தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-670

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

ஒரு பெண், தன் கணவனின் பொருளை செலவிடுதல்.

670. எந்த ஒரு பெண்ணும் தன்னுடைய கணவனின் அனுமதியின்றி தன்னுடைய கணவனின்  வீட்டிலிருந்து எதையும் செலவு செய்யக்கூடாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜுடைய ஆண்டில் தன்னுடைய உரையில் கூறியதை நான் செவியேற்றேன்.

அப்போது “அல்லாஹ்வின் தூதரே! உணவையும் வழங்கக் கூடாதா?” என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், “அது தான் நம்முடைய செல்வங்களில் மிகச் சிறப்பானதாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: (ரலி)

அபூஉமாமா அல்பாஹிலீ (ரலி)

அபூஉமாமா-அல்பாஹிலீ (ரலி) – Abu Umama al-Bahili

இறப்பு: ஹிஜ்ரி 86, ஹிம்ஸ்

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: சுதை பின் அஜ்லான் பின் வஹ்ப்

தந்தை பெயர்: அஜ்லான் பின் வஹ்ப்

வம்சம்: அல்பாஹிலீ

புனைப்பெயர்: அபூஉமாமா

பயணித்த ஊர்கள்: மதீனா, எகிப்து, ஹிம்ஸ், ஷாம்

பிறப்பு: ஹிஜாஸ்

இறப்பு: ஹிஜ்ரி 86, ஹிம்ஸ்

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

அபூஉமாமா ரலி அவர்களின் இயற்பெயர் சுதை பின் அஜ்லான் பின் வஹ்ப் ஆகும். இவர் ஒரு நபித்தோழர். இவர் ஹிஜாஸில் பிறந்தார்.

மதீனா, எகிப்து, ஹிம்ஸ், ஷாம் ஆகிய இடங்களில் வசித்தார். இவர் ஹிஜ்ரி 86 ஆம் ஆண்டு ஹிம்ஸில் காலமானார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்), உமர் பின் கத்தாப் (ரலி), உஸ்மான் பின் அஃப்பான் (ரலி), அலீ பின் அபீ தாலிப் (ரலி), அபூ உபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி), உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி), அம்ர் பின் அப்சா அஸ்ஸலமீ (ரலி)

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): சுலைமான் பின் ஹபீப் அல்மஹாரபீ, ஷத்தாத் பின் அப்துல்லாஹ், முஹம்மத் பின் ஸியாத் அல்அல்ஹானீ, மம்தூர் அஸ்வத் அபூஸல்லாம், மக்ஹூல் அஷ்ஷாமீ, ஷஹ்ர் பின் ஹவ்ஷப் அல்அஷ்அரீ, காஸிம் பின் அப்துர்ரப், ரஜா பின் ஹய்வா, ஸல்ம் பின் அபில் ஜஃத், காலித் பின் மஃதான், அபூ ஃகாலிப் அர்ராஸிபீ, சுலைம் பின் ஆமிர் அல்குலாஈ

வேறு பெயர்கள்: அபூ இமாமா


ஆதாரம்: muslimscholars.info (4048) · Should verify


بَابٌ فِي نَفَقَةِ المَرْأَةِ مِنْ بَيْتِ زَوْجِهَا

حَدَّثَنَا هَنَّادٌ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ قَالَ: حَدَّثَنَا شُرَحْبِيلُ بْنُ مُسْلِمٍ الخَوْلَانِيُّ، عَنْ أَبِي أُمَامَةَ البَاهِلِيِّ قَالَ:

سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي خُطْبَتِهِ عَامَ حَجَّةِ الوَدَاعِ يَقُولُ: «لَا تُنْفِقُ امْرَأَةٌ شَيْئًا مِنْ بَيْتِ زَوْجِهَا إِلَّا بِإِذْنِ زَوْجِهَا»، قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، وَلَا الطَّعَامُ، قَالَ: «ذَاكَ أَفْضَلُ أَمْوَالِنَا»

وَفِي البَابِ عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، وَأَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ، وَأَبِي هُرَيْرَةَ، وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، وَعَائِشَةَ.: «حَدِيثُ أَبِي أُمَامَةَ حَدِيثٌ حَسَنٌ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-606.
Tirmidhi-Shamila-670.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-606.



 

 

 

 


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-19124-ஷுரஹ்பீல் பின் முஸ்லிம் பற்றி இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள் மட்டும் பலவீனமானவர் எனக் கூறியுள்ளார். அதற்கான காரணத்தைக் கூறவில்லை.
  • இப்னு ஹஸ்ம்  அவர்கள், இவர் அறியப்படாதவர் என்றும் , இஸ்மாயீல் பின் அய்யாஷ் பலவீனமானவர் என்றும் கூறியுள்ளார். இப்னு ஹஸ்மின் கூற்று தவறு என இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் குறிப்பிட்டுள்ளார். (நூல்: அத்தல்கீஸ் 3/105)
  • அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    இஜ்லீ,பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    யஃகூப் பின் ஸுஃப்யான் பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 83
    போன்றோர் இவரை பலமானவர் என்றே கூறியுள்ளனர்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் இவர் நம்பகமானவர் என்றாலும் இவரிடம் சிறிது பலவீனம் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். (நூல்கள்: தஹ்தீபுத் தஹ்தீப்-, அல்காஷிஃப், தக்ரீபுத் தஹ்தீப்-)

  • மேலும் இதில் வரும் ராவீ-7845-இஸ்மாயீல் பின் அய்யாஷ் ஷாம் வாசிகள் வழியாக அறிவித்தால் மட்டுமே சரியானது. மற்றவர்கள் வழியாக அறிவித்தால் பலவீனமானது என்ற சட்டத்தின் பிரகாரம் ஷுரஹ்பீல் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    ஷாம் வாசி என்பதால் அறிவிப்பாளர்தொடரில் குறையில்லை….

2 . இந்தக் கருத்தில் அபூஉமாமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • இஸ்மாயீல் பின் அய்யாஷ் —> ஷுரஹ்பீல் —> அபூஉமாமா (ரலி)

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-16621, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-22085, இப்னு மாஜா-2295, திர்மிதீ-670, அல்முஃஜமுல் கபீர்-7615, குப்ரா பைஹகீ-7856,

… அஹ்மத்-22294, அபூதாவூத்-3565, …


மேலும் பார்க்க: அபூதாவூத்-3546.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.