مَا أَرَدْتُ بِهِنَّ إِلَّا الْخَيْرَ قَالَ: «لَقَدْ رَأَيْتُ أَبْوَابَ السَّمَاءِ فُتِحَتْ لَهُنَّ»

قَالَ ابْنُ عُمَرَ: «فَمَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ»


Musannaf-Abdur-Razzaq-8874

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

8874. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வானத்தில் உள்ள அல்பைதுல் மஃமூருக்கு “அள்ளுராக்” என்று கூறப்படும். மேலும் அது பைதுல் ஹராம் என்ற கஅபாவிற்கு நேராக (வானத்தில்) உள்ளது. அது விழுந்தால் கஅபாவின் மீதுதான் விழும். மேலும் ஒவ்வொரு நாளும் அதில் இதற்குமுன் யாரும் பார்த்திராத எழுபதாயிரம் வானவர்கள் நுழைகின்றனர். மேலும் ஏழாவது வானத்திற்கு (மக்காவிற்கு புனித எல்லை இருப்பது போன்று) அதற்கேற்ற அளவு புனித எல்லை உள்ளது.

அறிவிப்பவர்: குரைப் (ரஹ்)


«الْبَيْتُ الْمَعْمُورُ الَّذِي فِي السَّمَاءِ يُقَالُ لَهُ الضّرَاحُ وَهُوَ عَلَى الْبَيْتِ الْحَرَامِ، لَوْ سَقَطَ سَقَطَ عَلَيْهِ يَعْمُرُهُ كُلَّ يَوْمٍ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ لَمْ يَرَوْهُ قَطُّ، وَإِنَّ فِي السَّمَاءِ السَّابِعَةِ لَحَرَمًا عَلَى قَدْرِ حَرَمِهِ»


Next Page » « Previous Page