Category: திர்மிதீ

Tirmidhi-2661

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2661.


«مَنْ كَذَبَ عَلَيَّ – حَسِبْتُ أَنَّهُ قَالَ – مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ بَيْتَهُ مِنَ النَّارِ»


Tirmidhi-2656

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

பாடம்:

செவியுற்றதைப் பிறருக்கு எடுத்துரைக்குமாறு தூண்டும் விதமாக வந்துள்ளவை.

2656. அபான் பின் உஸ்மான் பின் அஃப்பான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் (உமய்யா ஆட்சியாளர்) மர்வான் பின் அல்ஹகம் (ரஹ்) அவர்களிடமிருந்து நண்பகல் நேரத்தில் புறப்பட்டு வந்தார்கள். (இதைக் கண்ட) நாங்கள் ‘ஸைத் பின் ஸாபித் அவர்களிடம் ஏதோ ஒன்றைப் பற்றிக் கேட்பதற்காகத்தான் அவரைத் தம்மிடம் அழைத்து வருமாறு மர்வான் அவர்கள் ஆளனுப்பியிருக்க வேண்டும்’ என்று கூறிவிட்டு, நாங்கள் எழுந்து சென்று ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களிடமே அதைப் பற்றிக் கேட்டோம்.

அப்போது ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

ஆம். நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்ற பல செய்திகளைப் பற்றி மர்வான் எம்மிடம் கேட்டார்.

“நம்மிடமிருந்து ஒரு செய்தியைச் செவியேற்று, அதை நினைவிலிருத்தி அதைப் பிறருக்கு எடுத்துரைக்கும் மனிதருக்கு அல்லாஹ் செழிப்பான வாழ்வை வழங்குவானாக!. ஏனெனில் (என்னிடமிருந்து) மார்க்க அறிவை சுமந்துள்ள எத்தனையோ பேர், தம்மை விட அதிக விளக்கமுடைவர்களிடம் அதைச் சேர்த்து வைக்கக்கூடும். மார்க்க அறிவை சுமந்துள்ள எத்தனையோ பேர் மார்க்க சட்ட அறிஞர் அல்லர்” என்று அல்லாஹ்வின்

خَرَجَ زَيْدُ بْنُ ثَابِتٍ، مِنْ عِنْدِ مَرْوَانَ نِصْفَ النَّهَارِ، قُلْنَا: مَا بَعَثَ إِلَيْهِ هَذِهِ السَّاعَةَ إِلَّا لِشَيْءٍ يَسْأَلُهُ عَنْهُ، فَقُمْنَا فَسَأَلْنَاهُ، فَقَالَ: نَعَمْ، سَأَلَنَا عَنْ أَشْيَاءَ سَمِعْنَاهَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «نَضَّرَ اللَّهُ امْرَأً سَمِعَ مِنَّا حَدِيثًا فَحَفِظَهُ حَتَّى يُبَلِّغَهُ غَيْرَهُ، فَرُبَّ حَامِلِ فِقْهٍ إِلَى مَنْ هُوَ أَفْقَهُ مِنْهُ، وَرُبَّ حَامِلِ فِقْهٍ لَيْسَ بِفَقِيهٍ»


Tirmidhi-2658

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2658. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நம்மிடமிருந்து ஒரு செய்தியைச் செவியேற்று, தான் செவியேற்றதைப் போன்றே மற்றவர்களுக்கு எடுத்துரைக்கும் மனிதருக்கு அல்லாஹ் அருள்புரிவானாக! செவியேற்பவரை விட அறிவிக்கப்படுபவர் (இந்த இறைச் செய்தியை) நன்கு புரிந்து கொள்பவராயிருக்கலாம்…

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)


«نَضَّرَ اللَّهُ امْرَأً سَمِعَ مَقَالَتِي فَوَعَاهَا وَحَفِظَهَا وَبَلَّغَهَا، فَرُبَّ حَامِلِ فِقْهٍ إِلَى مَنْ هُوَ أَفْقَهُ مِنْهُ»

ثَلَاثٌ لَا يُغِلُّ عَلَيْهِنَّ قَلْبُ مُسْلِمٍ: إِخْلَاصُ العَمَلِ لِلَّهِ، وَمُنَاصَحَةُ أَئِمَّةِ المُسْلِمِينَ، وَلُزُومُ جَمَاعَتِهِمْ، فَإِنَّ الدَّعْوَةَ تُحِيطُ مِنْ وَرَائِهِمْ


Tirmidhi-2657

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

2657. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நம்மிடமிருந்து ஒரு செய்தியைச் செவியேற்று, தான் செவியேற்றதைப் போன்றே மற்றவர்களுக்கு எடுத்துரைக்கும் மனிதருக்கு அல்லாஹ் அருள்புரிவானாக! செவியேற்பவரை விட அறிவிக்கப்படுபவர் (இந்த இறைச் செய்தியை) நன்கு புரிந்து கொள்பவராயிருக்கலாம்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)


«نَضَّرَ اللَّهُ امْرَأً سَمِعَ مِنَّا شَيْئًا فَبَلَّغَهُ كَمَا سَمِعَ، فَرُبَّ مُبَلِّغٍ أَوْعَى مِنْ سَامِعٍ»


Tirmidhi-2460

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

2460. அபூஸயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்கள் தொழும் இடத்திற்கு வந்தார்கள். அங்கே மக்கள் சிலர் சிரித்துக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். அப்போது அவர்கள், “மகிழ்ச்சிகளைப் போக்கும் மரணத்தை நீங்கள் அதிகமாக நினைத்திருந்தால், நீங்கள் இப்படி இருப்பதை விட்டும் அது உங்களைத் திசைதிருப்பி இருக்கும். எனவே, மகிழ்ச்சிகளைப் போக்கும் மரணத்தை நீங்கள் அதிகமாக நினையுங்கள்.

ஒவ்வொரு நாளும் மண்ணறை, நான் தான் அந்நியர்களின் வீடு! நான் தான் தனிமையின் வீடு! நான் தான் புழுதியின் வீடு! நான் தான் புழுக்களின் வீடு! என்று சொல்லிக் கொண்டிருக்கிறது.

ஒரு இறைநம்பிக்கையாளர் இறந்த உடன் உங்கள் வரவு நல்வரவு ஆகட்டும்! என் மீது நடமாடியவர்களில் நீங்கள் தான் எனக்கு விருப்பமானவர்கள்; நான் இன்றைய தினம் உங்கள் மீது பொறுப்பு அமர்தப்பட்டுள்ளேன்; நீங்கள் இங்கு வந்து விட்டீர்கள்; நான் எவ்வாறு உங்களை நடத்தப்போகிறேன் என்பதை பாருங்கள்! என்று மண்ணறை சொல்லும். பிறகு அது கண்கள் பார்க்கக்கூடிய அளவுக்கு விரிவாக்கப்படும். சொர்க்கத்தின் ஒரு வாசல் அவருக்காக திறக்கப்படும்.

ஆனால் ஒரு பாவி அல்லது இறைநிராகரிப்பாளன் இறந்த உடன், உமக்கு எந்த வரவேற்பும் இல்லை; என் மீது நடமாடியவர்களில் நீ தான் மிகவும் வெறுப்புக்குரியவன்!

دَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُصَلَّاهُ فَرَأَى نَاسًا كَأَنَّهُمْ يَكْتَشِرُونَ قَالَ: ” أَمَا إِنَّكُمْ لَوْ أَكْثَرْتُمْ ذِكْرَ هَاذِمِ اللَّذَّاتِ لَشَغَلَكُمْ عَمَّا أَرَى، فَأَكْثِرُوا مِنْ ذِكْرِ هَاذِمِ اللَّذَّاتِ المَوْتِ، فَإِنَّهُ لَمْ يَأْتِ عَلَى القَبْرِ يَوْمٌ إِلَّا تَكَلَّمَ فِيهِ فَيَقُولُ: أَنَا بَيْتُ الغُرْبَةِ وَأَنَا بَيْتُ الوَحْدَةِ، وَأَنَا بَيْتُ التُّرَابِ، وَأَنَا بَيْتُ الدُّودِ، فَإِذَا دُفِنَ العَبْدُ المُؤْمِنُ قَالَ لَهُ القَبْرُ: مَرْحَبًا وَأَهْلًا أَمَا إِنْ كُنْتَ لَأَحَبَّ مَنْ يَمْشِي عَلَى ظَهْرِي إِلَيَّ، فَإِذْ وُلِّيتُكَ اليَوْمَ وَصِرْتَ إِلَيَّ فَسَتَرَى صَنِيعِيَ بِكَ ” قَالَ: ” فَيَتَّسِعُ لَهُ مَدَّ بَصَرِهِ وَيُفْتَحُ لَهُ بَابٌ إِلَى الجَنَّةِ. وَإِذَا دُفِنَ العَبْدُ الفَاجِرُ أَوِ الكَافِرُ قَالَ لَهُ القَبْرُ: لَا مَرْحَبًا وَلَا أَهْلًا أَمَا إِنْ كُنْتَ لَأَبْغَضَ مَنْ يَمْشِي عَلَى ظَهْرِي إِلَيَّ، فَإِذْ وُلِّيتُكَ اليَوْمَ وَصِرْتَ إِلَيَّ فَسَتَرَى صَنِيعِيَ بِكَ ” قَالَ: «فَيَلْتَئِمُ عَلَيْهِ حَتَّى تَلْتَقِيَ عَلَيْهِ وَتَخْتَلِفَ أَضْلَاعُهُ»، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: بِأَصَابِعِهِ، فَأَدْخَلَ بَعْضَهَا فِي جَوْفِ بَعْضٍ قَالَ: «وَيُقَيِّضُ اللَّهُ لَهُ سَبْعِينَ تِنِّينًا لَوْ أَنْ وَاحِدًا مِنْهَا نَفَخَ فِي الأَرْضِ مَا أَنْبَتَتْ شَيْئًا مَا بَقِيَتِ الدُّنْيَا فَيَنْهَشْنَهُ وَيَخْدِشْنَهُ حَتَّى يُفْضَى بِهِ إِلَى الْحِسَابِ»

قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا القَبْرُ رَوْضَةٌ مِنْ رِيَاضِ الجَنَّةِ أَوْ حُفْرَةٌ مِنْ حُفَرِ النَّارِ»


Tirmidhi-2307

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

மரணத்தை நினைவு கூறுவது தொடர்பாக  வந்துள்ளவை.

2307. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இன்பங்களை தகர்க்கக் கூடிய (மரணத்)தை அதிகமாக நினைவு கூறுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி)

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவர் இன்பங்களை தகர்க்கக் கூடியது) மரணம் என்று கூறினார்.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப்பொருள் தொடர்பான செய்தி அபூஸயீத் (ரலி) அவர்கள் வழியாகவும் வந்துள்ளது. 

மேற்கண்ட செய்தி “ஹஸன் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.


«أَكْثِرُوا ذِكْرَ هَاذِمِ اللَّذَّاتِ» يَعْنِي الْمَوْتَ


Tirmidhi-209

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

209. பாங்குக்காக கூலி எதுவும் பெறாத முஅத்தினை ஏற்படுத்துவீராக என்பதே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் எடுத்துக் கொண்ட உடன்படிக்கையில் இறுதியானதாகும்.

அறிவிப்பவர்: உஸ்மான் பின் அபில் ஆஸ் (ரலி)


إِنَّ مِنْ آخِرِ مَا عَهِدَ إِلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنْ «اتَّخِذْ مُؤَذِّنًا لَا يَأْخُذُ عَلَى أَذَانِهِ أَجْرًا»


Tirmidhi-2408

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2408.


«مَنْ يَتَوَكَّلْ لِي مَا بَيْنَ لَحْيَيْهِ وَمَا بَيْنَ رِجْلَيْهِ أَتَوَكَّلْ لَهُ بِالْجَنَّةِ»


Tirmidhi-81

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

81.


سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الوُضُوءِ مِنْ لُحُومِ الإِبِلِ؟ فَقَالَ: «تَوَضَّئُوا مِنْهَا»، وَسُئِلَ عَنِ الوُضُوءِ مِنْ لُحُومِ الغَنَمِ؟ فَقَالَ: «لَا تَتَوَضَّئُوا مِنْهَا»


Next Page » « Previous Page