Category: முஸ்லிம்

Muslim-5692

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5692. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

இருகறுப்பர்களான பேரீச்சம் பழமும் தண்ணீரும் உட்கொண்டு மக்கள் வயிறு நிரம்பி இருந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 53


تُوُفِّيَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، حِينَ شَبِعَ النَّاسُ مِنَ الْأَسْوَدَيْنِ: التَّمْرِ وَالْمَاءِ


Muslim-5691

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5691. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரே நாளில் இரண்டு வேளை ரொட்டியும் ஆலிவ் எண்ணெயும் வயிறு நிரம்ப உண்ணாமலேயே இறந்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 53


«لَقَدْ مَاتَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَمَا شَبِعَ مِنْ خُبْزٍ، وَزَيْتٍ فِي يَوْمٍ وَاحِدٍ مَرَّتَيْنِ»


Muslim-5690

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5690. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(என்னிடம்) ஆயிஷா (ரலி) அவர்கள், “என் சகோதரி (அஸ்மாவின்) மகனே! அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் பிறை பார்ப்போம். அடுத்த பிறையும் பார்ப்போம். அதற்கடுத்த பிறையும் பார்ப்போம். இரண்டு மாதங்கள் மூன்று பிறை பார்த்துவிட்டிருப்போம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (துணைவியர்) இல்லங்களில் (சமைப்பதற்காக அடுப்பில்) நெருப்பு பற்றவைக்கப்பட்டிராது” என்று கூறினார்கள்.

அதற்கு நான், “என் சிற்றன்னையே! (அப்படியானால்) நீங்கள் எப்படி வாழ்க்கை நடத்தினீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “இரு கறுப்பர்களான பேரீச்சம் பழமும் நீரும்தான் (அப்போது எங்கள் உணவு). இருப்பினும்,அன்சாரிகளில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அண்டை வீட்டாராக இருந்தனர். அவர்களிடம் (இலவசமாகப் பால் கறந்துகொள்வதற்கான) இரவல் ஒட்டகங்கள் இருந்தன. (அவற்றிலிருந்து பால் கறந்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அவர்கள் (அன்பளிப்பாகக்) கொடுத்தனுப்புவார்கள். அந்தப் பாலை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு அருந்தக் கொடுப்பார்கள்”

أَنَّهَا كَانَتْ تَقُولُ: وَاللهِ يَا ابْنَ أُخْتِي إِنْ كُنَّا لَنَنْظُرُ إِلَى الْهِلَالِ، ثُمَّ الْهِلَالِ، ثُمَّ الْهِلَالِ، ثَلَاثَةَ أَهِلَّةٍ فِي شَهْرَيْنِ، وَمَا أُوقِدَ فِي أَبْيَاتِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَارٌ، قَالَ: قُلْتُ: يَا خَالَةُ فَمَا كَانَ يُعَيِّشُكُمْ؟ قَالَتْ: «الْأَسْوَدَانِ التَّمْرُ وَالْمَاءُ، إِلَّا أَنَّهُ قَدْ كَانَ لِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جِيرَانٌ مِنَ الْأَنْصَارِ، وَكَانَتْ لَهُمْ مَنَائِحُ، فَكَانُوا يُرْسِلُونَ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَلْبَانِهَا، فَيَسْقِينَاهُ»


Muslim-5689

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5689. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

என்(வீட்டு) நிலைப்பேழையிலிருந்த தொலி நீக்கப்படாத சிறிது (வாற்)கோதுமையைத் தவிர, உயிருள்ளவர் உண்ணக்கூடிய பொருள் எதுவும் என் (வீட்டு) நிலைப்பேழையில் இல்லாத நிலையில் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள். அதிலிருந்து எடுத்து நீண்ட காலம் நான் உண்டேன். பிறகு அதை நான் அளந்(து பார்த்)தேன். அதனால் (சிறிது காலத்திற்குள்) அது தீர்ந்துபோய்விட்டது.

Book : 53


«تُوُفِّيَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَمَا فِي رَفِّي مِنْ شَيْءٍ يَأْكُلُهُ ذُو كَبِدٍ، إِلَّا شَطْرُ شَعِيرٍ فِي رَفٍّ لِي، فَأَكَلْتُ مِنْهُ حَتَّى طَالَ عَلَيَّ فَكِلْتُهُ فَفَنِيَ»


Muslim-5688

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5688. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தாரான நாங்கள் அடுப்பு பற்றவைக்காமல் ஒரு மாதத்தைக் கழித்திருக்கிறோம். அப்போது பேரீச்சம் பழமும் தண்ணீருமே எங்கள் உணவாக இருந்தன.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் “நாங்கள் ஒரு மாதத்தைக் கழித்துவந்தோம்” என்று இடம்பெற்றுள்ளது. “முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தார்” எனும் குறிப்பு இல்லை.

இப்னு நுமைர் (ரஹ்) அவர்களிடமிருந்து அபூகுறைப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் அறிவிப்பில், “எங்களிடம் சிறிதளவு இறைச்சி (அன்பளிப்பாக) வந்தால் தவிர” என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

Book : 53


«إِنْ كُنَّا آلَ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، لَنَمْكُثُ شَهْرًا مَا نَسْتَوْقِدُ بِنَارٍ، إِنْ هُوَ إِلَّا التَّمْرُ وَالْمَاءُ»

– وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ، قَالَا: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، وَابْنُ نُمَيْرٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، بِهَذَا الْإِسْنَادِ: إِنْ كُنَّا لَنَمْكُثُ، وَلَمْ يَذْكُرْ آلَ مُحَمَّدٍ، وَزَادَ أَبُو كُرَيْبٍ فِي حَدِيثِهِ، عَنِ ابْنِ نُمَيْرٍ: «إِلَّا أَنْ يَأْتِيَنَا اللُّحَيْمُ»


Muslim-5687

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5687. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தார் இரண்டு நாட்கள் வயிறு நிரம்ப உண்டிருந்தால், அதில் ஒரு நாள் (வெறும்) பேரீச்சம் பழமாக இருந்திருக்குமே அன்றி, (தொடர்ந்து இரு நாட்களும்) கோதுமை ரொட்டியாக இருந்திருக்காது.

Book : 53


«مَا شَبِعَ آلُ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَوْمَيْنِ مِنْ خُبْزِ بُرٍّ إِلَّا وَأَحَدُهُمَا تَمْرٌ»


Muslim-5686

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5686. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஹம்மத் (ஸல்) அவர்கள் இறுதிப்பயணம் செல்லும்வரை (இறக்கும்வரை), அவர்களின் குடும்பத்தார் கோதுமை ரொட்டியை (தொடர்ந்து) மூன்று நாட்கள் வயிறு நிரம்ப உண்டதில்லை.

Book : 53


«مَا شَبِعَ آلُ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مِنْ خُبْزِ الْبُرِّ ثَلَاثًا حَتَّى مَضَى لِسَبِيلِهِ»


Muslim-5685

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5685. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:

முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தார் கோதுமை ரொட்டியை (தொடர்ந்து) மூன்று நாட்களுக்கு மேல் வயிறு நிரம்ப உண்டதில்லை.

Book : 53


«مَا شَبِعَ آلُ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مِنْ خُبْزِ بُرٍّ فَوْقَ ثَلَاثٍ»


Muslim-5684

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5684. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:

அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் இறக்கும்வரை அவர்களின் குடும்பத்தார் (தொலி நீக்கப்படாத) கோதுமை உணவைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் வயிறு நிரம்ப உண்டதில்லை.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 53


«مَا شَبِعَ آلُ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مِنْ خُبْزِ شَعِيرٍ يَوْمَيْنِ مُتَتَابِعَيْنِ، حَتَّى قُبِضَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Muslim-5683

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5683. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறுதிப் பயணம் செல்லும்வரை (இறக்கும் வரை), கோதுமை உணவைத் தொடர்ந்து மூன்று நாட்கள் வயிறு நிரம்ப உண்டதில்லை.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

Book : 53


«مَا شَبِعَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثَةَ أَيَّامٍ تِبَاعًا مِنْ خُبْزِ بُرٍّ، حَتَّى مَضَى لِسَبِيلِهِ»


Next Page » « Previous Page