Category: முஸ்னத் தயாலிஸீ

Musnad al Tayalisi
Musnad Abi Dawud Al Tayalisi

Tayalisi-239

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

239. என்னை நம்பிக்கைகொள்ளாதவர் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவராக ஆகமாட்டார். அன்ஸாரீ நபித்தோழர்களை நேசிக்காதவர் என்னை நம்பிக்கை கொண்டவராக ஆகமாட்டார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றேன்.

அறிவிப்பவர்: ஸயீத் பின் ஸைத் (ரலி)


«لَمْ يُؤْمِنْ بِاللَّهِ مَنْ لَمْ يُؤْمِنْ بِي، وَلَمْ يُؤْمِنْ بِي مَنْ لَمْ يُحِبَّ الْأَنْصَارَ»


Tayalisi-1899

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1899. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகையின் திறவுகோல் உளூ (அங்கத்தூய்மை) ஆகும். சொர்க்கத்தின் திறவுகோல் தொழுகையாகும்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


«مِفْتَاحُ الصَّلَاةِ الْوُضُوءُ، وَمِفْتَاحُ الْجَنَّةِ الصَّلَاةُ»


Tayalisi-1297

ஹதீஸின் தரம்: Pending

1297. (தொழுகை) வரிசைக்குப் பின்னால் தனியாகத் தொழுது கொண்டிருந்த ஒருவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டு அத்தொழுகையை (மறுபடியும்) மீட்டுமாறு அவருக்கு உத்தரவிட்டார்கள்.

அறிவிப்பவர்: வாபிஸா பின் மஅபத் (ரலி)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَبْصَرَ رَجُلًا يُصَلِّي فِي الصَّفِّ وَحْدَهُ فَأَمَرَهُ أَنْ يُعِيدَ الصَّلَاةَ»


Tayalisi-2715

ஹதீஸின் தரம்: Pending

2715. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தொழும் போது தனக்கு முன்னால் வைக்கும் தடுப்பு இல்லாவிட்டால் ஒரு கோட்டை போட்டுக்கொள்ளட்டும். இதனால் அவருக்குமுன் எது நடந்துசென்றாலும் அது அவருக்கு எதுவும் தீங்கிழைக்காது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«إِذَا صَلَّى أَحَدُكُمْ فَلَمْ يَكُنْ بَيْنَ يَدَيْهِ مَا يَسْتُرُهُ فَلْيَخُطَّ خَطًّا، وَلَا يَضُرُّهُ مَا مَرَّ بَيْنَ يَدَيْهِ»


Tayalisi-844

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

844. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அடக்கத்தலங்களைச் சந்திக்க அனுமதியளித்தார்கள்.

அறிவிப்பவர்: புரைதா (ரலி)


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «رَخَّصَ فِي زِيَارَةِ الْقُبُورِ»


Tayalisi-1093

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1093. மகத்துவமிக்க உமது இறைவனின் பெயரைத் துதிப்பீராக! (அல்குர்ஆன் 56 : 96 ஃபஸப்பிஹ் பிஸ்மி ரப்பிகல் அளீம்) என்ற வசனம் இறங்கிய போது இதை உங்கள் ருகூஃவில் ஆக்கிக் கொள்ளுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

உயர்ந்த உனது இறைவனின் பெயரைத் துதிப்பீராக! (அல்குர்ஆன் 87 : 1 ஸப்பிஹிஸ்ம ரப்பிகல்அஃலா) என்ற வசனம் இறங்கியதும் இதை உங்களுடைய சுஜூதில் ஆக்கிக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)


لَمَّا أُنْزِلَتْ {فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ} [الواقعة: 74] قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اجْعَلُوهَا فِي الرُّكُوعِ» فَلَمَّا نَزَلَتْ سَبَّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى [الأعلى: 1] قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اجْعَلُوهَا فِي سُجُودِكُمْ»


Tayalisi-2434

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2434. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் தும்மலை விரும்புகிறான்; கொட்டாவியை வெறுக்கிறான். எனவே, ஒருவர் தும்மியவுடன் ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொன்னால், அதைக் கேட்கும் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் அவருக்கு (‘யர்ஹமுக்கல்லாஹ் – அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்’ என்று) மறுமொழி கூறுவது அவசியமாகும்.

உங்களில் எவரேனும் கொட்டாவிவிட்டால் அதனால் ஷைத்தான் சிரிக்கிறான். எனவே, முடிந்தவரை அதைக் கட்டுப்படுத்தட்டும்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)


إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يُحِبُّ الْعُطَاسَ وَيَكْرَهُ التَّثَاؤُبَ، فَإِذَا عَطَسَ أَحَدُكُمْ فَلْيَقُلْ: الْحَمْدُ لِلَّهِ حَقًّا عَلَى مَنْ سَمِعَهُ أَنْ يَقُولَ: يَرْحَمُكَ اللَّهُ، وَإِذَا تَثَاءَبَ ضَحِكَ الشَّيْطَانُ، وَلْيُخْفِهِ مَا اسْتَطَاعَ


Tayalisi-1218

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1218. யார் தன்னை சுயபரிசோதனை செய்துக் கொண்டு மரணத்திற்குப் பிறகு உள்ள வாழ்விற்காக நற்செயல் செய்கிறாரோ அவர் தான் அறிவாளி. யார் தன் மன இச்சைப்படி வாழ்ந்து, (அல்லாஹ் தனக்கு சொர்க்கத்தை தந்துவிடுவான் என்று) அல்லாஹ்வின் மீது மேலெண்ணம் கொள்கிறாரோ அவர் அறிவற்றவர்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி)


«الْكَيِّسُ مَنْ دَانَ نَفْسَهُ وَعَمِلَ لِمَا بَعْدَ الْمَوْتِ وَالْعَاجِزُ مَنْ أَتْبَعَ نَفْسَهُ هَوَاهَا وَتَمَنَّى عَلَى اللَّهِ»


Tayalisi-190

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

190. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

உங்களுக்கு முன்பிருந்த சமுதாயத்திடம் ஏற்பட்ட பொறாமை, குரோதம் எனும் நோய் உங்களுக்கும் ஏற்பட்டு விட்டது. குரோதம் மழித்துவிடக் கூடியது. அவை முடியை மழிக்கும் என்று நான் கூறவில்லை. மாறாக மார்க்கத்தை மழித்து விடும்.

“என் உயிர் யார் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நீங்கள் இறைநம்பிக்கை கொள்ளாதவரையில் சொர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக முடியாது. உங்கள் உள்ளத்தில் நேசத்தை ஏற்படுத்தும் ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? உங்களிடையே சலாத்தைப் பரப்புங்கள். (அதனால் நீங்கள் நேசம் கொள்ளலாம்)

அறிவிப்பவர் : ஸுபைர் (ரலி) அவர்களின் அடிமை


دَبَّ إِلَيْكُمْ دَاءُ الْأُمَمِ قَبْلَكُمُ الْحَسَدُ وَالْبَغْضَاءُ، وَالْبَغْضَاءُ هِيَ الْحَالِقَةُ لَا أَقُولُ تَحْلِقُ الشَّعْرَ وَلَكِنَّهَا تَحْلِقُ الدِّينَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا تَدْخُلُوا الْجَنَّةَ حَتَّى تُؤْمِنُوا وَلَا تُؤْمِنُوا حَتَّى تَحَابُّوا أَلَا أُخْبِرُكُمْ بِمَا يُثَبِّتُ ذَاكَ لَكُمْ: أَفْشُوا السَّلَامَ بَيْنَكُمْ


Tayalisi-666

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

666. உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களின் அடிமை கூறியதாவது:

உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள், “வாதில் குரா” எனுமிடத்தில் இருந்த (தன்னுடைய) சொத்தை தேடிப் பயணம் சென்றார்கள். (நானும் அவர்களுடன் சென்றேன்). அப்போது அவர்கள், திங்கள், வியாழக்கிழமை நோன்பு வைத்தார்கள். நான், “நீங்கள் இவ்வளவு முதியவராகவும், மெலிந்தும் இருந்துக் கொண்டு (இந்த நாட்களில்) ஏன் நோன்பு வைக்கிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இவ்வாறே) திங்கள், வியாழக் கிழமைகளில் நோன்பு வைப்பதை நான் பார்த்து, “அல்லாஹ்வின் தூதரே! திங்கள், வியாழக் கிழமைகளில் நீங்கள் ஏன் நோன்பு வைக்கிறீர்கள் என்று கேட்டேன்.  அதற்கவர்கள், “(ஒவ்வொரு) திங்கள், வியாழக் கிழமைகளில் (அல்லாஹ்விடம்) அடியார்களின் செயல்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன என்று கூறினார்கள்” என பதிலளித்தார்கள்.


أَنَّ أُسَامَةَ بْنَ زَيْدٍ كَانَ يَرْكَبُ إِلَى مَالٍ بِوَادِي الْقُرَى فَكَانَ يَصُومُ الِاثْنَيْنِ وَالْخَمِيسَ فَقُلْتُ لَهُ: أَتَصُومُ وَقَدْ كَبِرْتَ وَرَقَقْتَ؟ فَقَالَ: إِنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ يَوْمَ الِإثْنَيْنِ وَالْخَمِيسِ فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَتَصُومُ يَوْمَ الِاثْنَيْنِ وَالْخَمِيسِ؟ فَقَالَ: «إِنَّ الْأَعْمَالَ تُعْرَضُ يَوْمَ الِاثْنَيْنِ وَالْخَمِيسِ»


Next Page » « Previous Page