ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது
3266. ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அரஃபாவுக்கு வந்தபோது, (அங்கு) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதைக் கண்டேன். அவர்கள் என்னிடம், “நீர் நோன்பு வைத்துள்ளாய்! என்று கருதுகிறேன். வா, இதை சாப்பிடு! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த நாளில் நோன்பு வைக்கமாட்டார்கள்” என்று கூறினார்கள்.
(மற்றொரு தடவை இதை அறிவிக்கும்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த நாளில் நோன்பு வைத்ததில்லை” என்று கூறினார்கள்)
أَتَيْتُهُ بِعَرَفَةَ، فَوَجَدْتُهُ يَأْكُلُ رُمَّانًا فَقَالَ: ادْنُ فَكُلْ، لَعَلَّكَ صَائِمٌ؟ «إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ لَا يَصُومُهُ» وَقَالَ: مَرَّةً «إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَصُمْ هَذَا الْيَوْمَ»
சமீப விமர்சனங்கள்