Category: ஷுஅபுல் ஈமான்

Shuabul-Iman

Shuabul-Iman-6284

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6284. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வட்டியில் மிக மோசமான வட்டி, அநியாயமாக ஒரு முஸ்லிமின் மானத்தை வாங்குவதாகும். உறவு என்பது (இறையருளின்) ஒரு கிளையாகும். அதை யார் முறித்துக் கொள்கின்றாரோ அவருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடை செய்துவிடுவான்.

அறிவிப்பவர்: ஸயீத் பின் ஸைத் (ரலி)


مِنْ أَرْبَى الرِّبَا الِاسْتِطَالَةُ فِي عِرْضِ الْمُسْلِمِ بِغَيْرِ حَقٍّ، وَإِنَّ هَذِهِ الرَّحِمَ شَجْنَةٌ مِنَ الرَّحْمَنِ، فَمَنْ قَطَعَهَا حَرَّمَ اللهُ عَلَيْهِ الْجَنَّةَ


Shuabul-Iman-7558

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7558. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் படைப்புகளைப் படைத்து முடித்த போது, உறவானது எழுந்து அன்பாளன் அல்லாஹ்வின் அரியாசனத்தின் கால்களில் ஒன்றைப் பற்றி(க் கொண்டு மன்றாடி)யது. அப்போது அல்லாஹ், “என்ன?” என்று கேட்டான். அதற்கு உறவு, “உறவுகளைத் துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்பு கோரி நிற்கின்றேன்” என்று கூறியது. “உன்னை (உறவை) பேணி நல்ல முறையில் நடந்து கொள்பவருடன் நானும் நல்ல முறையில் நடந்து கொள்வேன் என்பதும் உன்னைத் துண்டித்து விடுகின்றவரை நானும் துண்டித்து விடுவேன் என்பதும் உனக்குத் திருப்தியளிக்கவில்லையா?” என்று கேட்டான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,

“நீங்கள் புறக்கணித்து பூமியில் குழப்பம் ஏற்படுத்தவும், உங்கள் உறவுகளை முறிக்கவும் முயல்வீர்களா? அவர்களையே அல்லாஹ் சபித்தான். அவர்களைச் செவிடாக்கினான். அவர்களின் பார்வைகளைக் குருடாக்கினான். அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா? ”

என்ற (47:22-24) வசனத்தை நீங்கள் விரும்பினால் ஓதிக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்…

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


إِنَّ اللهَ تَعَالَى خَلَقَ الْخَلْقَ، حَتَّى إِذَا فَرَغَ مِنْهُمْ قَامَتِ الرَّحِمُ فَأَخَذَتْ بِحَقْوِ الرَّحْمَنِ، فَقَالَ: مَهْ، فَقَالَتْ: هَذَا مَكَانُ الْعَائِذِ مِنَ الْقَطِيعَةِ؟ قَالَ: نَعَمْ، أَمَا تَرْضَيْنَ أَنْ أَصِلَ مَنْ وَصَلَكِ، وَأَقْطَعَ مَنْ قَطَعَكِ؟ قَالَتْ: بَلَى، قَالَ: فَذَاكَ لَكِ “، ثُمَّ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” اقْرَأُوا إِنْ شِئْتُمْ: {فَهَلْ عَسَيْتُمْ إِنْ تَوَلَّيْتُمْ أَنْ تُفْسِدُوا فِي الْأَرْضِ، وَتُقَطِّعُوا أَرْحَامَكُمْ أُولَئِكَ الَّذِينَ لَعَنَهُمُ اللهُ، فَأَصَمَّهُمْ وَأَعْمَى أَبْصَارَهُمْ أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ أَمْ عَلَى قُلُوبٍ أَقْفَالُهَا} [محمد: 23]


Shuabul-Iman-7557

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7557. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாளில் உறவுக்கு நாவு இருக்கும். அது அல்லாஹ்வின் அரியாசனத்தின் கீழிருந்துக் கொண்டு “ என் இறைவா நான் துண்டிக்கப்பட்டேன், என் இறைவா நான் அநீதமிழைக்கப்பட்டேன், என் இறைவா நான் கெடுதல் செய்யப்பட்டேன் ” என முறையிடும்.

அப்போது அல்லாஹ், “உன்னை (உறவை) பேணி நல்ல முறையில் நடந்து கொள்பவருடன் நானும் நல்ல முறையில் நடந்து கொள்வேன் என்பதும், உன்னைத் துண்டித்து விடுகின்றவரை நானும் துண்டித்து விடுவேன் என்பதும் உனக்குத் திருப்தியளிக்கவில்லையா?” என்று அதற்கு பதிலளிப்பான்…

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


إِنَّ لِلرَّحِمِ لِسَانًا يَوْمَ الْقِيَامَةِ تَحْتَ الْعَرْشِ فَتَقُولُ: يَا رَبِّ قُطِعْتُ يَا رَبِّ ظُلِمْتُ، يَا رَبِّ أُسِيءَ إِلَيَّ، فَيُجِيبُهَا رَبُّهَا: أَلَا تَرْضَيْنَ أَنْ أَصِلَ مَنْ وَصَلَكِ، وَأَقْطَعُ مَنْ قَطَعَكِ؟


Shuabul-Iman-7580

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7580. உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழைய மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி)


لَا يَدْخُلُ الْجَنَّةَ قَاطِعٌ – يَعْنِي قَاطِعَ الرَّحِمِ


Shuabul-Iman-7579

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7579. உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழைய மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி)


لَا يَدْخُلُ الْجَنَّةَ قَاطِعٌ


Shuabul-Iman-1543

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1543. சீனா சென்றேனும் கல்வியை தேடு. ஏனெனில் கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

 

பைஹகீ (நூலாசிரியர்) கூறுகிறார்:

இந்த செய்தி பிரபலமானதாகும். ஆனால் இதன் அறிவிப்பாளர்தொடர் பலவீனமானதாகும். இது பல வழிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்தும் பலவீனமானதாகும்.


اطْلُبُوا الْعِلْمَ وَلَوْ بِالصِّينِ، فَإِنَّ طَلَبَ الْعِلْمِ فَرِيضَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ


Shuabul-Iman-8540

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8540. கத்தாதா (ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

நான் அனஸ் (ரலி) அவர்களிடம் ‘முஸாஃபஹா (கரம் பற்றி வாழ்த்துத் தெரிவிக்கும் வழக்கம்) நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்ததா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆம் (இருந்தது)’ என்றார்கள்.


قُلْتُ لِأَنَسٍ: كَانَتِ الْمُصَافَحَةُ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟، قَالَ: ” نَعَمْ


Shuabul-Iman-8545

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

8545. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

இரு முஸ்லிம்கள் சந்திக்கும் போது அவர்களில் ஒருவர் தனது தோழரின் கையைப் பிடிப்பாரானால் அவ்விருவரின் பிரார்த்தனையைக் கவனிப்பது அல்லாஹ்வின் மீது கடமையாகி விடுகின்றது. அவ்விருவருக்கும் பாவமன்னிப்பு வழங்கப்படாமல் அவர்களின் கரங்கள் பிரிவதில்லை.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)


” مَا مِنْ مُسْلِمَيْنِ الْتَقَيَا فَأَخَذَ أَحَدُهُمَا بِيَدِ صَاحِبِهِ، إِلَّا كَانَ حَقًّا عَلَى اللهِ عَزَّ وَجَلَّ أَنْ يَحْضُرَ دُعَاءَهُمَا، وَلَا يُفَرِّقَ بَيْنَهُمَا حَتَّى يَغْفِرَ لَهُمَا


Shuabul-Iman-8559

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

8559. அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள் :

நான் நபித்தோழர் ஒருவரிடம்,  ஒரு மனிதர் தன் சகோதரனை சந்திக்கும்போது அவரை முத்தமிடலாமா என்று கேட்டேன். அதற்கு அவர் கூடாது என்றார்.  அவருக்காக (தலை) குனியலாமா? என்று கேட்டேன். அதற்கும் அவர் கூடாது என்றார். முஸாஃபஹா செய்யலாமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் அனுமதி அளித்தார்.

 

பைஹகீ (நூலாசிரியர்) கூறுகிறார் :

இது ஹன்ளலா அஸ்ஸதூஸி தனித்து அறிவிக்கும் செய்தி. இவர் கடைசி காலத்தில் மூளை குழம்பிவிட்டார். அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

 

 


سَأَلْتُ أَصْحَابَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الرَّجُلِ يَلْقَى الرَّجُلَ أَيُقَبِّلُهُ؟، قَالَ: ” لَا “، قَالَ: أَفَيَنْحَنِي لَهُ؟، قَالَ: ” لَا “. وَسُئِلَ عَنِ الْمُصَافَحَةِ فَرَخَّصَ فِيهَا.


Shuabul-Iman-8558

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

8558. அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள் :

நபி (ஸல்)அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே எங்களில் ஒரு மனிதர் தன் சகோதரனை சந்திக்கும்போது அவருக்காக (தலை) குனியலாமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூடாது என்றார்கள். அவரைக் கட்டித் தழுவலாமா ? என்று அவர் கேட்டார். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் கூடாது என்றார்கள்.


قِيلَ: يَا رَسُولَ اللهِ يَنْحَنِي أَحَدُنَا لِأَخِيهِ إِذَا لَقِيَهُ؟، قَالَ: ” لَا “، قَالَ: فَيَلْتَزِمُهُ؟ قَالَ: ” لَا


Next Page » « Previous Page