Category: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்

Musannaf-Abdur-Razzaq
Musannaf Abd al-Razzaq

Musannaf-Abdur-Razzaq-8839

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8839. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “மக்களே! அல்லாஹ் தூயவன். தூய்மையானதையே அவன் ஏற்கின்றான். அல்லாஹ் தன்னுடைய தூதர்களுக்குக் கட்டளையிட்டவற்றையே இறைநம்பிக்கையாளர்களுக்கும் கட்டளையிட்டுள்ளான்” என்று கூறிவிட்டு(ப் பின்வரும் இரு வசனங்களை) ஓதிக்காட்டினார்கள்: தூதர்களே! தூய்மையான பொருள்களிலிருந்து உண்ணுங்கள். நற்செயலைச் செய்யுங்கள். திண்ணமாக நான், நீங்கள் செய்வதை நன்கு அறிபவன் ஆவேன் (23:51). “நம்பிக்கையாளர்களே! நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையான பொருள்களிலிருந்து உண்ணுங்கள். நீங்கள் (உண்மையில்) அல்லாஹ்வைத்தான் வணங்குகிறீர்களென்றால், அவனுக்கு நன்றி பாராட்டுங்கள் (2:172).

பிறகு ஒரு மனிதரைப் பற்றிச் சொன்னார்கள். “அவர் தலைவிரி கோலத்துடனும் புழுதி படிந்த நிலையிலும் நீண்ட பயணம் மேற்கொள்கிறார். அவர் தம் கரங்களை வானை நோக்கி உயர்த்தி “என் இறைவா, என் இறைவா” என்று பிரார்த்திக்கிறார். ஆனால்,அவர் உண்ணும் உணவு தடைசெய்யப்பட்டதாக இருக்கிறது; அவர் அருந்தும் பானம் தடைசெய்யப்பட்டதாக இருக்கிறது; அவர் அணியும் உடை தடைசெய்யப்பட்டதாக இருக்கிறது; தடைசெய்யப்பட்ட உணவையே அவர் உட்கொண்டிருக்கிறார். இத்தகையவருக்கு எவ்வாறு (அவரது பிரார்த்தனை) ஏற்கப்படும்?” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


إِنَّ اللَّهَ طَيِّبٌ لَا يَقْبَلُ إِلَّا طَيِّبًا أَمَرَ الْمُؤْمِنِينَ بِمَا أَمَرَ بِهِ الْمُرْسَلِينَ [ص:20] فَقَالَ: {يَا أَيُّهَا الرُّسُلُ كُلُوا مِنَ الطَّيِّبَاتِ وَاعْمَلُوا صَالِحًا} [المؤمنون: 51] ثُمَّ قَالَ: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ} [البقرة: 172] ” قَالَ: ثُمَّ ذَكَرَ رَجُلًا يُطِيلُ السَّفَرَ، أَشْعَثَ أَغْبَرَ يَمُدُّ يَدَهُ إِلَى السَّمَاءِ يَقُولُ: يَا رَبِّ، يَا رَبِّ، وَطَعَامُهُ حَرَامٌ، وَمَلْبَسُهُ حَرَامٌ، وَغَدَا فِي الْحَرَامِ أَنَّى يَسْتَجِيبُ لَهُ


Musannaf-Abdur-Razzaq-12616

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

12616. ராபிஃவு பின் ஸினான் (ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவினார்கள். அவருடைய மனைவி இஸ்லாத்தைத் தழுவ மறுத்தாள்…

அக்குழந்தை தாயின் பக்கம் சென்றது. நபியவர்கள் அல்லாஹ்வே இக்குழந்தைக்கு நேர்வழிகாட்டு என்று கூறினார்கள். அக்குழந்தை தந்தையின் பக்கம் சென்றது. அவர் அக்குழந்தையை எடுத்துக் கொண்டார்….

அறிவிப்பவர் : ஜஃஃபர் பின் அப்தில்லாஹ் (ரஹ்)


أَنَّ جَدَّهُ أَسْلَمَ، وَأَبَتِ امْرَأَتُهُ أَنْ تُسْلِمَ، فَجَاءَ بِابْنٍ لَهُ صَغِيرٍ لَمْ يَبْلُغْ قَالَ: فَأَجْلَسَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْأَبَ هَاهُنَا، وَالْأُمَّ هَاهُنَا، ثُمَّ خَيَّرَهُ وَقَالَ: «اللَّهُمَّ اهْدِهِ» فَذَهَبَ إِلَى أَبِيهِ


Musannaf-Abdur-Razzaq-7186

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7186. மூசா பின் தல்ஹா கூறுகிறார் :

தோல் நீக்கப்பட்ட கோதுமை, தோல் நீக்கப்படாத கோதுமை, காய்ந்த திராட்சை, பேரீச்சம் பழம் ஆகியவற்றில் மட்டுமே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸகாத் வாங்கினார்கள் என எங்களிடம் உள்ள முஆத் (ரலி) அவர்களின் புத்தகத்தில் உள்ளது…


بَعَثَ الْحَجَّاجُ مُوسَى بْنَ مُغِيرَةَ عَلَى السَّوَادِ، فَأَرَادَ أَنْ يَأْخُذَ مِنْ خُضَرِ السَّوَادِ فَقَالَ: مُوسَى بْنُ طَلْحَةَ عِنْدِي كِتَابُ مُعَاذِ بْنِ جَبَلْ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمَرَهُ أَنْ يَأْخُذَ مِنِ الْحِنْطَةِ، وَالشَّعِيرِ، وَالزَّبِيبِ، وَالتَّمْرِ» قَالَ: فَذَكَرْتُ ذَلِكَ لِلْحَجَّاجِ، فَقَالَ: «صَدَقَ»


Musannaf-Abdur-Razzaq-1909

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

1909. பாங்குக்கும், இகாமத்திற்கும் இடையில் செய்யப்படும் பிரார்த்தனை மறுக்கப்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


«لَا يُرَدُّ الدُّعَاءُ بَيْنَ الْأَذَانِ، وَالْإِقَامَةِ»


Musannaf-Abdur-Razzaq-3241

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3241. இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் இரு விரல்களால் (இஷாரா) சைக்கினை செய்வதை கண்ட இப்னு உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ் ஒருவனே. எனவே நீ (இஷாரா) சைக்கினை செய்யும் போது ஒரு விரலால் மட்டுமே (இஷாரா) சைக்கினை செய் என்று அவருக்கு கூறினார்கள்” என எனக்கு நாஃபிஉ (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டது.


أَنَّ ابْنَ عُمَرَ رَأَى رَجُلًا يُشِيرُ بِإِصْبَعَيْهِ، فَقَالَ لَهُ ابْنُ عُمَرَ: «إِنَّمَا اللَّهُ إِلَهٌ وَاحِدٌ، فَأَشِرْ بِإِصْبَعٍ وَاحِدَةٍ إِذَا أَشَرْتَ»


Musannaf-Abdur-Razzaq-10420

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

10420. (ஒரு முறை) உமர் (ரலி) அவர்கள், (உரைமேடையில்) ஆண்களே! நீங்கள் மஹர் கொடுப்பதில் (அதிகமாக மஹர் கொடுத்து) எல்லை மீறாதீர்கள்! என்று கூறினார்கள். அப்போது ஒரு பெண்மணி, “உமர் அவர்களே! உங்களுக்கு இதைக் கூற அதிகாரமில்லை. அல்லாஹ் (குர்ஆனில் “ஒரு மனைவியை விவாகரத்துச் செய்து, இன்னொருத்தியை மணந்து கொள்ள நீங்கள் விரும்பினால்) அவளுக்கு ஒரு தங்க குவியலையே கொடுத்திருந்தாலும் அதில் எதையும் பிடுங்கிக் கொள்ளாதீர்கள்! (அக்கிரமமாகவும், பெரும் குற்றமாகவும் உள்ள நிலையில் அதைப் பிடுங்கிக் கொள்கிறீர்களா?-அல்குர்ஆன்-4 :20) எனக் கூறியிருக்க நீங்கள் எவ்வாறு தடுப்பீர்கள்” என்று ஆட்சேபித்தார்.

உடனே உமர் (ரலி) அவர்கள், இந்தப் பெண் உமரை வாதத்தில் வென்று விட்டார் என்று கூறினார்கள்.

(அப்துர் ரஸ்ஸாக் அவர்கள் கூறுகிறார்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களின் ஓதும் முறையில், “நீங்கள் ஒரு தங்க குவியலையே கொடுத்திருந்தாலும் அதிலிருந்து எதையும் பிடுங்கிக் கொள்வது உங்களுக்கு ஆகுமானதல்ல” என்று இருந்தது)

அறிவிப்பவர்: அபூஅப்துர்ரஹ்மான் அஸ்ஸுலமீ (ரஹ்)


قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ: «لَا تُغَالُوا فِي مُهُورِ النِّسَاءِ»، فَقَالَتِ امْرَأَةٌ: لَيْسَ ذَلِكَ لَكَ يَا عُمَرُ، إِنَّ اللَّهَ يَقُولُ: «وَإِنْ آتَيْتُمْ إِحْدَاهُنَّ قِنْطَارًا مِنْ ذَهَبٍ» قَالَ: وَكَذَلِكَ هِيَ فِي قِرَاءَةِ عَبْدِ اللَّهِ «فَلَا يَحِلُّ لَكُمْ أَنْ تَأْخُذُوا مِنْهُ شَيْئًا»، فَقَالَ عُمَرُ: «إِنَّ امْرَأَةً خَاصَمَتْ عُمَرَ فَخَصَمَتْهُ»


« Previous Page