Category: முஸ்லிம்

Muslim

Muslim-5701

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

5701. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் “ஹிஜ்ர்” பிரதேசத்தைக் கடந்து சென்றபோது, “தமக்குத் தாமே அநீதியிழைத்துக் கொண்டவர்களின் வசிப்பிடங்களில் அவர்களுக்கு நேர்ந்த அதே சோதனை உங்களுக்கும் ஏற்பட்டுவிடுமோ என்றஞ்சி, அழுதபடியே தவிர செல்லாதீர்கள்” என்று எங்களிடம் கூறினார்கள். பிறகு தமது வாகனத்தை விரட்டிக் கொண்டு, மிக விரைவாக அந்த இடத்தைக் கடந்துசென்றார்கள்.


இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள், “ஸமூத்” கூட்டத்தாரின் வசிப்பிடமான “ஹிஜ்ர்” பற்றிக் கூறும்போது மேற்கண்ட செய்தியை (ஸாலிம் பின் அப்துல்லாஹ் —> இப்னு உமர் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில்) அறிவித்தார்கள்.

அத்தியாயம்: 53


مَرَرْنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْحِجْرِ، فَقَالَ لَنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَدْخُلُوا مَسَاكِنَ الَّذِينَ ظَلَمُوا أَنْفُسَهُمْ، إِلَّا أَنْ تَكُونُوا بَاكِينَ حَذَرًا، أَنْ يُصِيبَكُمْ مِثْلُ مَا أَصَابَهُمْ» ثُمَّ زَجَرَ فَأَسْرَعَ حَتَّى خَلَّفَهَا


Muslim-5702

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

5702. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(தபூக் பயணத்தில்) மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் “ஸமூத்” கூட்டத்தார் வாழ்ந்த பகுதியான “ஹிஜ்ர்” பிரதேசத்தில் இறங்கி, அங்கிருந்த கிணறுகளில் நீரிறைத்தார்கள். அதைக் கொண்டு மாவு குழைத்தார்கள்.

அப்போது அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறைத்த நீரைக் கொட்டி விடுமாறும், (அந்தத் தண்ணீரால்) குழைக்கப்பட்ட அந்த மாவை, ஒட்டகங்களுக்குத் தீனியாகப் போட்டுவிடுமாறும் உத்தரவிட்டார்கள். மேலும், (ஸாலிஹ் நபியின்) ஒட்டகம் வந்து நீரருந்திய கிணற்றிலிருந்து நீரிறைத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டார்கள்.


மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

ஆயினும் அதில், (“கிணறுகளிலிருந்து” என்பதைக் குறிக்க “ஆபார்” என்பதற்குப் பதிலாக) “பிஆர்” என்ற சொல்லும், (“குழைத்தார்கள்” என்பதைக் குறிக்க “அஜனூ” என்பதற்குப் பதிலாக) “இஃதஜனூ”

أَنَّ النَّاسَ نَزَلُوا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْحِجْرِ – أَرْضِ ثَمُودَ – فَاسْتَقَوْا مِنْ آبَارِهَا، وَعَجَنُوا بِهِ الْعَجِينَ «فَأَمَرَهُمْ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُهَرِيقُوا مَا اسْتَقَوْا، وَيَعْلِفُوا الْإِبِلَ الْعَجِينَ، وَأَمَرَهُمْ أَنْ يَسْتَقُوا مِنَ الْبِئْرِ الَّتِي كَانَتْ تَرِدُهَا النَّاقَةُ»

– وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى الْأَنْصَارِيُّ، حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، حَدَّثَنِي عُبَيْدُ اللهِ بِهَذَا الْإِسْنَادِ، مِثْلَهُ غَيْرَ أَنَّهُ قَالَ: «فَاسْتَقَوْا مِنْ بِئَارِهَا وَاعْتَجَنُوا بِهِ»


Muslim-5703

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

பாடம்: 3

விதவைகள், ஏழைகள், அநாதைகள் ஆகியோருக்கு உதவி புரிதல்.

5703. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(கணவனை இழந்த) கைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகின்றவர், அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிபவரைப் போன்றவர் ஆவார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


மேற்கண்ட செய்தியை மாலிக் (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அப்துல்லாஹ் பின் மஸ்லமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

கணவனை இழந்த கைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகின்றவர் இரவெல்லாம் சோர்ந்து விடாது நின்று வணங்கி, பகலெல்லாம் விடாது நோன்பு நோற்றவரைப் போன்றவர் ஆவார்” (என்றும் நபி-ஸல்-அவர்கள் கூறியதாக மாலிக்-ரஹ்-அவர்கள்) அறிவித்தார்கள் என்றே நான் எண்ணுகிறேன்.

அத்தியாயம்: 53


«السَّاعِي عَلَى الْأَرْمَلَةِ وَالْمِسْكِينِ، كَالْمُجَاهِدِ فِي سَبِيلِ اللهِ – وَأَحْسِبُهُ قَالَ – وَكَالْقَائِمِ لَا يَفْتُرُ، وَكَالصَّائِمِ لَا يُفْطِرُ»


Muslim-5704

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

5704. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நானும் அநாதையின் காப்பாளரும் -அந்த அநாதை உறவுக்காரராகட்டும் அந்நியராகட்டும்- சொர்க்கத்தில் இப்படி இருப்போம்” என்று சைகை செய்து கூறினார்கள்.


இதை அறிவிக்கும்போது மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்கள், தமது சுட்டுவிரலாலும் நடுவிரலாலும் (அவற்றை இணைத்துக் காட்டி) சைகை செய்தார்கள்.

அத்தியாயம்: 53


«كَافِلُ الْيَتِيمِ لَهُ أَوْ لِغَيْرِهِ أَنَا وَهُوَ كَهَاتَيْنِ فِي الْجَنَّةِ»

وَأَشَارَ مَالِكٌ بِالسَّبَّابَةِ وَالْوُسْطَى


Muslim-5705

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

பாடம்: 4

பள்ளிவாசல்கள் எழுப்புவதன் சிறப்பு.

5705. உபைதுல்லாஹ் அல்கவ்லானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(கலீஃபா) உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டிய (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலை (விரிவுபடுத்தி)க்கட்ட எண்ணியபோது, அது குறித்து மக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

அப்போது உஸ்மான் (ரலி) அவர்கள் மக்களிடம், “நீங்கள் மிக அதிகமாகவே பேசிவிட்டீர்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யார் அல்லாஹ்வுக்காகப் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டுகிறாரோ அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் அதைப் போன்ற ஒன்றைக் கட்டுகிறான்” என்று கூறியதை நான் செவியேற்றுள்ளேன்” என்றார்கள்.


புகைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “அல்லாஹ்வின் உவப்பை நாடி பள்ளிவாசல் ஒன்றைக் கட்டுகிறாரோ” என்று (ஆஸிம் பின் உமர் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள் என நான் எண்ணுகிறேன் என்று புகைர் (ரஹ்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது. 

أَنَّهُ سَمِعَ عُثْمَانَ بْنَ عَفَّانَ، عِنْدَ قَوْلِ النَّاسِ فِيهِ حِينَ بَنَى مَسْجِدَ الرَّسُولِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّكُمْ قَدْ أَكْثَرْتُمْ، وَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” مَنْ بَنَى مَسْجِدًا – قَالَ بُكَيْرٌ: حَسِبْتُ أَنَّهُ قَالَ – يَبْتَغِي بِهِ وَجْهَ اللهِ، بَنَى اللهُ لَهُ مِثْلَهُ فِي الْجَنَّةِ “

وَفِي رِوَايَةِ هَارُونَ: «بَنَى اللهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ»


Muslim-5706

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

5706. மஹ்மூத் பின் லபீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(கலீஃபா) உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலை (விரிவுபடுத்தி)க்கட்டத் திட்டமிட்டபோது, அதை மக்கள் வெறுத்தனர்; அதை முன்பிருந்த அமைப்பிலேயே விட்டுவிட வேண்டும் என்று விரும்பினர்.

அப்போது உஸ்மான் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யார் அல்லாஹ்வி(ன் பொருத்தத்தி)ற்காகப் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டுகிறாரோ அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தில் அதைப்போன்ற ஒன்றைக் கட்டுகிறான்” என்று கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.


இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில், “அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுகிறான்” என இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 53


أَنَّ عُثْمَانَ بْنَ عَفَّانَ، أَرَادَ بِنَاءَ الْمَسْجِدِ، فَكَرِهَ النَّاسُ ذَلِكَ، وَأَحَبُّوا أَنْ يَدَعَهُ عَلَى هَيْئَتِهِ، فَقَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «مَنْ بَنَى مَسْجِدًا لِلَّهِ، بَنَى اللهُ لَهُ فِي الْجَنَّةِ مِثْلَهُ»

– وَحَدَّثَنَاهُ إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، حَدَّثَنَا أَبُو بَكْرٍ الْحَنَفِيُّ، وَعَبْدُ الْمَلِكِ بْنُ الصَّبَّاحِ، كِلَاهُمَا عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ جَعْفَرٍ، بِهَذَا الْإِسْنَادِ، غَيْرَ أَنَّ فِي حَدِيثِهِمَا: «بَنَى اللهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ»


Muslim-5707

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

பாடம்: 5

ஏழை எளியோருக்கு தானதர்மங்கள் செய்தல்.

5707. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

ஒரு மனிதர் ஒரு காட்டு நிலத்தில் இருந்த போது, ஒரு மேகத்தினிடையே “இன்ன மனிதரின் தோட்டத்திற்கு நீர் பொழி” என்று ஒரு சப்தம் வருவதைக் கேட்டார். உடனே அந்த மேகம் நகர்ந்து, கருங்கற்கள் நிறைந்த ஒரு பகுதியில் மழையைப் பொழிந்தது. அங்கிருந்த நீரோடைகளில் ஒன்றில் அந்த நீர் முழுவதும் ஓடியது. உடனே அந்த மனிதர் அந்த நீர்வழியைத் தொடர்ந்தார்.

அப்போது ஒரு மனிதர் தமது தோட்டத்தில் நின்றுகொண்டு மண்வெட்டியால் தண்ணீரை திருப்பிவிட்டுக்கொண்டிருந்தார்.

அவரிடம், “அல்லாஹ்வின் அடியாரே! உம்முடைய பெயர் என்ன?” என்று கேட்டார். அவர் “இன்னது” என மேகத்தினிடையே கேட்ட அதே பெயரைச் சொன்னார். அப்போது அவர், “அல்லாஹ்வின் அடியாரே! ஏன் என் பெயரைக் கேட்கிறீர்?” என்றார். அதற்கு அந்த மனிதர், “நான் மேகத்தினிடையே உமது பெயரைக் குறிப்பிட்டு,

بَيْنَا رَجُلٌ بِفَلَاةٍ مِنَ الْأَرْضِ، فَسَمِعَ صَوْتًا فِي سَحَابَةٍ: اسْقِ حَدِيقَةَ فُلَانٍ، فَتَنَحَّى ذَلِكَ السَّحَابُ، فَأَفْرَغَ مَاءَهُ فِي حَرَّةٍ، فَإِذَا شَرْجَةٌ مِنْ تِلْكَ الشِّرَاجِ قَدِ اسْتَوْعَبَتْ ذَلِكَ الْمَاءَ كُلَّهُ، فَتَتَبَّعَ الْمَاءَ، فَإِذَا رَجُلٌ قَائِمٌ فِي حَدِيقَتِهِ يُحَوِّلُ الْمَاءَ بِمِسْحَاتِهِ، فَقَالَ لَهُ: يَا عَبْدَ اللهِ مَا اسْمُكَ؟ قَالَ: فُلَانٌ – لِلِاسْمِ الَّذِي سَمِعَ فِي السَّحَابَةِ – فَقَالَ لَهُ: يَا عَبْدَ اللهِ لِمَ تَسْأَلُنِي عَنِ اسْمِي؟ فَقَالَ: إِنِّي سَمِعْتُ صَوْتًا فِي السَّحَابِ الَّذِي هَذَا مَاؤُهُ يَقُولُ: اسْقِ حَدِيقَةَ فُلَانٍ، لِاسْمِكَ، فَمَا تَصْنَعُ فِيهَا؟ قَالَ: أَمَّا إِذْ قُلْتَ هَذَا، فَإِنِّي أَنْظُرُ إِلَى مَا يَخْرُجُ مِنْهَا، فَأَتَصَدَّقُ بِثُلُثِهِ، وَآكُلُ أَنَا وَعِيَالِي ثُلُثًا، وَأَرُدُّ فِيهَا ثُلُثَهُ

– وَحَدَّثَنَاهُ أَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ، أَخْبَرَنَا أَبُو دَاوُدَ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ، حَدَّثَنَا وَهْبُ بْنُ كَيْسَانَ، بِهَذَا الْإِسْنَادِ، غَيْرَ أَنَّهُ قَالَ: «وَأَجْعَلُ ثُلُثَهُ فِي الْمَسَاكِينِ وَالسَّائِلِينَ وَابْنِ السَّبِيلِ»


Muslim-5708

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

பாடம்: 6

அல்லாஹ் அல்லாதவருக்காக நற்செயல் புரிவதன் மூலம் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தல்.

5708. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ் கூறினான்: நான் இணையாளர்களைவிட்டும் இணை கற்பித்தலைவிட்டும் அறவே தேவையற்றவன். யாரேனும் என்னுடன் பிறரையும் இணையாக்கி (எனக்காகவும் பிறருக்காகவும்) நற்செயல் புரிந்தால், அவனையும் அவனது இணைவைப்பையும் (தனியே) விட்டுவிடுவேன்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம்: 53


أَنَا أَغْنَى الشُّرَكَاءِ عَنِ الشِّرْكِ، مَنْ عَمِلَ عَمَلًا أَشْرَكَ فِيهِ مَعِي غَيْرِي، تَرَكْتُهُ وَشِرْكَهُ


Muslim-5709

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

5709. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் விளம்பரத்திற்காக நற்செயல் புரிந்தாரோ அவர் (உடைய நோக்கம்) பற்றி அல்லாஹ் (மறுமை நாளில்) விளம்பரப்படுத்துவான்.

யார் முகஸ்துதிக்காக நற்செயல் புரிந்தாரோ அவரை அல்லாஹ் (மறுமைநாளில்) அம்பலப்படுத்துவான்.

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம்: 53


«مَنْ سَمَّعَ سَمَّعَ اللهُ بِهِ، وَمَنْ رَاءَى رَاءَى اللهُ بِهِ»


Next Page » « Previous Page