2106. ஸவ்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
ஹுபைரா என்பவரின் மகள் (ஹிந்த்) அல்லாஹ்வின் தூதரிடத்தில் தங்க மோதிரம் கையில் வைத்திருந்தவராக வந்தார். அப்பெண்னின் கையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தட்டி விட்டார்கள். நபிகள் நாயகத்தின் இச்செயலை அப்பெண் பாத்திமா (ரலி) அவர்களிடத்தில் முறையிட்டாள். உடனே பாத்திமா (ரலி) அவர்கள், தான் அணிந்திருந்த தங்க மாலையைக் கழட்டி இதனை ஹஸனின் தந்தை (அலி ரலி) அவர்கள் தான் எனக்கு அன்பளிப்பாகத் தந்தார்கள் எனக் கூறினார்.
பாத்திமா (ரலி) அவர்களின் கரத்தில் தங்கமாலை இருக்கும் சமயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். பாத்திமாவே! முஹம்மதின் மகள் பாத்திமாவின் கரத்தில் நரக நெருப்பினால் ஆன மாலை இருக்கின்றது என மக்கள் பேசிக் கொள்வது உனக்கு மகிழ்ச்சியளிக்கின்றதா? எனக் கேட்டு விட்டு அங்கு உட்காரமல் திரும்பி விட்டார்கள்.
உடனே பாத்திமா (ரலி) அவர்கள் அம்மாலையை கடையில் விற்றுவிட்டு வருமாறு ஆளப்பினார்கள். மாலையை விற்றவுடன் அப்பணத்தினால் ஒரு அடிமையை வாங்கிக் கொண்டார்கள். பாத்திமாவின் இச்செயல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கிடைத்த போது நரக நெருப்பை விட்டு பாத்திமாவைக் காப்பாற்றிய அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும் எனக் கூறினார்கள்.
جَاءَتِ ابْنَةُ هُبَيْرَةَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفِي يَدِهَا فَتَخُ خَوَاتِيمَ ضِخَامٌ فَجَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَضْرِبُ يَدَهَا فَدَخَلَتْ عَلَى فَاطِمَةَ فَشَكَتِ الَّذِي صَنَعَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَانْتَزَعَتْ فَاطِمَةُ سِلْسِلَةً مِنْ ذَهَبٍ فِي عُنُقِهَا فَقَالَتْ: هَذِهِ أَهْدَاهَا إِلَيَّ أَبُو الْحَسَنِ فَدَخَلَ عَلَيْهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا مَعَهُ وَهِيَ فِي يَدِهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيَسُرُّكِ أَنْ يَقُولَ النَّاسُ ابْنَةُ رَسُولِ اللَّهِ فِي يَدِهَا سِلْسِلَةٌ مِنْ نَارٍ» ثُمَّ انْطَلَقَ وَلَمْ يَقْعُدْ فَأَرْسَلَتْ فَاطِمَةُ بِالسِّلْسِلَةِ فَبَاعَتْهَا فَاشْتَرَتْ غُلَامًا فَأَعْتَقَتْهُ فَحُدِّثَ بِذَلِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «الْحَمْدُ لِلَّهِ الَّذِي نَجَّا فَاطِمَةَ مِنَ النَّارِ»
சமீப விமர்சனங்கள்