Category: திர்மிதீ

Tirmidhi-1663

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1663. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(ஷஹீது எனும்) ஒரு உயிர்த்தியாகிக்கு அல்லாஹ்விடத்தில் ஆறு பரிசுகள் கிடைக்கும்.

1 . அவரின் ஒரு சொட்டு இரத்தம் சிந்தும் போதே அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டு, சொர்க்கத்தில் தனது இருப்பிடத்தைக் காண்பார்.

2 . கப்ருடையை வேதனையை விட்டு காப்பாற்றப்படுவார்.

3 . மிகப்பெரிய திடுக்கத்தை விட்டு பாதுகாப்பு பெறுவார்.

4 . அவரின் தலைக்கு மதிப்புமிக்க கிரீடம் அணிவிக்கப்படும். அதில் உள்ள ஒரு மாணிக்கக்கல் இந்த உலகத்தையும், இந்த உலகத்தில் உள்ள அனைத்தையும் விடவும் சிறந்ததாக இருக்கும்.

5 . அவருக்கு 72 சொர்க்கத்து கண்ணழகிகளை திருமணம் செய்து கொடுக்கப்படும்.

6 . அவரின் உறவினர்களில் எழுபது பேருக்கு அவர் செய்யும் பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்படும்.

அறிவிப்பவர்: மிக்தாம் பின் மஃதீகரிப் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்த செய்தி (ஹஸன்), ஸஹீஹ், கரீப் தரத்தில் அமைந்த செய்தியாகும்.

(குறிப்பு: ஹஸன் என்ற வாசகம் தாருத் தஃஸீல், ரிஸாலஹ் என்ற இரண்டு பிரதிகளில் மட்டும் இல்லை. மற்ற பிரதிகளில் உள்ளது.)


لِلشَّهِيدِ عِنْدَ اللَّهِ سِتُّ خِصَالٍ: يُغْفَرُ لَهُ فِي أَوَّلِ دَفْعَةٍ، وَيَرَى مَقْعَدَهُ مِنَ الجَنَّةِ، وَيُجَارُ مِنْ عَذَابِ القَبْرِ، وَيَأْمَنُ مِنَ الفَزَعِ الأَكْبَرِ، وَيُوضَعُ عَلَى رَأْسِهِ تَاجُ الوَقَارِ، اليَاقُوتَةُ مِنْهَا خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا، وَيُزَوَّجُ اثْنَتَيْنِ وَسَبْعِينَ زَوْجَةً مِنَ الحُورِ العِينِ، وَيُشَفَّعُ فِي سَبْعِينَ مِنْ أَقَارِبِهِ


Tirmidhi-284

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

284.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ بَيْنَ السَّجْدَتَيْنِ: «اللَّهُمَّ اغْفِرْ لِي، وَارْحَمْنِي، وَاجْبُرْنِي، وَاهْدِنِي، وَارْزُقْنِي»


Tirmidhi-1306

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

கடனாளிக்கு அவகாசம் அளித்து, அவருடன் மென்மையாக நடப்பது பற்றி வந்துள்ளவை.

1306. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கடனை அடைக்க முடியாமல் சிரமப்படும் ஒருவருக்கு யார் அவகாசம் அளிக்கிறாரோ அல்லது அவரது கடனைத் தள்ளுபடி செய்துவிடுகிறாரோ அவருக்கு அல்லாஹ் அவனின் அர்ஷின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத மறுமை நாளில் தன் அர்ஷின் நிழலில் இடம்தருகிறான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«مَنْ أَنْظَرَ مُعْسِرًا، أَوْ وَضَعَ لَهُ، أَظَلَّهُ اللَّهُ يَوْمَ القِيَامَةِ تَحْتَ ظِلِّ عَرْشِهِ يَوْمَ لَا ظِلَّ إِلَّا ظِلُّهُ»


Tirmidhi-3057

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3057. அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறுவதாவது:

மக்களே நீங்கள் இந்த வசனத்தை ஓதுகிறீர்கள்.

நம்பிக்கை கொண்டோரே! உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்! நீங்கள் நேர் வழி நடக்கும் போது வழி கெட்டவனால் உங்களுக்கு எந்தத் தீங்கும் தர முடியாது. நீங்கள் அனைவரும் மீள்வது அல்லாஹ்விடமே. நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் உங்களுக்கு (அப்போது) அறிவிப்பான். (அல்குர்ஆன்: 5:105)

(இதைப் படிக்கும் போது நாம் நல்லவர்களாக வாழ்ந்தாலே போதுமானது என்று நீங்கள் நினைக்கலாம்) ஆனால் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன்.

மக்கள் அநியாயக்காரனைக் காணும் போது அவனது கைகளை அவர்கள் பிடிக்கா விட்டால் (அதாவது தீமையைத் தடுக்கா விட்டால்) அவர்கள் அனைவருக்கும் தனது தண்டனையை அல்லாஹ் பொதுவாக்கி விடும் நிலை விரைவில் ஏற்பட்டுவிடும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: கைஸ் பின் அபூஹாஸிம் (ரஹ்)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும்.

இந்தச் செய்தியை இஸ்மாயீல் பின் காலித் அவர்களிடமிருந்து அறிவிக்கும் பலரும் இந்தச் செய்தியைப் போன்றே நபியின் சொல்லாக

يَا أَيُّهَا النَّاسُ إِنَّكُمْ تَقْرَءُونَ هَذِهِ الآيَةَ {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا عَلَيْكُمْ أَنْفُسَكُمْ لَا يَضُرُّكُمْ مَنْ ضَلَّ إِذَا اهْتَدَيْتُمْ} [المائدة: 105]، وَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ النَّاسَ إِذَا رَأَوْا ظَالِمًا، فَلَمْ يَأْخُذُوا عَلَى يَدَيْهِ أَوْشَكَ أَنْ يَعُمَّهُمُ اللَّهُ بِعِقَابٍ مِنْهُ»


Tirmidhi-2168

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

தீமைகளைத் தடுக்காவிட்டால் (அல்லாஹ்வின்) தண்டனை இறங்கிவிடும் என்பது குறித்து வந்துள்ளவை.

2168. அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறுவதாவது:

மக்களே நீங்கள் இந்த வசனத்தை ஓதுகிறீர்கள்.

நம்பிக்கை கொண்டோரே! உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்! நீங்கள் நேர் வழி நடக்கும் போது வழி கெட்டவனால் உங்களுக்கு எந்தத் தீங்கும் தர முடியாது. நீங்கள் அனைவரும் மீள்வது அல்லாஹ்விடமே. நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் உங்களுக்கு (அப்போது) அறிவிப்பான். (அல்குர்ஆன்: 5:105)

(இதைப் படிக்கும் போது நாம் நல்லவர்களாக வாழ்ந்தாலே போதுமானது என்று நீங்கள் நினைக்கலாம்) ஆனால் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன்.

மக்கள் அநியாயக்காரனைக் காணும் போது அவனது கைகளை அவர்கள் பிடிக்கா விட்டால் (அதாவது தீமையைத் தடுக்கா விட்டால்) அவர்கள் அனைவருக்கும் தனது தண்டனையை அல்லாஹ் பொதுவாக்கி விடும் நிலை விரைவில் ஏற்பட்டுவிடும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: கைஸ் பின் அபூஹாஸிம் (ரஹ்)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப்பொருள் தொடர்பான செய்தி ஆயிஷா (ரலி), உம்மு ஸலமா (ரலி), நுஃமான்

أَيُّهَا النَّاسُ، إِنَّكُمْ تَقْرَءُونَ هَذِهِ الآيَةَ: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا عَلَيْكُمْ أَنْفُسَكُمْ لَا يَضُرُّكُمْ مَنْ ضَلَّ إِذَا اهْتَدَيْتُمْ} [المائدة: 105]، وَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ النَّاسَ إِذَا رَأَوْا الظَّالِمَ فَلَمْ يَأْخُذُوا عَلَى يَدَيْهِ أَوْشَكَ أَنْ يَعُمَّهُمُ اللَّهُ بِعِقَابٍ مِنْهُ»

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، نَحْوَهُ.


Tirmidhi-3058

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

3058. அபூஉமைய்யா அஷ்ஷஃபானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அபூஸஃலபா (ரலி) அவர்களிடம் சென்று, (அபூஸஃலபா அவர்களே!) இந்த குர்ஆன் வசனத்தை பற்றி உங்கள் விளக்கம் என்ன? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “எந்த வசனம்? என்று கேட்டார்கள். நான், “நம்பிக்கை கொண்டோரே! உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்! நீங்கள் நேர்வழி நடக்கும்போது வழிகெட்டவனால் உங்களுக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியாது” என்ற (அல்குர்ஆன் 5:105) வசனத்தை ஓதிக் காட்டினேன்.

அதற்கவர்கள், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! இதைப்பற்றி நன்கு அறிந்தவரிடமே நீ கேட்டுள்ளாய்! இதைப் பற்றி நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (முன்பே) விளக்கம் கேட்டுள்ளேன்” என்று கூறிவிட்டு பின்வருமாறு கூறினார்கள்:

இதைப்பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது:

நீங்கள் நன்மையை ஏவிக்கொண்டே இருங்கள். தீமையைத் தடுத்துக்கொண்டே இருங்கள். மக்களிடம் கஞ்சத்தனம் கடைப்பிடிக்கப்படுவதையும், மனோஇச்சைக்கு கட்டுப்படுவதையும், உலக விசயத்திற்கே முன்னுரிமை அளிக்கப்படுவதையும், ஒவ்வொருவரும் தன் கருத்தே சரியானது என பெருமையடிப்பதையும் நீ கண்டால் மக்களை விட்டுவிடு! உன்னை சரிப்படுத்திக்கொள்.

உங்களுக்கு பின் ஒரு காலம் வரவிருக்கின்றது. அப்போது (சிரமம் ஏற்படும் போது) மார்க்கத்தில் பொறுமையாக

أَتَيْتُ أَبَا ثَعْلَبَةَ الخُشَنِيَّ، فَقُلْتُ لَهُ: كَيْفَ تَصْنَعُ بِهَذِهِ الآيَةِ؟ قَالَ: أَيَّةُ آيَةٍ؟ قُلْتُ: قَوْلُهُ تَعَالَى: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا عَلَيْكُمْ أَنْفُسَكُمْ لَا يَضُرُّكُمْ مَنْ ضَلَّ إِذَا اهْتَدَيْتُمْ} [المائدة: 105] قَالَ: أَمَا وَاللَّهِ لَقَدْ سَأَلْتَ عَنْهَا خَبِيرًا، سَأَلْتُ عَنْهَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «بَلْ ائْتَمِرُوا بِالمَعْرُوفِ وَتَنَاهَوْا عَنِ المُنْكَرِ، حَتَّى إِذَا رَأَيْتَ شُحًّا مُطَاعًا، وَهَوًى مُتَّبَعًا، وَدُنْيَا مُؤْثَرَةً، وَإِعْجَابَ كُلِّ ذِي رَأْيٍ بِرَأْيِهِ، فَعَلَيْكَ بِخَاصَّةِ نَفْسِكَ وَدَعِ العَوَامَّ، فَإِنَّ مِنْ وَرَائِكُمْ أَيَّامًا الصَّبْرُ فِيهِنَّ مِثْلُ القَبْضِ عَلَى الجَمْرِ، لِلْعَامِلِ فِيهِنَّ مِثْلُ أَجْرِ خَمْسِينَ رَجُلًا يَعْمَلُونَ مِثْلَ عَمَلِكُمْ»

قَالَ عَبْدُ اللَّهِ بْنُ المُبَارَكِ: وَزَادَنِي غَيْرُ عُتْبَةَ – قِيلَ: يَا رَسُولَ اللَّهِ أَجْرُ خَمْسِينَ رَجُلًا مِنَّا أَوْ مِنْهُمْ. قَالَ: «بَلْ أَجْرُ خَمْسِينَ رَجُلًا مِنْكُمْ»


Tirmidhi-2260

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2260. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மக்களிடம் ஒரு காலம் வரும். அப்போது அவர்களில் தன் மார்க்கத்தில் (சிரமத்தின்போது) பொறுமையாக இருப்பவர் தன் கையில் நெருப்புக் கங்கை பிடித்திருப்பவர் போன்று இருப்பார்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


«يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ الصَّابِرُ فِيهِمْ عَلَى دِينِهِ كَالقَابِضِ عَلَى الجَمْرِ»


Tirmidhi-2206

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2206. நாங்கள் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் சென்று (ஆளுநர்) ஹஜ்ஜாஜ் மூலம் நாங்கள் அனுபவித்துவரும் கொடுமைகள் குறித்து முறையிட்டோம். அதற்கு அவர்கள், ‘நீங்கள் உங்களுடைய இறைவனைச் சந்திக்கும் வரை பொறுமையோடு இருங்கள். ஏனெனில், உங்களிடம் ஒரு காலம் வந்தால், அதற்குப் பின்வரும் காலம் அதைவிட மோசமானதாகவே இருக்கும்’ என்று கூறிவிட்டு, ‘இதை நான் உங்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன்’ என்றார்கள்.

அறிவிப்பவர்: ஸுபைர் பின் அதீ (ரஹ்)


دَخَلْنَا عَلَى أَنَسِ بْنِ مَالِكٍ فَشَكَوْنَا إِلَيْهِ مَا نَلْقَى مِنَ الحَجَّاجِ، فَقَالَ: «مَا مِنْ عَامٍ إِلَّا وَالَّذِي بَعْدَهُ شَرٌّ مِنْهُ حَتَّى تَلْقَوْا رَبَّكُمْ»، سَمِعْتُ هَذَا مِنْ نَبِيِّكُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ


Tirmidhi-246

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

(தொழுகையில்) அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்’ என்று  ஓதுதலை ஆரம்பித்தல்.

246.  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோரும் ‘அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்’ என்றே தொழுகையைத் துவக்குபவர்களாக இருந்தனர்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَبُو بَكْرٍ، وَعُمَرُ، وَعُثْمَانُ، يَفْتَتِحُونَ القِرَاءَةَ بِالحَمْدُ لِلَّهِ رَبِّ العَالَمِينَ»


Next Page » « Previous Page