17147.
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَظَهُمْ يَوْمًا بَعْدَ صَلَاةِ الْغَدَاةِ، فَذَكَرَهُ
Musnad-Ahmad
17147.
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَظَهُمْ يَوْمًا بَعْدَ صَلَاةِ الْغَدَاةِ، فَذَكَرَهُ
17146.
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَظَهُمْ يَوْمًا بَعْدَ صَلَاةِ الْغَدَاةِ، فَذَكَرَهُ،
8718. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் உங்களிடத்தில் மூன்று விசயங்களை விரும்புகிறான். மூன்று விசயங்களை வெறுக்கிறான்.
1 . நீங்கள் அவனுக்கு இணைவைக்காமல் வணங்குவதையும்;
2 . உங்களின் காரியத்திற்கு யாரை அவன் பொருப்பாளனாக நியமித்துள்ளானோ அவருக்கு நீங்கள் நலம் நாடுவதையும்;
3 . பிரிந்துவிடாமல் அல்லாஹ்வின் கயிற்றை நீங்கள் அனைவரும் பற்றிப் பிடிப்பதையும் அல்லாஹ் உங்களிடத்தில் விரும்புகிறான்.
1 . (ஆதாரமில்லாமல்) இவ்வாறு சொல்லப்பட்டது, அவர் சொன்னார் என்று கூறுவதையும்;
2 . (தேவையில்லாமல்) அதிகமாகக் கேள்வி கேட்பதையும்;
3 . பொருளை விரையமாக்குவதையும் அல்லாஹ் உங்களிடத்தில் வெறுக்கிறான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ رَضِيَ لَكُمْ ثَلَاثًا، وَكَرِهَ لَكُمْ ثَلَاثًا: رَضِيَ لَكُمْ أَنْ تَعْبُدُوهُ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا، وَأَنْ تَنْصَحُوا لِمَنْ وَلَّاهُ اللَّهُ أَمْرَكُمْ، وَأَنْ تَعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا، وَلَا تَفَرَّقُوا، وَكَرِهَ لَكُمْ: قِيلَ وَقَالَ، وَكَثْرَةَ السُّؤَالِ، وَإِضَاعَةَ الْمَالِ
19153. (நபி-ஸல்-அவர்களிடம்) அல்லாஹ்வின் தூதரே! நான் அவசியம் கடைபிடிக்க வேண்டியதை எனக்குக் கூறுங்கள் என்று கூறினேன். அதற்கு அவர்கள் அல்லாஹ்விற்கு இணையாக நீர் எதையும் ஆக்காமல் அவனை வணங்க வேண்டும். கடமையான தொழுகையைத் தொழ வேண்டும். கடமையான ஸகாத்தை நீ நிறைவேற்ற வேண்டும். முஸ்லிமிற்கு நலம் நாட வேண்டும். இறை நிராகரிப்பாளனை விட்டு விலகிவிடு என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி)
قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، اشْتَرِطْ عَلَيَّ. فَقَالَ: «تَعْبُدُ اللَّهَ وَلَا تُشْرِكُ بِهِ شَيْئًا، وَتُصَلِّي الصَّلَاةَ الْمَكْتُوبَةَ، وَتُؤَدِّي الزَّكَاةَ الْمَفْرُوضَةَ، وَتَنْصَحُ لِلْمُسْلِمِ، وَتَبْرَأُ مِنَ الْكَافِرِ»
24366. உங்கள் இல்லங்களிலும் சில தொழுகைகளைத் தொழுங்கள்! அவற்றை உங்களின் அடக்கத்தலங்களாக ஆக்கி விடாதீர்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் (அடிக்கடி) கூறுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ: «اجْعَلُوا مِنْ صَلَاتِكُمْ فِي بُيُوتِكُمْ، وَلَا تَجْعَلُوهَا عَلَيْكُمْ قُبُورًا»
23628. மஹ்மூத் பின் லபீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பனூ அப்துல்அஷ்ஹல் குலத்தாரின் பள்ளிவாசலுக்கு வந்தார்கள். அப்போது அவர்களுக்கு ‘மஃக்ரிப்’ தொழுகை தொழவைத்தார்கள். அவர்கள், ஸலாம் கூறி தொழுகையை நிறைவு செய்தபோது, “மஃக்ரிப் தொழுகையின் பின் சுன்னத் இரண்டு ரக்அத் தொழுகையை உங்கள் வீடுகளில் தொழுங்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆஸிம் பின் உமர் (ரஹ்)
அபூஅப்துர்ரஹ்மான்-அப்துல்லாஹ் பின் அஹ்மத் பின் ஹம்பல் (ரஹ்) கூறுகிறார்:
நான், எனது தந்தை (அஹ்மத் பின் ஹம்பல்) அவர்களிடம், மஃக்ரிப் தொழுகையின் பின் சுன்னத் இரண்டு ரக்அத் தொழுகையை பள்ளிவாசலில் தொழக்கூடாது. வீட்டில் தான் தொழவேண்டும்; அதற்கு காரணம் நபி (ஸல்) அவர்கள், “இவை வீட்டில் தொழவேண்டிய தொழுகைகள்” என்று கூறினார்கள் என்று ஒரு மனிதர் கூறியதை குறிப்பிட்டு விளக்கம் கேட்டேன். அதற்கவர்கள், எந்த மனிதர் அப்படி கூறினார்? என்று கேட்டார்கள். அதற்கு நான், “முஹம்மது பின் அப்துர்ரஹ்மான்” என்று கூறினேன். அதற்கு என் தந்தை, அவர் கூறியது எவ்வளவு அழகான விளக்கமாக உள்ளது! என்றோ அல்லது அவர் எவ்வளவு அழகாக வித்தியாசப்படுத்திக் கூறியுள்ளார்! என்றோ (பாராட்டிக்) கூறினார்கள்.
أَتَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَنِي عَبْدِ الْأَشْهَلِ فَصَلَّى بِهِمُ الْمَغْرِبَ فَلَمَّا سَلَّمَ قَالَ: «ارْكَعُوا هَاتَيْنِ الرَّكْعَتَيْنِ فِي بُيُوتِكُمْ»
23624. மஹ்மூத் பின் லபீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (பனூ அப்துல்அஷ்ஹல் குலத்தாரான) எங்கள் பள்ளிவாசலுக்கு வந்தார்கள். அப்போது எங்களுக்கு ‘மஃக்ரிப்’ தொழுகை தொழுவித்தார்கள். அவர்கள், ஸலாம் கூறி தொழுகையை நிறைவு செய்தபோது, “(மஃக்ரிப் தொழுகையின்) இந்த இரண்டு ரக்அத் (பின் சுன்னத்) தொழுகையை உங்கள் வீடுகளில் தொழுங்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆஸிம் பின் உமர் (ரஹ்)
أَتَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى بِنَا الْمَغْرِبَ فِي مَسْجِدِنَا فَلَمَّا سَلَّمَ مِنْهَا قَالَ: «ارْكَعُوا هَاتَيْنِ الرَّكْعَتَيْنِ فِي بُيُوتِكُمْ» لِلسُّبْحَةِ بَعْدَ الْمَغْرِبِ
21677. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்கள் இல்லங்களில் (சில தொழுகைகளை) தொழுதுக் கொள்ளுங்கள். அவற்றை (தொழுகை, ஓதல் நடைபெறாத) சவக்குழிகளாக ஆக்கிவிடாதீர்கள்.
அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் (ரலி)
«صَلُّوا فِي بُيُوتِكُمْ، وَلَا تَتَّخِذُوهَا قُبُورًا»
17030. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்கள் இல்லங்களை (தொழுகை, ஓதல் நடைபெறாத) சவக்குழிகளாக ஆக்கிவிடாதீர்கள். அதில் (சில தொழுகைகளை) தொழுங்கள்.
அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் (ரலி)
«لَا تَتَّخِذُوا بُيُوتَكُمْ قُبُورًا، صَلُّوا فِيهَا»
22255.
«لَا يَأْتِ أَحَدُكُمُ الصَّلَاةَ وَهُوَ حَاقِنٌ، وَلَا يَخُصَّ نَفْسَهُ بِشَيْءٍ دُونَ أَصْحَابِهِ، وَلَا يُدْخِلْ عَيْنَيْهِ بَيْتًا حَتَّى يَسْتَأْذِنَ»
فَقَالَ شَيْخٌ لَمَّا حَدَّثَهُ يَزِيدُ: أَنَا سَمِعْتُ أَبَا أُمَامَةَ يُحَدِّثُ بِهَذَا الْحَدِيثِ
சமீப விமர்சனங்கள்