Category: முஸ்னத் தயாலிஸீ

Musnad al Tayalisi
Musnad Abi Dawud Al Tayalisi

Tayalisi-1026

ஹதீஸின் தரம்: Pending

1026. ஜஃபர் பின் அபூதாலிப் (ரலி அவர்களின் மரணசெய்தி வந்தபோது, ஜஃபரின் வீட்டினருக்கு கவலை தரும் செய்தி வந்து விட்டதால் அவரது குடும்பத்தாருக்காக உணவு செய்து கொடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஜஃபர் (ரலி)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا أَتَاهُ هَلَاكُ جَعْفَرٍ قَالَ: «اجْعَلُوا لِآلِ جَعْفَرٍ طَعَامًا؛ فَقَدْ جَاءَهُمْ مَا يَشْغَلُهُمْ»


Tayalisi-2864

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2864. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் பின்னால் ஒரு ஜனாஸா தொழுகையில் கலந்து கொண்டேன். அப்போது நான் இளைஞனாக இருந்தேன். அவர்கள் அல்ஹம்து அத்தியாயத்தை (எங்களுக்குக் கேட்கும் அளவுக்கு சப்தமாக) ஓதினார்கள்.

தொழுது முடித்ததும் அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டு இது பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள் ‘இது உண்மையும், நபிவழியும் ஆகும்’ என்றோ அல்லது இது நபிவழியும், உண்மையும் ஆகும்’ என்றோ விடையளித்தார்கள்.

அறிவிப்பவர் : தல்ஹா பின் அப்துல்லாஹ் (ரஹ்)


صَلَّيْتُ خَلْفَ ابْنِ عَبَّاسٍ عَلَى جِنَازَةٍ وَأَنَا يَوْمَئِذٍ، شَابٌّ، فَسَمِعْتُهُ يَقْرَأُ، عَلَيْهَا فَاتِحَةَ الْكِتَابِ، فَلَمَّا صَلَّيْتُ جِئْتُ فَأَخَذْتُ بِيَدِهِ فَقُلْتُ: يَا أَبَا الْعَبَّاسِ، مَا هَذَا؟، قَالَ: «هَذَا حَقٌّ وَسُنَّةٌ» أَوْ قَالَ : «سُنَّةٌ وَحَقٌّ»


Tayalisi-737

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

737. ‘விழு கட்டிகளுக்கும் தொழுகை நடத்தப்பட்டு, அதன் பெற்றோர்களின் பாவமன்னிப்புக்காகவும், இறைஅருளுக்காகவும் துஆச் செய்ய வேண்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : முகீரா பின் ஷுஃபா (ரலி)


«السِّقْطُ يُصَلَّى عَلَيْهِ وَيُدْعَى لِوَالِدَيْهِ بِالْمَغْفِرَةِ وَالرَّحْمَةِ»


Tayalisi-736

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

736. வாகனத்தில் செல்பவர் ஜனாஸாவின் பின்னால் செல்ல வேண்டும்; நடந்து செல்பவர் ஜனாஸாவின் முன்னால் சற்று அருகில், வலதுபுறமோ அல்லது இடதுபுறமோ சற்று அருகில் செல்லலாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : முகீரா பின் ஷுஃபா (ரலி)


«الرَّاكِبُ خَلْفَ الْجِنَازَةِ وَالْمَاشِي حَيْثُ شَاءَ مِنْهَا أَمَامَهَا قَرِيبًا، أَوْ عَنْ يَمِينِهَا قَرِيبًا، أَوْ يَسَارِهَا قَرِيبًا»


Tayalisi-1634

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1634. நபி (ஸல்) அவர்கள் இறந்த பின் அவர்களைக் குளிப்பாட்ட முடிவு செய்தனர். அப்போது அல்லாஹ் அவர்களுக்குத் தூக்கத்தை ஏற்படுத்தினான்…

‘நபி (ஸல்) அவர்கள் அணிந்துள்ள ஆடையுடனே குளிப்பாட்டுங்கள்’ என்று வீட்டின் மூலையிலிருந்து ஒருவர் கூறினார்.

நபி (ஸல்) இறந்த அந்தச் சந்தர்ப்பம் மீண்டும் வரும் என்றிருந்தால் நபி (ஸல்) அவர்களை அவர்களின் மனைவியர் தான் அவர்களைக் குளிப்பாட்டுவோம் என்று ஆயிஷா (ரலி) கூறுவார்கள்.

அறிவிப்பவர் : யஹ்யா பின் அப்பாத் (ரஹ்)


لَمَّا كَانَتْ وَفَاةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَرَادُوا غُسْلَهُ، وَقَعَ عَلَيْهِمُ النَّوْمُ حَتَّى أَنَّ يَدَ كُلِّ وَاحِدٍ مِنْهُمْ عِنْدَ ذَقْنِهِ فَنُودُوا مِنْ نَاحِيَةِ الْبَيْتِ أَنِ اغْسِلُوهَ فَوْقَ ثِيَابِهِ، قَالَتْ عَائِشَةُ: «فَلَوِ اسْتَقْبَلْتُ مِنْ أَمْرِي مَا اسْتَدْبَرْتُ مَا غَسَّلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا نِسَاؤُهُ»


Tayalisi-1737

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1737. யார் தன்னுடைய சகோதரனின் மானத்தை அவருக்குத் தெரியாமல் காக்கிறாரோ, அவரை நரகத்திலிருந்து விடுதலை செய்வது அல்லாஹ்வின் மீது கடமையாகிவிட்டது என  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர் : அஸ்மா பின்த் யஸீத் (ரலி)


«مَنْ ذَبَّ عَنْ لَحْمِ أَخِيهِ بِالْمَغِيبَةِ، كَانَ حَقًّا عَلَى اللَّهِ أَنْ يُعْتِقَهُ مِنَ النَّارِ»


Tayalisi-65

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

65. யார் எனது கப்ரை ஸியாரத் செய்கின்றாரோ அவருக்கு நான் பரிந்துரை செய்வேன் என்றோ (அல்லது)

யார் என்னை சந்திக்கின்றாரோ அவருக்கு நான் மறுமையில் சாட்சியாக இருப்பேன் என்றோ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மேலும், (மக்கா, மதீனா ஆகிய) இரண்டு புனிதத் தலங்களில் யார் மரணிக்கிறாரோ அவரை, கியாமத் நாளில் அச்சமற்றவர்களில் (ஒருவராக) அல்லாஹ் எழுப்புவான் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : உமர் (ரலி)


«مَنْ زَارَ قَبْرِي» أَوْ قَالَ: «مَنْ زَارَنِي كُنْتُ لَهُ شَفِيعًا أَوْ شَهِيدًا وَمَنْ مَاتَ فِي أَحَدِ الْحَرَمَيْنِ بَعَثَهُ اللَّهُ فِي الْآمِنِينَ يَوْمَ الْقِيَامَةِ»


Tayalisi-583

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

583.


عَادَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَبْدَ اللَّهِ بْنَ رَوَاحَةَ فَمَا تَحَوَّزَ لَهُ عَنْ فِرَاشِهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا تَعُدُّونَ شُهَدَاءَ أُمَّتِي؟» فَقَالَ: مَنْ قُتِلَ فِي سَبِيلِ اللَّهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ شُهَدَاءَ أُمَّتِي إِذًا لَقَلِيلٌ الْقَتْلُ شَهَادَةٌ وَالطَّاعُونُ شَهَادَةٌ وَالْبَطْنُ شَهَادَةٌ وَالْمَرْأَةُ يَقْتُلُهَا وَلَدُهَا جُمْعًا شَهَادَةٌ»


Tayalisi-579

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

579.


«وَالنُّفَسَاءُ يَجُرُّهَا وَلَدُهَا يَوْمَ الْقِيَامَةِ بِسَرَرِهِ إِلَى الْجَنَّةِ»


Tayalisi-212

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

212. சஅது பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

நான் நபி (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதரே! மக்களில் அதிகமாகச் சோதிக்கப்பட்டவர்கள் யார்?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நபிமார்கள்; பிறகு அவர்களைப் போன்றவர்கள்; பிறகு அவர்களைப் போன்றவர்கள்.

ஒவ்வொரு மனிதனும் அவனுடைய மார்க்கப் பிடிப்பின் அளவிற்குச் சோதிக்கப்படுவான். அவனுடைய மார்க்கப் பிடிப்பு உறுதியாக இருந்தால் அவனுடைய சோதனைகள் அதிகரிக்கப்படும். அவனுடைய மார்க்கப் பிடிப்பு உறுதியற்றதாக இருந்தால் அவனுடைய மார்க்கப் பிடிப்பின் அளவிற்கு அவன் சோதிக்கப்படுவான்.

ஒரு அடியான் பூமியில் நடமாடிக் கொண்டிருக்கும் காலமெல்லாம் அவன் மீது எந்தப் பாவங்களும் இல்லாமல் ஆகின்ற வரை அவனை விட்டும் சோதனைகள் நீங்காமலேயே இருக்கும்” என்று கூறினார்கள்.


قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَيُّ النَّاسِ أَشَدُّ بَلَاءً قَالَ: «الْأَنْبِيَاءُ ثُمَّ الْأَمْثَلُ فَالْأَمْثَلُ حَتَّى يُبْتَلَى الرَّجُلُ عَلَى قَدْرِ دِينِهِ فَإِنْ كَانَ صُلْبَ الدِّينِ اشْتَدَّ بَلَاؤُهُ وَإِنْ كَانَ فِي دِينِهِ رِقَّةٌ ابْتُلِيَ عَلَى حَسَبِ ذَلِكَ أَوْ قَدْرِ ذَلِكَ فَمَا يَبْرَحُ الْبَلَاءُ بِالْعَبْدِ حَتَّى يَمْشِيَ عَلَى الْأَرْضِ وَمَا عَلَيْهِ مِنْ خَطِيئَةٍ»


Next Page » « Previous Page