Category: முஸ்லிம்

Muslim-2765

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2765. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓர் இறைநம்பிக்கையாளர் மற்றோர் இறை நம்பிக்கையாளரின் சகோதரர் ஆவார். எனவே, தம் சகோதரர் வியாபாரம் செய்துகொண்டிருக்கும்போது தாம் (குறுக்கிட்டு) வியாபாரம் செய்ய ஓர் இறைநம்பிக்கையாளருக்கு அனுமதி இல்லை. தம் சகோதரர் பெண் பேசிக் கொண்டிருக்கும்போது (இடைமறித்துத் தமக்காக) அவர் பெண் பேசமாட்டார். சகோதரர் அதைக் கைவிடும்வரை (பொறுத்திருப்பார்).

இதை உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது (நின்று) அறிவித்தார்கள்.

Book : 16


«الْمُؤْمِنُ أَخُو الْمُؤْمِنِ، فَلَا يَحِلُّ لِلْمُؤْمِنِ أَنْ يَبْتَاعَ عَلَى بَيْعِ أَخِيهِ، وَلَا يَخْطُبَ عَلَى خِطْبَةِ أَخِيهِ حَتَّى يَذَرَ»


Muslim-2764

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2764. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில், “தம் சகோதர (இஸ்லாமிய)னின் விலைமீது விலை பேச வேண்டாம்; அவன் பெண் பேசிக்கொண்டிருக்கும்போது பெண் பேசவேண்டாம்” என (சிறிய வேறுபாட்டுடன்) இடம்பெற்றுள்ளது.

Book : 16


«عَلَى سَوْمِ أَخِيهِ، وَخِطْبَةِ أَخِيهِ»


Muslim-2763

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2763. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு முஸ்லிம் தம் சகோதர முஸ்லிம் விலை பேசிக்கொண்டிருக்கும்போது (குறுக்கிட்டு அதை விட அதிக விலை தருவதாக) விலை பேச வேண்டாம். (இதைப் போன்றே) அவர் பெண் பேசிக் கொண்டிருக்கும்போது (இடைமறித்துப்) பெண் பேசவேண்டாம்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 16


«لَا يَسُمِ الْمُسْلِمُ عَلَى سَوْمِ أَخِيهِ، وَلَا يَخْطُبْ عَلَى خِطْبَتِهِ»


Muslim-2762

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2762. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் மஅமர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “தம் சகோதர (இஸ்லாமிய)ன் வியாபாரம் செய்துகொண்டிருக்கும்போது,எவரும் (குறுக்கிட்டு விலையை) அதிகமாக்கி விடவேண்டாம்” என இடம்பெற்றுள்ளது.

Book : 16


غَيْرَ أَنَّ فِي حَدِيثِ مَعْمَرٍ: وَلَا يَزِدِ الرَّجُلُ عَلَى بَيْعِ أَخِيهِ


Muslim-2761

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2761. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வாங்கும் எண்ணமின்றி விலை ஏற்றிவிடுவதற்காக அதிக விலைக்குக் கேட்க வேண்டாம். தம் சகோதர (இஸ்லாமிய)ன் வியாபாரம் செய்துகொண்டிருக்கும்போது, (குறுக்கிட்டு) மற்றவர் வியாபாரம் செய்ய வேண்டாம். கிராமத்திலிருந்து (விற்பனைச் சரக்கு கொண்டு) வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக்கொடுக்க வேண்டாம். தம் சகோதர (இஸ்லாமிய)ன் பெண் பேசிக்கொண்டிருக்கும்போது (இடையில் குறிக்கிட்டுத் தமக்காகப்) பெண் பேச வேண்டாம். ஒரு பெண் தன் சக்களத்தியின் பாத்திரத்திலுள்ளதைக் கொட்டிக் கவிழ்ப்பதற்காக அவளை மணவிலக்குச் செய்யுமாறு (தம் மணாளரிடம்) கேட்க வேண்டாம்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 16


«لَا تَنَاجَشُوا، وَلَا يَبِعِ الْمَرْءُ عَلَى بَيْعِ أَخِيهِ، وَلَا يَبِعْ حَاضِرٌ لِبَادٍ، وَلَا يَخْطُبِ الْمَرْءُ عَلَى خِطْبَةِ أَخِيهِ، وَلَا تَسْأَلِ الْمَرْأَةُ طَلَاقَ الْأُخْرَى لِتَكْتَفِئَ مَا فِي إِنَائِهَا»


Muslim-2760

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2760. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

கிராமத்திலிருந்து (விற்பனைச்சரக்கு கொண்டு)வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம் என்றும், அல்லது வாங்கும் நோக்கமின்றி விலையை ஏற்றி விடுவதற்காக அதிக விலைக்குக் கேட்க வேண்டாம் என்றும், அல்லது தம் சகோதர (இஸ்லாமிய)ன் பெண் பேசிக்கொண்டிருக்கும் போது (இடைமறித்துத்) தமக்காகப் பெண் கேட்க வேண்டாம் என்றும், அல்லது தம் சகோதர (இஸ்லாமிய)ன் வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போது (தலையிட்டு) விற்பனை செய்ய வேண்டாம் என்றும், தன் சகோதரி (சக்களத்தி)யின் (வாழ்க்கைப்) பாத்திரத்திலுள்ளதைக் கொட்டி (அதைத் தனதாக்கி) விடுவதற்காக ஒரு பெண் (தன் மணாளரிடம்) தம் சகோதரியை மணவிலக்குச் செய்யுமாறு கேட்கவேண்டாம் என்றும் (இவையனைத்திற்கும்) நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில், அம்ருந் நாகித் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “தம் சகோதர (இஸ்லாமிய)ன் விலை பேசிக்கொண்டிருக்கும்போது அதைவிட (அதிக விலை தருவதாகக் கூறி) விலை பேச வேண்டாம்

«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ يَبِيعَ حَاضِرٌ لِبَادٍ، أَوْ يَتَنَاجَشُوا، أَوْ يَخْطُبَ الرَّجُلُ عَلَى خِطْبَةِ أَخِيهِ، أَوْ يَبِيعَ عَلَى بَيْعِ أَخِيهِ، وَلَا تَسْأَلِ الْمَرْأَةُ طَلَاقَ أُخْتِهَا لِتَكْتَفِئَ مَا فِي إِنَائِهَا، أَوْ مَا فِي صَحْفَتِهَا»، زَادَ عَمْرٌو فِي رِوَايَتِهِ: «وَلَا يَسُمِ الرَّجُلُ عَلَى سَوْمِ أَخِيهِ»


Muslim-2759

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2759. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர், தம் சகோதர (இஸ்லாமிய)ன் வியாபாரம் செய்துகொண்டிருக்கும் போது (தலையிட்டுத் தமக்காக) வியாபாரம் செய்ய வேண்டாம். தம் சகோதர (இஸ்லாமிய)ன் பெண் பேசிக்கொண்டிருக்கும்போது (குறுக்கிட்டுத்) தமக்காகப் பெண் பேசவேண்டாம். முதலில் பேசியவர் இவருக்கு அனுமதியளித்தால் தவிர!

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

Book : 16


«لَا يَبِعِ الرَّجُلُ عَلَى بَيْعِ أَخِيهِ، وَلَا يَخْطُبْ عَلَى خِطْبَةِ أَخِيهِ، إِلَّا أَنْ يَأْذَنَ لَهُ»

– وَحَدَّثَنَاهُ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ عُبَيْدِ اللهِ، بِهَذَا الْإِسْنَادِ

– وحَدَّثَنِيهِ أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ، حَدَّثَنَا حَمَّادٌ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ نَافِعٍ، بِهَذَا الْإِسْنَادِ


Muslim-2758

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 6

தம் சகோதர (இஸ்லாமிய)ன் கேட்டுக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணை மற்றவர் பெண் கேட்கலாகாது. ஒன்று முதலில் பெண் கேட்டவர் இவருக்கு அனுமதியளிக்கும் வரை, அல்லது அதைக் கைவிடும்வரை இவர் பொறுத்திருக்க வேண்டும்.

2758. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் வியாபாரம் செய்யும்போது, மற்றவர் (தலையிட்டு) வியாபாரம் செய்ய வேண்டாம். உங்களில் ஒருவர் பெண் பேசும்போது, மற்றவர் (குறுக்கிட்டுத் தமக்காகப்) பெண் பேச வேண்டாம்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 16


«لَا يَبِعْ بَعْضُكُمْ عَلَى بَيْعِ بَعْضٍ، وَلَا يَخْطُبْ بَعْضُكُمْ عَلَى خِطْبَةِ بَعْضٍ»


Muslim-2757

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2757. மைமூனா பின்த் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஹ்ராம் இல்லாத (ஹலால்) நிலையிலேயே என்னைத் திருமணம் செய்தார்கள்.


இதன் அறிவிப்பாளரான யஸீத் பின் அஸம்மு (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

மைமூனா (ரலி) அவர்கள் என் தாயின் சகோதரியும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் தாயின் சகோதரியும் ஆவார்கள்.


அத்தியாயம்: 16


«أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَزَوَّجَهَا وَهُوَ حَلَالٌ»،

قَالَ: «وَكَانَتْ خَالَتِي، وَخَالَةَ ابْنِ عَبَّاسٍ»


Muslim-2756

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2756. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மைமூனா (ரலி) அவர்களை இஹ்ராம் கட்டிய நிலையில் திருமணம் செய்தார்கள்.

Book : 16


«تَزَوَّجَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَيْمُونَةَ وَهُوَ مُحْرِمٌ»


Next Page » « Previous Page