Category: முஸ்னத் தயாலிஸீ

Musnad al Tayalisi
Musnad Abi Dawud Al Tayalisi

Tayalisi-1530

ஹதீஸின் தரம்: Pending

1530. குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிகம் பரகத் நிறைந்ததாகும்” என்று ஆயிஷா (ரலி) கூறினார்கள்…


«أَعْظَمُ النِّكَاحِ بَرَكَةً أَيْسَرُهَا مَئُونَةً»

 


Tayalisi-1293

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1293. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தமக்கு உடைமையில்லாத ஒன்றில் நேர்த்திக்கடன் செய்வது(ம் அந்த நேர்த்திக் கடனை நிறைவேற்றுவதும்) எந்த மனிதருக்கும் தகாது. ஓர் இறைநம்பிக்கையாளரை சபிப்பது அவரைக் கொலை செய்வதற்குச் சமம். இவ்வுலகில் எந்தப் பொருள் மூலம் ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறாரோ, அதன் மூலமே மறுமை நாளில் அவர் வேதனை செய்யப்படுவார். யார் வேண்டுமென்றே பொய்யான விஷயத்தில் சத்தியம் செய்யும்போது (நான் சொல்வது பொய்யென்றால்) இஸ்லாம் அல்லாத வேறு மார்க்கத்தில் உள்ளவனாவேன் என்று கூறியவர், தான் கூறியது போல் (வேறு மார்க்கத்தில்) ஆவார்.

அறிவிப்பவர் : ஸாபித் பின் அள்ளஹ்ஹாக் (ரலி)


«لَيْسَ عَلَى الْمُؤْمِنِ نَذْرٌ فِيمَا لَا يَمْلِكُ، وَلَعْنُ الْمُؤْمِنِ كَقَتْلِهِ، وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِشَيْءٍ عُذِّبَ بِهِ يَوْمَ الْقِيَامَةِ، وَمَنْ حَلَفَ بِمِلَّةٍ غَيْرِ الْإِسْلَامِ كَاذِبًا فَهُوَ كَمَا قَالَ»


Tayalisi-2383

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2383. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“இஸ்லாத்தில் ஒரு மனிதர் தம் பெற்றோரை ஏசுவது பெரும் பாவங்களில் உள்ளதாகும்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது “அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதர் தம் பெற்றோரையே எப்படி ஏசுவார்?” என்று கேட்கப்பட்டது.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஒருவருக்கொருவர் மற்றவரை ஏசிக்கொள்வார்கள். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையை ஏசுவார். ஒருவர் இன்னொருவரின் தாயை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தாயை ஏசுவார். (ஆக, தம் பெற்றோர் ஏசப்படுவதற்கு இவரே காரணமாகிவிடுகிறார்)” என்று கூறினார்கள்.


«إِنَّ مِنْ أَكْبَرِ الذُّنُوبِ أَنْ يَسُبَّ الرَّجُلُ وَالِدَيْهِ فِي الْإِسْلَامِ» قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، وَكَيْفَ يَسُبُّ وَالِدَيْهِ؟ قَالَ: «يُسَابُّ الرَّجُلَ فَيَسُبُّ أَبَاهُ، أَوْ يَسُبُّ أُمَّهُ فَيَسُبُّ أُمَّهُ»


Tayalisi-2666

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2666. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாளில் உறவுக்கு நாவு இருக்கும். அது அல்லாஹ்வின் அரியாசனத்தின் கீழிருந்துக் கொண்டு “ என் இறைவா நான் துண்டிக்கப்பட்டேன், என் இறைவா நான் அநீதமிழைக்கப்பட்டேன், என் இறைவா நான் கெடுதல் செய்யப்பட்டேன் ” என முறையிடும்.

அப்போது அல்லாஹ், “உன்னை (உறவை) பேணி நல்ல முறையில் நடந்து கொள்பவருடன் நானும் நல்ல முறையில் நடந்து கொள்வேன் என்பதும், உன்னைத் துண்டித்து விடுகின்றவரை நானும் துண்டித்து விடுவேன் என்பதும் உனக்குத் திருப்தியளிக்கவில்லையா?” என்று அதற்கு பதிலளிப்பான்…

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


إِنَّ لِلرَّحِمِ لِسَانًا يَوْمَ الْقِيَامَةِ تَحْتَ الْعَرْشِ يَقُولُ: يَا رَبِّ، قُطِعْتُ، يَا رَبِّ، ظُلِمْتُ، يَا رَبِّ، أُسِيءَ إِلَيَّ فَيُجِيبُهَا رَبُّهَا: «أَلَا تَرْضَيْنَ أَنْ أَصِلَ مَنْ وَصَلَكِ، وَأَقْطَعَ مَنْ قَطَعَكِ؟»


Tayalisi-838

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

838. பிரார்த்தனை ஒரு வணக்கமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு, “என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள்’ என்று உங்கள் இறைவன் கூறுகிறான்” என்ற (40:60) வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக் காட்டினார்கள்.

அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் (ரலி)


إِنَّ الدُّعَاءَ هُوَ الْعِبَادَةُ قَالَ رَبُّكُمُ: {ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ} [ص:148][غافر: 60]


Tayalisi-1435

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1435. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்திலிருந்து கொண்டு கல்லெறிந்ததை நான் பார்த்துள்ளேன். அங்கே அடிதடி இல்லை; விரட்டுதல் இல்லை; வழி விடு, வழி விடு என்பது போன்ற கூச்சல் இல்லை.

அறிவிப்பவர்: குதாமா பின் அப்துல்லாஹ் (ரலி)


«رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرْمِي الْجَمْرَةَ يَوْمَ النَّحْرِ عَلَى نَاقَةٍ صَهْبَاءَ لَا ضَرْبَ وَلَا طَرْدَ وَلَا إِلَيْكَ إِلَيْكَ»


Tayalisi-2396

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2396. யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் ஆதம் (அலை) அவர்களின் சந்ததிகளாவர். அவர்கள் விடுவிக்கப்பட்டால் மக்களின் வாழ்க்கை யைப் பாழாக்குவார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் ஆயிரம் அல்லது அதற்கும் அதிகமான சந்ததிகளை உருவாக்காமல் மரணிப்பதில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி),


ثُمَّ أَنْشَأَ يُحَدِّثُنَا أَنَّ «يَأْجُوجَ وَمَأْجُوجَ مِنْ وَلَدِ آدَمَ، وَأَنَّهُمْ لَوْ أُرْسِلُوا عَلَى النَّاسِ لَأَفْسَدُوا عَلَيْهِمْ مَعَايِشَهُمْ، وَلَنْ يَمُوتَ مِنْهُمْ أَحَدٌ إِلَّا تَرَكَ مِنْ ذُرِّيَّتِهِ أَلْفًا فَصَاعِدًا، وَأَنَّ مِنْ وَرَائِهِمْ ثَلَاثَ أُمَمٍ، تَاوِيلَ، وَتَارِيسَ وَمَنْسَكَ»


Tayalisi-2266

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2266. ஒரு பயணத்தில் மூவர் இருந்தால் அவர்களில் ஒருவர் தொழுகை நடத்தட்டும், அவர்களில் குர்ஆனை நன்கு ஓத தெரிந்தவரே இமாமத் செய்வதற்கு மிக தகுதியானவர் என்று நபி ஸல் அவர்கள்  கூறியதாக அபூ ஸயீத்  (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.


«إِذَا كَانُوا ثَلَاثَةً فِي سَفَرٍ، فَلْيَؤُمَّهُمْ أَحَدُهُمْ، وَأَحَقُّهُمْ بِالْإِمَامَةِ أَقْرَؤُهُمْ»


« Previous Page