Category: திர்மிதீ

Tirmidhi-26

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

26. ஹதீஸ் எண்-25 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது.



Tirmidhi-25

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

உளூச் செய்யும்போது பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் பெயரால் என்று) கூறுதல்

25. அல்லாஹ்வின் பெயர் கூறி உளூச் செய்யாதவருக்கு உளூ இல்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: ஸயீத் பின் ஸைத் (ரலி)

 

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

………


«لَا وُضُوءَ لِمَنْ لَمْ يَذْكُرْ اسْمَ اللَّهِ عَلَيْهِ»


Tirmidhi-2640

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

இந்த (முஸ்லிம்) சமுதாயத்தின் பிரிவினை.

2640. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யூதர்கள் எழுபத்தி ஒன்று அல்லது எழுபத்தி இரண்டு கூட்டமாக பிரிந்தனர். கிருத்தவர்களும் அவ்வாறே பிரிந்தனர். என்னுடைய சமுதாயம் எழுபத்தி மூன்று கூட்டமாக பிரிவார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«تَفَرَّقَتِ اليَهُودُ عَلَى إِحْدَى وَسَبْعِينَ أَوْ اثْنَتَيْنِ وَسَبْعِينَ فِرْقَةً، وَالنَّصَارَى مِثْلَ ذَلِكَ، وَتَفْتَرِقُ أُمَّتِي عَلَى ثَلَاثٍ وَسَبْعِينَ فِرْقَةً»


Tirmidhi-1899

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

பெற்றோரின் திருப்தி…

1899. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தந்தையின் திருப்தியில் இறைவனின் திருப்தி உள்ளது. தந்தையின் அதிருப்தியில் இறைவனின் அதிருப்தி உள்ளது.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

 


«رِضَى الرَّبِّ فِي رِضَى الوَالِدِ، وَسَخَطُ الرَّبِّ فِي سَخَطِ الْوَالِدِ»

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ يَعْلَى بْنِ عَطَاءٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، نَحْوَهُ،

وَلَمْ يَرْفَعْهُ وَهَذَا أَصَحُّ،


Tirmidhi-2641

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

2641. பனூ இஸ்ரவேலர்களுக்கு ஏற்பட்ட அதே நிலை சரிக்கு சமமாக எனது சமுதாயத்திற்கும் ஏற்படும். எந்தளவுக்கென்றால், அவர்களில் சிலர் தன் தாயிடம் பகிரங்கமாக (தவறான எண்ணத்தில்) வந்ததைப் போன்று என் சமுதாயத்திலும் அவ்வாறு செய்பவர்கள் தோன்றுவர்.

பனூ இஸ்ரவேலர்கள் எழுபத்திரண்டு மார்க்கமுடையவர்களாக பிரிந்தனர். எனது சமுதாயத்தினர் எழுபத்தி மூன்று மார்க்கமுடையவர்களாக பிரிவர். அனைவரும் நரகம் செல்வர். ஒரு கூட்டத்தைத் தவிர என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது மக்கள் அவர்கள் யார் அல்லாஹ்வின் தூதரே! என்று கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நானும் எனது தோழர்களும் எதில் இருக்கிறோமோ அதில் இருப்பவர்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«لَيَأْتِيَنَّ عَلَى أُمَّتِي مَا أَتَى عَلَى بني إسرائيل حَذْوَ النَّعْلِ بِالنَّعْلِ، حَتَّى إِنْ كَانَ مِنْهُمْ مَنْ أَتَى أُمَّهُ عَلَانِيَةً لَكَانَ فِي أُمَّتِي مَنْ يَصْنَعُ ذَلِكَ، وَإِنَّ بني إسرائيل تَفَرَّقَتْ عَلَى ثِنْتَيْنِ وَسَبْعِينَ مِلَّةً، وَتَفْتَرِقُ أُمَّتِي عَلَى ثَلَاثٍ وَسَبْعِينَ مِلَّةً، كُلُّهُمْ فِي النَّارِ إِلَّا مِلَّةً وَاحِدَةً»، قَالُوا: وَمَنْ هِيَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «مَا أَنَا عَلَيْهِ وَأَصْحَابِي»


Tirmidhi-2045

ஹதீஸின் தரம்: More Info

2045. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், கேடுவிளைவிக்கின்றதை வைத்து நோய்க்கு மருத்துவம் பார்ப்பதை தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

 

அறிவிப்பாளர்களில் ஒருவர் ஃகபீஸ்(கேடுவிளைவிப்பது) என்ற வார்த்தைக்கு விஷம் என்று விளக்கம் கூறியுள்ளார்


«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الدَّوَاءِ الخَبِيثِ»

يَعْنِي السُّمَّ


Tirmidhi-247

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

247.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘திருக்குர்ஆனின் தோற்றுவாயை (அல்ஹம்து சூராவை) ஓதாதவருக்குத் தொழுகை கூடாது.

அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி)


«لَا صَلَاةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِفَاتِحَةِ الكِتَابِ»


Tirmidhi-311

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

இமாமுக்கு பின்னால் (பின்பற்றித்தொழுபவர்) ஓதுதல்.

311. உபாதா பின் ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுபுஹ் தொழுகையை நடத்தினார்கள். கிராஅத் ஓதுவது அவர்களுக்கு சிரமமாகி விட்டது. அவர்கள் தொழுகையை முடித்ததும் “நீங்கள் உங்களுடைய இமாமிற்கு பின்னால் ஓதுகிறவர்களாக நான் காண்கிறேனே!” என்று கேட்டார்கள்.

“அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! ஆம் (நாங்கள் ஓதுகிறோம்)“ என்று நாங்கள் கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அவ்வாறு செய்யாதீர்கள். என்றாலும் உம்முல் குர்ஆன் (அல்ஹம்து சூராவை மட்டும் ஓதிக் கொள்ளுங்கள்). ஏனென்றால் யார் அதை ஓதவில்லையோ அவருக்குத் தொழுகை இல்லை“ என்று கூறினார்கள்.


صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الصُّبْحَ، فَثَقُلَتْ عَلَيْهِ القِرَاءَةُ، فَلَمَّا انْصَرَفَ قَالَ: «إِنِّي أَرَاكُمْ تَقْرَءُونَ وَرَاءَ إِمَامِكُمْ»، قَالَ: قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، إِي وَاللَّهِ، قَالَ: «لَا تَفْعَلُوا إِلَّا بِأُمِّ القُرْآنِ، فَإِنَّهُ لَا صَلَاةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِهَا»،


Tirmidhi-573

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

இதஸ்மாஉன் ஷக்கத், இக்ரஃ பிஸ்மி ரப்பிக்க போன்ற அத்தியாயங்களில் இடம்பெரும் வசனங்களை ஓதும் போது ஸஜ்தா செய்தல்.

573. நாங்கள் “இதஸ்மாஉன் ஷக்கத்” (84), “இக்ரஃ பிஸ்மி ரப்பிக்க” (96) ஆகிய அத்தியாயங்களை ஓதி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சஜ்தாச் செய்தோம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«سَجَدْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي اقْرَأْ بِاسْمِ رَبِّكَ، وَإِذَا السَّمَاءُ انْشَقَّتْ»


Next Page » « Previous Page