Category: முஸ்னத் அஹ்மத்

Musnad-Ahmad

Musnad-Ahmad-16667

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

16667. ராஷித் பின் ஸஃத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(பாரசீக நாட்டின்) இஸ்தக்ர் பகுதி வெற்றிக்கொள்ளப்பட்டபோது ஒருவர், “எச்சரிக்கை! (இதோ) தஜ்ஜால் (வெளி) வந்துவிட்டான்” என்று மக்களுக்கு அறிவிப்பு செய்தார். (எனவே மக்கள் அதைப் பற்றி பேசிக்கொண்டனர்). அந்த மக்களை ஸஅப் பின் ஜஸ்ஸாமா (ரலி) அவர்கள் கண்டு, நீங்கள் இவ்வாறு தஜ்ஜாலைப் பற்றி பேசாமல் இருந்திருந்தால் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியேற்ற) ஒரு செய்தியை உங்களுக்கு அறிவித்திருப்பேன்.

(அது என்னவெனில்) “மக்கள் தஜ்ஜாலைப் பற்றி பேசுவதை மறந்துவிடும் போதும், இமாம்கள் உரைமேடைகளில் அவனைப் பற்றி கூறாமல் இருக்கும் போதும் (தான்) தஜ்ஜால் வெளிப்படுவான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன் என்று அறிவித்தார்கள்.


لَمَّا فُتِحَتْ إِصْطَخْرُ نَادَى مُنَادٍ: أَلَا إِنَّ الدَّجَّالَ قَدْ خَرَجَ، قَالَ: فَلَقِيَهُمُ الصَّعْبُ بْنُ جَثَّامَةَ قَالَ: فَقَالَ: لَوْلَا مَا تَقُولُونَ لَأَخْبَرْتُكُمْ أَنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا يَخْرُجُ الدَّجَّالُ حَتَّى يَذْهَلَ النَّاسُ عَنْ ذِكْرِهِ، وَحَتَّى تَتْرُكَ الْأَئِمَّةُ ذِكْرَهُ عَلَى الْمَنَابِرِ»


Musnad-Ahmad-3832

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3832.


أَوَّلُ مَنْ أَظْهَرَ إِسْلَامَهُ سَبْعَةٌ: رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَبُو بَكْرٍ، وَعَمَّارٌ، وَأُمُّهُ سُمَيَّةُ، وَصُهَيْبٌ، وَبِلَالٌ، وَالْمِقْدَادُ، فَأَمَّا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَمَنَعَهُ اللَّهُ بِعَمِّهِ أَبِي طَالِبٍ، وَأَمَّا أَبُو بَكْرٍ، فَمَنَعَهُ اللَّهُ بِقَوْمِهِ، وَأَمَّا سَائِرُهُمْ فَأَخَذَهُمُ الْمُشْرِكُونَ، فَأَلْبَسُوهُمْ أَدْرَاعَ الْحَدِيدِ، وَصَهَرُوهُمْ فِي الشَّمْسِ، فَمَا مِنْهُمْ إِنْسَانٌ إِلَّا وَقَدْ وَاتَاهُمْ عَلَى مَا أَرَادُوا، إِلَّا بِلَالٌ، فَإِنَّهُ هَانَتْ عَلَيْهِ نَفْسُهُ فِي اللَّهِ، وَهَانَ عَلَى قَوْمِهِ، فَأَعْطَوْهُ الْوِلْدَانَ، وَأَخَذُوا يَطُوفُونَ بِهِ شِعَابَ مَكَّةَ، وَهُوَ يَقُولُ أَحَدٌ، أَحَدٌ


Musnad-Ahmad-8276

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8276.


سُورَةٌ مِنَ الْقُرْآنِ ثَلَاثُونَ آيَةً، تَشْفَعُ لِصَاحِبِهَا حَتَّى يُغْفَرَ لَهُ: تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ


Musnad-Ahmad-25270

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

25270. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(தொழுகை) வரிசைகளில் (இடைவெளியின்றி) சேர்ந்திருப்போருக்கு அல்லாஹ் அருள்புரிகிறான். வானவர்கள், அவர்களுக்காக அல்லாஹ்விடம் அருளைக் கேட்கின்றனர்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


«إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى الَّذِينَ يَصِلُونَ الصُّفُوفَ»


Musnad-Ahmad-24587

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

24587.


«إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ وَمَلَائِكَتَهُ عَلَيْهِمُ السَّلَام يُصَلُّونَ عَلَى الَّذِينَ يَصِلُونَ الصُّفُوفَ، وَمَنْ سَدَّ فُرْجَةً، رَفَعَهُ اللَّهُ بِهَا دَرَجَةً»


Musnad-Ahmad-24381

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

24381.


«إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ وَمَلَائِكَتَهُ عَلَيْهِمُ السَّلَامُ، يُصَلُّونَ عَلَى الَّذِينَ يَصِلُونَ الصُّفُوفَ»


Musnad-Ahmad-6935

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6935. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நம்மில் பெரியவருக்கு செய்ய வேண்டிய மரியாதையை அறியாதோரும்; சிறியவருக்கு இரக்கம் காட்டாதோரும் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَعْرِفْ حَقَّ كَبِيرِنَا، وَيَرْحَمْ صَغِيرَنَا»


Musnad-Ahmad-6733

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6733. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நம்மில் சிறியவருக்கு இரக்கம் காட்டாதோரும், பெரியவருக்கு செய்ய வேண்டிய மரியாதையை அறியாதோரும் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا، وَيَعْرِفْ حَقَّ كَبِيرِنَا»


Musnad-Ahmad-2329

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2329. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

பெரியவருக்கு மரியாதை செய்யாதோரும், சிறியவருக்கு இரக்கம் காட்டாதோரும், நன்மையை ஏவி, தீமையைத் தடுக்காதோரும் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


«لَيْسَ مِنَّا مَنْ لَمْ يُوَقِّرِ الْكَبِيرَ، وَيَرْحَمِ الصَّغِيرَ وَيَأْمُرْ بِالْمَعْرُوفِ، وَيَنْهَى عَنِ الْمُنْكَرِ»


Next Page » « Previous Page